Home » பொது » இன்று: நவம்பர் 27
இன்று: நவம்பர் 27

இன்று: நவம்பர் 27

 

1989: கொலம்பிய விமானத்தில்குண்டுவெடிப்பு
1703 : இங்கிலாந்து, டெவன் என்ற இடத்தில் உள்ள கலங்கரை விளக்கம் அங்கு நிகழ்ந்த பெரும் சூறாவளியினால் சேதமாக்கப்பட்டது.
1807: நெப்போலியனின் படைகளிடமிருந்து தப்புவதற்காக போர்த்துக்கல் அரச குடும்பத்தினர் தலைநகர் லிஸ்பனிலிருந்து தப்பிச் சென்றனர்.
1895 : பாரிஸில் அல்பிரட் நோபல் நோபல் பரிசுக்கான திட்டத்தை தெரிவித்து தனது சொத்துக்களை அப்பரிசுக்கான மூலதனமாக அறிவித்தார்.
1935 : இரத்மலானை விமான நிலையத்துக்கு முதலாவது விமானம் மதராசிலிருந்து (தற்போதைய சென்னை)  வந்திறங்கியது.
1940 : ருமேனியாவில் இரண்டாம் கரோல் மன்னனின் ஆதரவாளர்கள் 60 பேரை தளபதி இயன் அண்டோனெஸ்கு கைதுசெய்து தூக்கிலிட்டான்.
1944 : இரண்டாம் உலகப் போர்: ஸ்டஃபோர்ட்ஷயரில் ஆங்கிலேய விமானப்படைத் தளத்தின் ஆயுதக் கிடங்கில் ஏற்பட்ட பெரும் விபத்தில் 70 பேர் கொல்லப்பட்டனர்.
1964 : பனிப்போர்: இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேரு அணுவாயுதச் சோதனைகளை நிறுத்தும்படி ஐக்கிய அமெரிக்காவையும் ரஷ்யாவையும் கோரினார்.
1971 : சோவியத்தின் மார்ஸ் 2 விண்கலம் தனது துணை விண்கோள் ஒன்றை செவ்வாய்க் கோளில் இறக்கியது. இது செவ்வாயின் மோதி செயலிழந்தது. செவ்வாயில் இறங்கிய முதலாவது கலம் இதுவாகும்.
1975 : கின்னஸ் உலக சாதனை நூலை ஆரம்பித்து வைத்த ரொஸ் மாக்வேர்ட்டர், ஐ.ஆர்.ஏ. கிளர்ச்சியாளர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

1983 : போயிங் 747 விமானமொன்று ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட் அருகே வீழ்ந்து நொருங்கியதில் 183 பேர் கொல்லப்பட்டனர்.

1989: கொலம்பியாவில் பறந்துகொண்டிருந்த அவியன்கா எயார்லைன்ஸ் விமானத்தில் குண்டுவெடித்ததால் விமானத்திலிருந்த 107 பேரும் பலியாகினர். கொலம்பியாவிலுள்ள போதைப்பொருள் கடத்தல் அமைப்பொன்று இத்தாக்குதலுக்கு உரிமை கோரியது.
1999 : நியூஸிலாந்தின் முதலாவது பெண் பிரதமராக தொழிற்கட்சியைச் சேர்ந்த ஹெலன் கிளார்க் தெரிவு செய்யப்பட்டார்.
2001 : ஹபிள் விண்வெளித் தொலைநோக்கி மூலம் ஓசிரிஸ் கோளில் ஆவியாகக்கூடிய நிலையில் ஐதரசன் மண்டலம் கண்டுபிடிக்கப்பட்டது. சூரிய குடும்பத்திற்கு வெளியே உள்ள கோள் ஒன்றில் வளி மண்டலம் கண்டுபிடிக்கப்பட்டது இதுவே முதல் தடவை.
2005: பிரான்ஸில் முதலாவது பகுதியளவு முகமாற்றசத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
2006 : கனடாவில் பிரெஞ்சு மொழி பேசும் மக்களை பெரும்பான்மையாக கொண்ட கியூபெக் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் கனடாவுக்குட்பட்ட தனியான ‘தேச இனம்’ என்ற அங்கீகாரத்தை கனடிய நாடாளுமன்றம் வழங்கியது.
2009: ரஷ்யாவில் ரயிலொன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 28 பேர் பலியானதுடன் 96 பேர் காயமடைந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top