இன்று: நவம்பர் 20
- 284 – தயோக்கிளேசியன் ரோமப் பேரரசின் மன்னன் ஆனான்.
- 1194 – இத்தாலியின் பலேர்மோ நகரம் ஆறாம் என்றியால் கைப்பற்றப்பட்டது.
- 1700 – சுவீடனின் பன்னிரண்டாம் சார்ல்சு நார்வா என்ற இடத்தில்இரசியாவின் முதலாம் பீட்டரைத் தோற்கடித்தான்.
- 1906 – ரோல்சு இராய்சு என்பது விலையுயர்ந்த மகிழந்து(கார்). ரோல்சு என்பவரும்இராய்சு என்பவரும் கூட்டாக இணைந்து ரோல்சு இராய்சு நிறுவனத்தைத் தொடங்கினார்கள்.
- 1916 – நீதிக்கட்சி – தென்னிந்திய நல உரிமைச் சங்கம் தோன்றிய நாள்
- 1917 – உக்ரேன் குடியரசாக அறிவிக்கப்பட்டது.
- 1923 – செர்மனியின் நாணயம் பேப்பியர்மார்க் ரெண்டென்மார்க் ஆக மாற்றப்பட்டது. (1 ரெண்டென்மார்க் = 1 திரில்லியன் பேப்பியர்மார்க்)
- 1933- தந்தை பெரியார் “புரட்சி” என்ற வார ஏட்டைத் தொடங்கிய நாள் (நவ.7 என்றும் சொல்லுவர்)
- 1940 – இரண்டாம் உலகப் போர்: ஹங்கேரி, உருமேனியா, சிலவாக்கியா ஆகியன அச்சு அணி நாடுகள் அமைப்பில் இணைந்தன.
- 1947 – இளவரசி எலிசபெத் இளவரசர் பிலிப்பை திருமணம் புரிந்தார்.
- 1963 – காமராசர் 1963 ஆம் ஆண்டு அகில இந்திய காங்கிரசின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.
- 1969 – கால்பந்து உலகின் மன்னன் என்று போற்றப்படும் Pele ஆயிரமாவது கோலைப் புகுத்தினார்.
- 1977 – ஆறு ஆண்டுகள் சிறைக்குப் பின் சனதா விமுக்தி பெரமுன தலைவர் றோகண விசேவீர விடுதலை செய்யப்பட்டார்.
- 1979 – சவுதி அரேபியாவில் மெக்காவில் காபா மசூதியைத் தாக்கிய சுணி முசுலிம் தீவிரவாதிகள் 6,000 பேரைப் பணயக் கைதிகளாக்கினர். பிரெஞ்சுப் படைகளின் உதவியுடன் இத்தாக்குதல் முறியடிக்கப்பட்டது.
- 1985 – மைக்ரொசொஃப்ட்டின் விண்டோசு 1.0 வெளியிடப்பட்டது.
- 1988 -இராசீவ் காந்திக்கும் மிக்கைல் கோர்பசேவுக்கும் இடையே இரு அணு உலைகளைக் கூடங்குளத்தில் அமைப்பது என்ற ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. எனினும் சோவியத் கலைப்பை அடுத்து இத்திட்டம் கைவிடப்பட்டது.
- 1994 – அங்கோலா அரசுக்கும் யுனீட்டா தீவிரவாதிகளுக்கும் இடையே சாம்பியாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்தாகியதில் 19 ஆண்டு கால உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது. எனினும் அடுத்த ஆண்டு போர் மீண்டும் ஆரம்பமாயிற்று.
- 1998 – பன்னாட்டு விண்வெளி நிலையத்தின் முதலாவது பகுதி சாரியா விண்ணுக்கு அனுப்பப்பட்டது
Scroll To Top