Home » பொது » இன்று: நவம்பர் 28
இன்று: நவம்பர் 28

இன்று: நவம்பர் 28

 

1987 : தென்­னா­பி­ரிக்­காவின் விமா­ன­மொன்று இந்து சமுத்­தி­ரத்தில் வீழ்ந்­ததில்

159 பேர் பலி.

1520 : தென் அமெ­ரிக்கா ஊடாகப் பய­ணித்த போர்த்­து­கேய நாடு­காண்­ப­யணி மகலன்,சுபிக் சமுத்­தி­ரத்தை அடைந்தார். இவரே அத்தி­லாந்திக் சமுத்­தி­ரத்தில் இருந்து பசுபிக் சமுத்­தி­ரத்தை அடைந்த முத­லா­வது ஐரோப்­பியர் ஆவார்.

1729 : அமெ­ரிக்­காவின் மிசி­சிப்­பியில்  குழந்­தைகள், பெண்கள் உட்­பட 239 பிரெஞ்சு இன மக்­களை நட்சே இந்­தி­யர்கள் கொன்­றனர்.

1821 : ஸ்பெய்­னிடம் இருந்து பனாமா பிரிந்து பாரிய கொலம்­பி­யா­வுடன் இணைந்­தது.

1843 : ஹவாய் இராச்­சி­யத்தை ஐக்­கிய இராச்­சியம்இ பிரான்ஸ் ஆகி­யன
சுதந்­தி­ர­ம­டை­ந்த தனி நாடாக அங்­கீ­க­ரித்­தன. பின்னர் இது அமெ­ரிக்­காவின் ஒரு மாநி­ல­மா­கி­யது.

1893 : நியூ­ஸி­லாந்தில் முதற்­த­ட­வை­யாக பெண்கள் வாக்­க­ளித்­தனர்.

1905 : ஐரிஷ் தேசி­ய­வாதி ஆர்தர் கிறிபித், அயர்­லாந்தின் விடு­த­லைக்­காக சின்
ஃபெயின் என்ற அர­சியல் கட்­சியை உரு­வாக்­கினார்.

1942 : அமெ­ரிக்­காவின் மசாசெட்ஸ் மாநி­லத்தில் பொஸ்டன் நகரில் இர­வு­வி­டுதி ஒன்றில் இடம்­பெற்ற தீயினால் 491 பேர் உயி­ரி­ழந்­தனர்.

1943 : இரண்டாம் உலகப் போரில் ஜெர்­ம­னி­யையும், ஜப்­பா­னையும் ஒடுக்­கு­வது பற்றி, அமெ­ரிக்க ஜனா­தி­பதி பிராங்­கிளின் ரூஸ்வெல்ட், பிரித்­தா­னியப் பிர­தமர் வின்ஸ்டன் சேர்ச்சில், ரஷ்ய அதிபர் ஜோசப் ஸ்டாலின் ஆகிய மூவரும் டெஹ்­ரானில் சந்­தித்துப் பேசி­னார்கள்.

1944 : இரண்டாம் உலகப் போர்: அல்­பே­னியா அல்­பே­னியப் பார்ட்­டி­சான்­க­ளினால் விடு­விக்­கப்­பட்­டது.

1958 : சாட்இ கொங்கோ குடி­ய­ரசு, காபோன் ஆகி­யன பிரெஞ்சு ஆட்­சியின் கீழ் சுயாட்சி பெற்­றன.

1960 : பிரான்­ஸி­ட­மி­ருந்து மௌரிட்­டா­னியா சுதந்­திரம் பெற்­றது.

1964 : நாசா செவ்வாய்க் கோளை நோக்கி மரைனர் 4 விண்­க­லத்தை ஏவி­யது.

1975 : போர்த்­துக்­கல்­லிடம் இருந்து சுதந்­திரம் பெறு­வ­தாக கிழக்குத் திமோர்
பிர­க­டனம் செய்­தது.

1979 : நியூ­ஸி­லாந்து விமா­ன­மொன்று அந்­தார்ட்­டிக்­காவின் எரெபஸ் மலையில்
மோதி­யதில் அதில் பயணம் செய்த அனைத்து 257 பேரும் கொல்­லப்­பட்­டனர்.

1980: ஈரான் ஈராக் யுத்­தத்தில் ஈராக்­கிய கடற்­ப­டையின் பெரும் பகுதி ஈரா­னிய
கடற்­படையி­னரால் அழிக்­கப்­பட்­டது.

1987 : தென்­னா­பி­ரிக்­காவின் விமா­ன­மொன்று இந்து சமுத்­தி­ரத்தில் வீழ்ந்­ததில் அதில் பயணம் செய்த  159 பேரும் கொல்­லப்­பட்­டனர்.

1989 : பனிப்போர்: செக்­கஸ்­லோ­வாக்­கி­யாவின் தனி­யா­திக்க உரி­மையை
விட்­டுத்­த­ரு­வ­தாக அந்­நாட்டின் கம்­யூனிஸ்ட் கட்சி அறி­வித்­தது.

1990 : ஐக்­கிய இராச்­சிய தலைமை அமைச்சர் மார்­கரெட் தாட்சர் தனது பத­வியை விட்டு வில­கினார்.

1990 :  சிங்­கப்பூர் பிரதமர்  பத­வி­யி­லி­ருந்து லீ குவான் யூ வில­கினார். கோ சொக்
டொங் புதிய பிர­த­ம­ரானார்.

1991 : ஜோர்­ஜி­யா­விடம் பிரி­வ­தாக தெற்கு ஒசேத்தியா   பிரகடனம் செய்தது.

1994 : ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கு எதிராக நோர்வே மக்கள்  வாக்களித்தனர்.

2006 : நாசாவின் நியூ ஹரைசன்ஸ் தானியங்கி விண்கலம் புளூட்டோவின் முதலாவது படத்தை அனுப்பியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top