1520: சுவீடன் மீது படையெடுத்த டென்மார்க் படையினர் ஸ்டொக்ஹோமில் சுமார் 100 பேரை கொலை செய்தனர்.
1923: ஜேர்மன் அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கு அடோல்வ் ஹிட்லர் தலைமையிலான நாஸிகள் மேற்கொண்ட முயற்சி தோல்வியுற்றது.
1932: பிராங்ளின் டி ரூஸ்வெல்ட் அமெரிக்க ஜனாதிபதியாக முதல் தடவையாக தெரிவானார். பின்னர் மேலும் 3 தடவைகள் இவர் வெற்றிபெற்று சாதனை படைத்தார்.
1939: ஜேர்மன் சர்வாதிகாரி அடோல்வ் ஹிட்லர் படுகொலை முயற்சியிலிருந்து நூலிழையில் தப்பினார்.
1950: கொரிய யுத்தத்தின்போது அமெரிக்க விமானப்படையின் எவ்-80 ரக விமானத்தின் விமானி ரஸல் ஜே.பிரவுன், வடகொரியாவின் இரு மிக் 15 விமானங்களை சுட்டுவீழ்த்தினார். உலகில் விமானங்களுக்கிடையிலான நேரடி சமர் இதுவாகும்.
1963: எட்வர்ட் புரூக் என்பவர் அமெரிக்க செனட் சபைக்கு முதல் தடவையாக கறுப்பினத்தவரானார்.
2004: ஈராக்கின் பலூஜா நகரின் மீது சுமார் 10 ஆயிரம் பேர்கொண்ட அமெரிக்க படை தாக்குதலை ஆரம்பித்தது.