மூல நோய்

மூல நோய்

மூல நோய் 
ஆசன வாயில் உள்ள மலக்குடலில் ஏற்படும் வீக்கம் மூலம் எனப்படும்,

ஆசன வாயில் எரிச்சல், அரிப்பு, நமச்சல், வலி, ஆகிய அறிகுறி தென்படும்.

மலமானது இறுகி சாதாரணமாக வெளியேற முடியாமல் அதனை முக்கி வெளியேற்ற முயலும் போது மலத்துடன் குருதியும் வெளிவரும். இதுவே மூலநோயின் அறிகுறிகள்.

மூலத்தின் வகைகள்
யூகி முனிவர் சொல்படி பார்த்தால் 21 வகையான மூல பாதிப்புகள் இருப்பதாக தெரிய வருகிறது. அவற்றில் நீர்முளை,  செண்டு முளை, எருவாய் முளை, சிறுமுளை, வறன் முளை, குருதி முளை, சீழ்முளை, ஆதி முளை, தமரக முளை,  மழி முளை, கழல் முளை, ஐய முளை,  முக்குற்றமுளை,  வினை முளை,  மேக முளை,  குதமுளை  என்பவை  குறிப்பிட்ட சில  மூல வகைகள் ஆகும்.
மூல நோயின் அறிகுறி,
  • மலம் இறுகி எளிதில் வெளியேறாது,
  • அடிக்கடி சிறுகச் சிறுக வயிறு. மற்றும் ஆசன வாயில் வலி, எரிச்சலுடன் மலம் கழித்தல்.
  • மலத்துடன் இரத்தம் வெளியேறுதல்.
  • மூல சதை வெளித்தள்ளுதல்.
  • மலம் கழித்த பின்பு ஆசனவாயில் தாங்க முடியாத எரிச்சல் மற்றும்
    வலி குறைந்தது ஒரு மணி நேரம் கூட நீடிக்கலாம்.
  • ஆசன வாயில் கட்டை போட்டு அடைத்தது போன்ற உணர்வு.
  • காற்று வெளியேறாமை,
  • வயிறு இரைதல், ,
  • பசியின்மை,
  • உண்ட உணவு செரிமானமின்மை,
  • புளித்த ஏப்பம்,
  • நீர் பானமாக ஏதாவது அருந்திக் கொண்டே இருக்க வேண்டும் என்கின்ற விருப்பம், 
    உடல் மெலிந்து கொண்டே வருதல்,போன்றவை எல்லாம் மூல நோயின் அறிகுறிகளாகும்.

 

மூலநோய் காரணம்
  • கார உணவுகளை அதிகம் சாப்பிடுபவர்கள். குறிப்பாக உணவில் அதிக அளவில் மிளகு, மிளகாய், இஞ்சி போன்ற மசாலா வகைகளை அதிகம் சேர்த்துக் கொள்கிறவர்களுக்கு எல்லாம் மூல பாதிப்பானது வருவதற்கு வாய்ப்புள்ளது.
  • எப்பொழுதும் உட்கார்ந்த நிலையிலேயே பணிபுரிபவர்களுக்கு வரலாம்,
  • உடல் பருமனானவர்களுக்கு வரலாம்,
  • உஷ்ணமான உணவுகள், அசைவ உணவுவகைகள், அதிகம் சாப்பிடுபவர்களுக்கும் மூல நோய் வரலாம்.
  • சில பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் மட்டும் மூல நோய் ஏற்படலாம். ஆனால் கர்ப்பக் கால மூலநோயானது பிரசவத்திற்கு பின்னர் பெரும்பாலும் தானாகவே குணமாகிவிடும். சில பெண்களுக்கு மட்டும் இதன் பாதிப்பு தொடர்ந்து இருக்கும்.
  • மது அதிகம் அருந்துதல், புகைபழக்கம், நேரத்திற்கு சாப்பிடும் பழக்கம் இல்லாதவர்களுக்கும் மூல நோய் வரலாம்.
  • உடம்பிற்கு போதுமான அளவில் தண்ணீர் அருந்தும் பழக்கமற்றவர்கள்.
  • கார்போஹைடிரேட் அதிகம் உள்ள உணவினை மட்டும் தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்கள்.
  • நார்சத்து உள்ள காய்கள், பழங்கள் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளாதவர்கள்,
  • உடற்பயிற்சி செய்யும் பழக்கம் அற்றவர்களுக்கு மலச்சிக்கல் ஏற்படும்.
  • மலச்சிக்கலால் மலக்குடல் சுருங்கி அதில் வீக்கம் ஏற்பட்டு மலம் இறுகி அதனால் புண், அரிப்பு ஏற்படும்.
  • மூல நோய்க்கு முதல் காரணமே மலச்சிக்கல்தான். உடம்பின் பல சிக்கலுக்கு காரணமே இந்த மலச்சிக்கல்தான்.
  • உடல் உஷ்ணத்தை மேலும் அதிகபடுத்தும் கார உணவுகள், சிக்கன் மற்றும் பாஸ்ட்புட் உணவுகளை உண்பதால் மலம் இறுகி மூலநோய் ஏற்பட்டு விடும்.

