1120 : இங்கிலாந்து மன்னன் முதலாம் ஹென்றியின் மகன் வில்லியம் அடெலின், பயணஞ்செய்த கப்பல் ஆங்கிலக் கால்வாயில் மூழ்கியதால் உயிரிழந்தார்.
1542 : ஆங்கிலேயப் படைகள் சொல்வே மொஸ் என்ற இடத்தில் ஸ்கொட்லாந்துப் படைகளைத் தோற்கடித்தன.
1667 : ஆசிய, ஐரோப்பிய எல்லையிலுள்ள கவ்காசியாப் பகுதியில் ஏற்பட்ட
பூகம்பத்தினால் நிகழ்ந்த சுமார் 80,000 பேர் உயிரிழந்தனர்.
பூகம்பத்தினால் நிகழ்ந்த சுமார் 80,000 பேர் உயிரிழந்தனர்.
1703 : பிரித்தானியாவில் வீசிய பாரிய சூறாவளியினால் 9இ000 பேர்
உயிரிழந்தனர்.
உயிரிழந்தனர்.
1783 : கடைசி பிரித்தானியப் படைகள் நியூயோர்க் நகரை விட்டுப் புறப்பட்டன.
1795 : சுதந்திரப் போலந்தின் கடைசி மன்னன் ஸ்டனிஸ்லாஸ் ஓகஸ்ட் பொனியாட்டோவ்ஸ்கி பதவியில் இருந்து அகற்றப்பட்டு ரஷ்யாவுக்கு நாடு கடத்தப்பட்டார்.
1833 : இந்தோனேஷியாவின் சுமத்திராவில் 8.7 ரிச்டர் அளவிலான பூகம்பம் ஏற்பட்டது.
1839 : இந்தியாவில் பலத்த சூறாவளி ஏற்பட்டது. ஆந்திராவின் கொரிங்கா நகரம் முற்றாக சேதமடைந்தது. 30,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
1867 : அல்பிரட் நோபல் டைனமைட்டுக்குக் காப்புரிமம் பெற்றார்.
1905 : டென்மார்க் இளவரசன் கார்ல் நோர்வே வந்து சேர்ந்தார். இவர் பின்னர் ‘ஏழாம் ஹாக்கோன்’ என்ற பெயரில் நோர்வேயின் மன்னரானார்.
1926 : ஐக்கிய அமெரிக்காவின் ஆர்கன்சஸ் மாநிலத்தில் இடம்பெற்ற சூறாவளியில் 76 பேர் உயிரிழந்ததுடன் பலர் காயமுற்றனர்.
1936 : சோவியத் ஒன்றியம் தம் மீது படையெடுத்தால் அதனை கூட்டாக எதிர்கொள்வதற்கு ஜப்பான், ஜேர்மனி ஆகியன பேர்லின் நகரில் ஒப்பந்தம் செய்து கொண்டன.
1944 : இரண்டாம் உலகப் போரில் ஐக்கிய இராச்சியம், டெப்ட்ஃபோர்ட் நகரில் ஜேர்மனிய விமானங்கள் ஏவுகணை வீசியதில் 160 பேர் கொல்லப்பட்டனர்.
1950 : ஐக்கிய அமெரிக்காவின் வடக்கு கிழக்கில் ஏற்பட்ட சூறாவளியினால் மேற்கு வேர்ஜீனியாவில் 323 பேர் கொல்லப்பட்டனர்.
1950 : மக்கள் சீனக் குடியரசு ஐநா படைகளை எதிர்க்க கொரியப் போரில் ஈடுபட்டது.
1973 : கிரேக்கத் தலைவர் ஜோர்ஜ் பாப்படபவுலொஸ் இராணுவப் புரட்சி ஒன்றில் பதவி இழந்தார்.
1975 : நெதர்லாந்திடம் இருந்து சூரினாம் சுதந்திரம் பெற்றது.
1981 : ரொடீசியாவிலிருந்து மும்பாய்க்குப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம்
கடத்தப்பட்டு தென்னாபிரிக்காவின் டர்பன் நகருக்கு திசை திருப்பப்பட்டது.
கடத்தப்பட்டு தென்னாபிரிக்காவின் டர்பன் நகருக்கு திசை திருப்பப்பட்டது.
1987 : பிலிப்பைன்ஸில் நீனா என்ற சூறாவளி தாக்கியதில் 1,036 பேர் கொல்லப்பட்டனர்.
1992 : செக்கஸ்லோவாக்கியாவின் நாடாளுமன்றம் நாட்டை ஜனவரி 1, 1993 ஆம் திகதியிலிருந்து செக். குடியரசு, ஸ்லோவாக்கியா என இரண்டாகப் பிரிக்க முடிவெடுத்தது.
1999: 1960 ஆம் ஆண்டு டொமினிக்கன் குடியரசில் சர்வாதிகாரி ரபாயெல்
ட்ருஜில்லோவின் ஆட்சியை எதிர்த்தமைக்காக கொல்லப்பட்ட 3 சகோதரிகளின் நினைவாக, பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பு தினமாக நவம்பர் 25 ஆம் திகதியை ஐ.நா. பொதுச்சபை பிரகடனப்படுத்தியது.
ட்ருஜில்லோவின் ஆட்சியை எதிர்த்தமைக்காக கொல்லப்பட்ட 3 சகோதரிகளின் நினைவாக, பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பு தினமாக நவம்பர் 25 ஆம் திகதியை ஐ.நா. பொதுச்சபை பிரகடனப்படுத்தியது.
2000 : அஸர்பைஜான் தலைநகர் பக்கு நகரில் இடம்பெற்ற பூகம்பத்தினால் 26 பேர் உயிரிழந்தனர்.
2006 : சீனாவின் தென்மேற்கு மற்றும் வடக்கு கிழக்குப் பகுதிகளில் ஏற்பட்ட நிலக்கரிச் சுரங்க விபத்தில் 53 பேர் உயிரிழந்தனர்.
2008: நிஷா சூறாவளியினால் இலங்கையின் வடபகுதியில் 15 பேர் பலியானதுடன் சுமார் பல்லாயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்தனர். இச்சூறாவளியினால் தமிழ்நாட்டில் 184 பேர் உயிரிழந்தனர்.
2009: சவூதி அரேபியாவின் ஜெத்தா நகரில் பாரிய வெள்ளம் ஏற்பட்டதால் 122 பேர் உயிரிழந்தனர். சுமார் 3000 கார்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.