Home » சிறுகதைகள் » உறுதியாக அணுகினால் எளிதாக தீர்வு கிடைக்கும்
உறுதியாக அணுகினால் எளிதாக தீர்வு கிடைக்கும்

உறுதியாக அணுகினால் எளிதாக தீர்வு கிடைக்கும்

ந்தப் பூட்டு பூட்டப்படவே இல்லை என்பதுதான் உண்மை. எவ்வளவு பெரிய பிரச்சினையையும் தெளிவாக,  பதட்டமில்லாமல், உறுதியாக அணுகினால் எளிதாக தீர்வு கிடைக்கும் என்பது இந்தக் கதையின் நீதி.

குருவுக்கு வயசாகிவிட்டது. மரணப் படுக்கையில் கிடக்கிறார். சீடர்களைக் கூப்பிட்டார்.

‘‘இன்று மாலைக்குள் இறந்துவிடுவேன்’’ என்று கூறிவிட்டார். சீடர்களுக்கு கவலை.

விஷயம் கேள்விப்பட்ட அவர் நண்பர்கள் பலரும், வேறு சிஷ்யர்களும் மாலைக்குள் ஆசிரமத்துக்கு வந்துவிட்டனர்.

மூத்த சீடர் ஒருவர் திடீரென கடைவீதிக்குப் புறப்பட்டார். ‘‘ஏய்… என்ன மடத்தனம் பண்ணுகிறாய்… குரு மரணப்படுக்கையில் கிடக்கும்போது அப்படி என்ன அவசரமாக வாங்க வேண்டியிருக்கு?’’ என்றனர் மற்றவர்கள்.

மூத்த சீடர், ‘‘குருநாதருக்கு நாவல்பழம் என்றால் அத்தனை பிரியம். அதை வாங்கத்தான் போகிறேன்!’’ என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார்.

எல்லோரும் கவலையோடிருந்தனர். குரு கண்களைத் திறப்பதும் யாரையோ தேடுவதும் பின் மூடிக் கொள்வதுமாக இருந்தார்.

மூத்த சீடர் வந்ததும், ‘‘வந்து விட்டாயா… எங்கே நாவல்பழம்?’’ என்றார்.

அவர் கையில் நாவல் பழத்தைக் கொடுத்ததும், சற்றும் நடுக்கமின்றி, மலர்ச்சியோடு அதை வாங்கிக் கொண்டார்.

ஒரு சீடர் குருவிடம், ‘‘குருவே… தள்ளாத வயதிலும் உங்கள் கைகளில் நடுக்கமில்லையே?’’ என்றார்.

குரு சிரித்தபடி, ‘‘என் கைகள் ஒருபோதும் நடுங்கியதில்லை. ஏனென்றால் எப்போதும் எதற்கும் நான் பயந்ததே இல்லை!’’ என்று சொல்லிவிட்டு நாவல் பழத்தை ருசித்து தின்னத் தொடங்கிவிட்டார்.

இன்னொரு சீடர் குருவிடம் பணிந்து, ‘‘ஐயா, தாங்கள் சீக்கிரமே இந்த உலகை விட்டுப் பிரியப் போகிறீர்கள். நாங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய தங்களின் இறுதி உபதேசம் என்ன?’’ என்று கேட்டார்.

எல்லோரும் அவர் முகத்தையே ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.

குரு சிரித்தபடி, ‘‘இந்த நாவல்பழம் என்ன அருமையான சுவையுள்ளதாக இருக்கிறது,’’ என்று சொல்லிவிட்டு தன் மூச்சை நிறுத்திக் கொண்டார்!

சீடனுக்கு அவர் சொல்லாமல் சொன்ன சேதி தெரிகிறதா… நம்ம குரு சூப்பர் ஸ்டார் அடிக்கடி சொல்லும் சேதியும் இதுதான்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top