மரணம் என்றாலே யாருக்குத்தான் பயமில்லை?
மரணம் என்பது மறைக்கப்பட்தொரு விடையமாகும். இது ஈசனின் தொழில் என்கிறது இந்துமதம். இது எதனால்? யாரால்? எப்படி? எப்போ? என்கிற கேள்விகளுக்கு விடையே இல்லை.
ஆனால் முற்காலத்தில் வாழ்ந்த துறவிகள் மரணத்தை கூட தள்ளிப்போடுமளவிற்குஅவர்களுக்கு சக்தியிருந்ததாக அறியமுடிகிறது. இது எந்தளவு உண்மை என்பதுகேள்விக்குறியே?
- விஞ்ஞானத்தை எடுத்துக்கொண்டால் மரணம் என்பது மூளையின் தொழில்பாடுமுற்றுமுழுதாக இல்லாமல் போவதையே மரணம் என்கிறார்கள். மூளையானது தனது செயற்பாடுகள் அனைத்தும் முடிவுறும் தருவாயில் ஒருவிதமான ஹோமோன் ஒன்றை உற்பத்தி செய்கிறது இவ் ஹோமோனானது ஒருவித இன்ப உணர்ச்சியை அழிக்கிறது.மரணிக்கும் தருவாயில் மாத்திரமே மூளையானது இவ்வாறு செயல்படுவதாக விஞ்ஞானம் கூறுகிறது.
- யோக சூத்திரத்தின் கடைசி நிலையானது சமாதி ஆகும்.அதாவது சமாதிநிலையையடைவது என்பது சுலபமானகாரியமில்லை .இந்நிலைக்கு வரும்போது சொல்லினால் விபரிக்கமுடியாதளவான இன்ப மகிழ்ச்சி கிடைப்பதாகவும் உணவின்றி,அசைவின்றி பல ஆண்டுகாலம் இருக்கமுடியும் என்பதை சில புத்தகங்கள் மூலமாக அறியமுடிகிறது.
- சமாதி நிலையிலுள்ள மகிச்சியானது விஞ்ஞானத்தில் குறிப்பிடப்படும் மரணிக்கும் தருவாயில் உண்டாகும் இன்ப மகிழ்ச்சியை போன்றதா ???
என்னைப்பொறுத்தளவில் மரணத்துக்கான அடிப்படைப் பயம் பிணத்தை பின் பற்றியேதாவுள்ளது.
ஆக மொத்தத்தில் உயிருடன் இருக்கும் வரை மரணம் வராது !!!!