மதி – அறிவு
விதி – நமது அறியாமையால் நடக்கும் ஒவ்வொன்றின் மீதும் மற்றவரை காரணம் காட்டுவது.
- அறிவு எல்லோருக்கும் தெளிவாக இருந்து விட்டால் விதியும் இல்லை. விதித்தவனும் இல்லை.
- அறியாமையே விதியின் கைப்பாவை.
- எப்போது நீங்கள் நினைத்தது நடக்கவில்லையோ அப்போது உங்கள் நினைவிற்கு மேல் இன்னொன்று இருக்கிறது என்று அர்த்தம். அதற்கு நம் மூதாதையர் சூட்டிய பெயர் தான் விதி.
உதாரணம்:
- பள்ளம் என்று தெரியும் போது அதில் விழாதே என்று தெரிய வைத்தது மதி.
- மதியால் விதியைய் ஆராய்ச்சி செய்யலாம். ஆனால் ஆட்சி செய்ய முடியாது.
- ஒரு சில சமயங்களில் நாம் எண்ணிய கரும காரியங்கள் நிறைவேறாத போது நாம் நமக்குள் கூறிக் கொள்ளும் ஒரே வார்த்தை ‘ஆண்டவன் விதித்த விதி’.
- அந்த காரியம் ஏன் நிறைவேறவில்லை என ஆராய்ச்சி செய்தால் அதுவே மதி.
பழமொழி கூறுவது:
“விதியைய் மதியால் வெல்லலாம்”
“மதியைய் விதி வென்றுவிடும்”.
“விதியும் மதியும் ஒரே நேர்கோட்டில் இருக்குமாயினும், உங்களின் அறியாமையை நீங்கள்அகற்றினால் அந்த மதி எந்த விதியையும் ஜெயித்திடும்”