காவியுடை அணிந்திருப்பார் விவேகானந்தர்!
கட்டான உடலழகர் விவேகானந்தர்!
.
நாவினிய சொல் படைத்தார் விவேகானந்தர்!
நல்ல மனம் கொண்டவராம் விவேகானந்தர்!
.
இந்துக்களின் பெருமை சொன்ன விவேகானந்தர்!
இந்தியாவைச் சுற்றியவர் விவேகானந்தர்!
.
குரு பெயரால் மடம் அமைத்தார் விவேகானந்தர்!
குன்றாத மணிவிளக்கு விவேகானந்தர்!
.
நேரான பார்வை கொண்ட விவேகானந்தர்!
நேசித்தார் அனைவரையும் விவேகானந்தர்!
.
வீரத்தை வேண்டியவர் விவேகானந்தர்!
விழிகளிலே அருள் மிளிரும் விவேகானந்தர்!
.
சிறப்பான செயல் புரிந்தார் விவேகானந்தர்!
சிறுமை கண்டு பொங்கியவர் விவேகானந்தர்!
.
பாரதத்தின் தவப்புதல்வன் விவேகானந்தர்!
பண்பாட்டின் மறு உருவம் விவேகானந்தர்!
.
காவியுடை அணிந்திருப்பார் விவேகானந்தர்!
கடவுளுக்குப் பிரியமான விவேகானந்தர்!