01. உண்மையிலேயே சந்தோஷமானவன் எப்போதும் போராடும் நம்பிக்கையிலேயே இருக்கிறான். பெறுவதிலோ வைத்திருப்பதிலோ அல்ல தருவதில்தான் சந்தோஷம் இருக்கிறது. 02. சந்தோஷம் என்பது நறுமணத் திரவியம் போன்றது. உங்கள் மீது சில துளிகளாவது படாமல் உங்களால் அடுத்தவர் மீது அதைத் தெளிக்க முடியாது. 03. தனக்குத்தானே திருப்தியடையாத ஒருவனால் உண்மையாகவே சந்தோஷமாக இருக்க முடியாது. சந்தோஷத்தை எந்த அரசாங்கத்தாலும் உங்களுக்கு தர முடியாது, அதை உங்களுக்கு நீங்களே செய்ய வேண்டும். 04. ஒரு மனிதனுக்கு என்ன இருக்கிறது என்பதைவிட ... Read More »
Monthly Archives: November 2016
மேட்டுர் அணை வரலாறு நமக்கு அறிந்ததும் அறியாததும்
November 24, 2016
மேட்டுர் அணை வரலாறு : நமக்கும் நம் தலைமுறைக்கும் சம்பந்தமே இல்லாத மண் இது என்று தெரிந்தும் ஒருவர் தமிழகம் செழிக்கும் வண்ணம் பிரம்மாண்டமான மேட்டூர் அணையை கட்டி கொடுத்துச் சென்றுள்ளார் ராயல் என்ஜீனியர் கர்னல் டபுள்யூ.எம்.எல்லீஸ். இன்றைக்கு 48 ஆயிரம் கோடி ரூபாய் கொட்டினால் கூட கட்டமுடியாத பிரம்மாண்டத்தை கொண்டுள்ள இந்த அணையை அன்றைக்கு 4 கோடியே 80 லட்சம் ரூபாய் திட்டத்தில் கட்டி முடித்துள்ளனர். மலைக்க வைக்கும் மாபெரும் திட்டம். யாவரும் வியக்கும் மதி ... Read More »
வாழ்ந்து படிக்கும் பாடங்கள்! – 5
November 24, 2016
ஒரு பலவீனம் உங்களை அழித்து விடலாம்! ஒரு சங்கிலியின் உண்மையான பலம் அதன் அதிக பலவீனமான இணைப்பில் தான் இருக்கிறது. அதன் மற்ற அனைத்து இடங்களும் எவ்வளவு உறுதியாக இருந்தாலும் அறுந்து போகக் கூடிய அந்த இணைப்பின் பலத்தைப் பொறுத்தே அதன் பயன் அமையும். அதே போல ஒரு பலவீனம் ஒரு மனிதன் விதியை நிர்ணயித்து விடுவது உண்டு. இராவணன் வான் புகழ் கொண்டவன். பத்து தலை என்று சொல்வது கூட அவன் அறிவின் அளவுக்குச் சொல்வதென்று ... Read More »
தோல்வி தான் வெற்றிக்கு முதற்படி!!!
November 24, 2016
வாழ்க்கையில் உயர்வும், தாழ்வும் மாறி மாறி வருவது சகஜம். வாழ்வில் எல்லோரும் முன்னேற வேண்டும் என்று ஆசைப்படுவது இயல்பு. உயர்வு வரும் இடத்தில் தோல்விகளும் கூடவே வரும். உயர்வும் தாழ்வும் நாணயத்தின் இரு பக்கங்களாக கருத வேண்டும். தோல்வியை கண்டு துவளக் கூடாது. வாழ்வில் ஒரு முறையேனும் தோல்வி ஏற்பட்டால் தான் வெற்றியின் அருமை புரியும். சாதாரணமாக ஒருவன் வெற்றியடைந்தால் அவனுக்கு அது பெரிய விஷயமாக தெரியாது. பல முறை தோல்வி கண்டு, வெற்றியை தழுவும் ஒருவனால் ... Read More »
இன்று: நவம்பர் 24
November 24, 2016
படிவளர்ச்சி நாள் 1639 – ஜெரிமையா ஹொரொக்ஸ் என்பவர் முதன் முதலாக வெள்ளிக் கோள் சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் செல்வதை அவதானித்தார். 1642 – டச்சு கிழக்கிந்தியக் கம்பெனியில் பணிபுரிந்த ஏபல் டாஸ்மான் வான் டீமனின் நிலம் என்ற தீவைக் கண்டுபிடித்தார். இது பின்னர் தாஸ்மானியா எனப் பெயர் பெற்றது. 1859 – சார்ல்ஸ் டார்வின் உயிரங்களின் தோற்றம் நூலை வெளியிட்டார். இதன் பிரதிகள் அனைத்தும் முதல் நாளிலேயே முழுவதுமாக விற்பனையாகின. 1914 – முசோலினி இத்தாலிய ... Read More »
சோம்பல் ஒரு சோக காரணி??!!?
