ஒரு முறை பக்கத்து கொல்லையில் முள்ளங்கி திருடும் போது கையும் களவுமாக மாட்டிக்கொண்டார் முல்லா .
விசாரணைக்கு வந்த முல்லாவிடம் நீதிபதி கேட்டார் “பக்கத்து கொல்லைக்கு எதற்காக சென்றாய் …?”
முல்லா சொன்னார் “காற்று என்னை அங்கே கொண்டு போய் தள்ளி விட்டது ..”நீதிபதி “உன் கையில் முள்ளங்கி வந்தது எப்படி …?”
முல்லா “மேலும் காற்றில் பறக்காமலிருக்க முள்ளங்கி யை பிடித்து க்கொண்டேன் ”
நீதிபதி “அப்படியானால் சாக்குப்பை உன்னிடம் வந்தது எப்படி .?”
முல்லா “அது தான் எப்படி என்று எனக்கே தெரியவில்லை ”
என்றார்