 

மருத்துவம்

உணவு முன்னெச்சரிக்கைகள்

நீங்கள் உண்மையில் மூல நோயிலிருந்து விடுபட வேண்டுமென்றால் தயவு செய்து இந்த முன்னெச்சரிகை நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள் நீங்கள் சீக்கிரம் குணமடைவது நிச்சயம் .

நீங்கள் மூல நோயின் அறிகுறிகளை அறிந்திருப்பீர்கள். மேலும் இதன் அறிகுறிகளை உணர்ந்தால் உடனே இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள்.

  • தேநீர் மற்றும் காப்பி அருந்துவதை முற்றிலும் தவிருங்கள். வெளியே கடைகளில் சூடான மற்றும் குளிர்பானங்கள் குடிப்பதை தவிருங்கள்.
  • உங்கள் உணவில்  புளிப்பு சுவை பொருட்களை (புளி, எலுமிச்சை, ஊறுகாய், தக்காளி, தயிர், மோர், ஆரஞ்சு, எலுமிச்சை, வினிகர் முதலியன) பயன்படுத்த வேண்டாம்.
  • அசைவ உணவு (முட்டை கூட) முழுமையாக சாப்பிட கூடாது.
  • எந்த வடிவத்திலும் மிளகாய் சாப்பிடகூடாது (சிவப்பு, பச்சை, மிளகாய் தூள் மற்றும் பச்சை மிளகாய்) மற்றும் காரமான உணவு.
  • வறுத்த மற்றும் எண்ணெய் உணவு சாப்பிடகூடாது. வேக வைத்த உணவை சாப்பிடுவது மிகவும் நல்லது.
  • குடிப்பழக்கம் தவிர்ப்பது மிகவும் நல்லது.
  • புகையிலை, சுருட்டு, போதை பாக்குகளை கண்டிப்பாக பயன்படுத்த கூடாது
  • கடினமான உடற்பயிற்சிகள் செய்ய கூடாது (அதாவது பளு தூக்குதல் போன்றவை), ஆனால் ஒரு முழுமையான படுக்கை ஓய்வு தேவை இல்லை.
  • நீண்ட தூரம் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும். ஒரே இடத்தில் அமர்ந்து கார் ஓட்டுவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
  • இரவு நேர வேலை செய்வதையும் அதிக நேரம் இரவில் விழிதிருப்பதையும் தவிர்க்க வேண்டும்
  • ஒரே இடத்தில் அதிக நேரம் உட்கார்ந்திருக்க கூடாது ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை 10 நிமிடமாவது எழுந்து நடை பயிற்சி செய்ய வேண்டும்.

 

என்ன பயன்படுத்த வேண்டும் (கண்டிப்பாக) 

  • தினமும் 5 முதல் 6 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
  • தினமும் முள்ளங்கி சாறு 50 மில்லி முதல் 100 மில்லி வரை 3 முறை குடிக்க வேண்டும்.
  • முள்ளங்கி மற்றும் கேரட் கட்டாயமாக  சாப்பிடுங்கள். உணவிலோ அல்லது பச்சையாகவோ.
  • உணவுக்கஞ்சி மற்றும் சீரக தண்ணீரை தினமும் இரண்டு வேளை அருந்துங்கள்.
  • நார்சத்து நிறைந்த பழ மற்றும் உணவு வகைகளை அதிகம் சாப்பிடுங்கள் (பப்பாளி,தர்பூசணி, மாதுளை மற்றும் கொய்யா).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top