November 23, 2016
ஒருவன் வேலை தேடி ஒரு செல்வந்தரிடம் போனான். என்ன வேலையானாலும் செய்யத் தயார் என்றான். எவ்வளவு சம்பளமானாலும் சம்மதமே என்றான். அந்த செல்வந்தருக்கோ மட்டற்ற மகிழ்ச்சி. இப்படியும் ஒருவன் வேலையாளாகக் கிடைப்பது என்பது அதிர்ஷ்டமே அல்லவா? அவன் தொடர்ந்து சொன்னான். “ஆனால் எனக்கு இரண்டே இரண்டு நிபந்தனைகள் …..” அவர் கேட்டார். “என்ன நிபந்தனைகள்?” அவன் சொன்னான். “முதலாவது நிபந்தனை- எனக்கு சாப்பிட்டவுடனேயே சிறிது நேரம் உறங்க வேண்டும்” அவர் சொன்னார். “அது ஒரு பிரச்னையல்ல. அடுத்த ... Read More »
அறிவுபூர்வமான சிந்தனைகள்..
November 23, 2016
* எல்லோரும் சொர்க்கம் போக ஆசைப்படுகிறார்கள். ஆனால்யாருமே இறந்து போக ஆசைப்படுவதில்லை. * ஆற்றில் ஒரு கரை உடைந்தாலும் அதில் நீர் தங்குவதில்லை.குடும்பத்திலும் அப்படித்தான்.கணவன்,மனைவி இருவரில் ஒருவர் ஒழுங்காக இல்லை என்றாலும் குடும்பம் அதோ கதிதான். * சருகுகளை சேகரிப்பது குளிர் காய உதவும்.ஆனால் ஆயள் முழுவதும் சருகுகளை மட்டுமே சேர்த்துக் கொண்டிருக்க முடியாது. * அவசியப்பட்டதை வாங்குவான் கணவன். ஆசைப்பட்டதை வாங்குவாள் மனைவி. * மனைவி சிரித்துக் கொண்டே பரிமாறினால் கணவனுக்கு தொந்தி விழும். சினந்து ... Read More »
வாழ்ந்து படிக்கும் பாடங்கள்! – 4
November 23, 2016
சரியாகப் படியுங்கள்! ”கற்க கசடற” என்னும் வள்ளுவன் அறிவுரையின் படி எதையும் குறையில்லாமல், சரியாகப் படிப்பது மிக முக்கியம். ஆயிரம் பேரைக் கொல்வான் அரை வைத்தியன் என்பார்கள். எதையும் அரைகுறையாய் கற்றுக் கொள்வதில் அனர்த்தமே விளையும். குழந்தை எழுதப் பழக ஆரம்பிக்கும் போது பென்சிலைத் தவறாகப் பிடிப்பது இயல்பு. எழுத்துக்களைத் தவறாக ஒழுங்கற்ற முறையில் எழுதுவதும் இயல்பு. அந்த சமயங்களில் பென்சிலை சரியாகப் பிடிப்பதும், ஒழுங்காக எழுதுவதுமே அதற்குக் கஷ்டமான காரியம். சில முறை முயன்று எனக்கு ... Read More »
இன்று: நவம்பர் 23
November 23, 2016
1574: ஜுவான் பெர்ணான்டஸ் தீவுகள் சிலி நாட்டுக்கு வெளியே கண்டுபிடிக்கப்பட்டன. 1919: அமெரிக்காவின் தொழிலாளர் மாநாட்டு குழு, நாளொன்றுக்கு 8 மணிநேரமும் வாரத்திற்கு 48 மணிநேர வேலையையும் வலியுறுத்தியது. 1926: சத்ய சாயி பாபா பிறந்தார். 1950: அமெரிக்காவின் நியூயோர்க் றிச்மன்ட் மலைத்தொடரில் நிகழ்ந்த ரயில் விபத்தில் 79 பேர் பலி. 1963: அமெரிக்காவில் ஜோன் எவ்.கென்னடி சுட்டுக்கொல்லப்பட்டதையடுத்து லிண்டன் ஜோன்ஸன் ஜனாதிபதியாக பதவியேற்றார். 1972: சீனாவுக்கான பயணத்தடையை 22 ஆண்டுகளின் பின்னர் அமெரிக்கா நீக்கியது. 1980: ... Read More »
தனியே ஒரு குரல்!!!
November 23, 2016
பெரும்பாலான மனிதர்கள் காலத்தோடு ஒத்துப் போகிறார்கள். எல்லோரையும் போல சிந்திப்பது, செயல்படுவது, எல்லோரும் எப்படி வாழ்கிறார்களோ அப்படியே வாழ்வது என்று இருந்து விடுகிறார்கள். அவர்கள் வித்தியாசமாக சிந்தித்து, செயல்பட்டு, வாழ்ந்து சமூகத்தை பயமுறுத்துவதில்லை. சமூகத்தை தர்மசங்கடத்துக்கு உள்ளாக்குவதில்லை. ஆனால் எல்லோராலும் அப்படி இருக்க முடிவதில்லை. சிலர் விதிவிலக்குகளாக இருந்து தனிக்குரல் எழுப்புகிறார்கள். அந்தத் தனிக்குரல் சமூகத்தின் காதுகளில் நாராசமாக ஒலிக்கிறது. அந்தத் தனிக்குரலை ஒடுக்க சமூகம் பாடுபட ஆரம்பித்து, பெரும்பாலான சமயங்களில் வெற்றியும் பெற்று விடுகிறது. ஆனாலும் ... Read More »