Home » சிறுகதைகள் » தைரியமாக இருப்போம் (நீதிக்கதை)
தைரியமாக இருப்போம் (நீதிக்கதை)

தைரியமாக இருப்போம் (நீதிக்கதை)

ஒரு காட்டில் முயல்கள் கூட்டம் ஒன்று வசித்து வந்தது.

அவர்களுக்குள் ஒரு தாழ்வு மனப்பான்மை இருந்து வந்தது.

அதாவது முயல்கள் அனைத்தும் கோழைகளாக இருந்தன.

‘வேட்டைக்காரன் வந்ததும் நம்மைத்தான் வேட்டையாடுகிறான். சிங்கம், புலி போன்ற மிருகங்களும் நம்மைத் தான் அடித்து உண்ணுகின்றன. ஆகவே…நம் கூட்டம் இனி உயிர் வாழ்வதில் பயனில்லை, ஒன்றாக ஏதேனும் ஒரு குளத்தில் செத்து மடிவோம்’என முயல்களின் தலைவன் கூற அனைத்தும் ஒரு குளத்தை நோக்கிச் சென்றன.

அந்தக் குளத்தில் நூற்றுக்கணக்கான தவளைகள் வசித்து வந்தன.அவை கரையில்அமர்ந்திருந்தன.முயல்கள் கூட்டமாக வருவதைப் பார்த்த  தவளைகளின் தலைவன் ‘முயல்கள் கூட்டமாக நம்மைத்தாக்க வருகின்றன.நாம் கரையில் இருந்தால்ஆபத்துதான்.உடனே குளத்தினுள் சென்றுவிடுவோம்’ என முடிவு செய்து குளத்தில்குதித்தன.

இதைப் பார்த்த முயல்கள்….’நாம் கோழைகள் தான் ..நமக்கு தைரியமில்லைதான்…ஆனாலும் நம்மைவிட தைரியமில்லாதவர்களும் இருக்கிறார்கள். இந்ததவளைகள் நமக்கு  பயப்படுகின்றன. அவைகளைப்  பொறுத்தவரை அவைகளைவிடநாம் தைரியசாலிகள். ஆகவே நாம் செத்து மடியக்கூடாது….இனி தைரியத்தைவரவழைத்துக்கொண்டு….நம்மை யாரேனும் தாக்க நினைத்தால் நாலு கால்பாய்ச்சலில் தப்பிப்பிழைப்போம்’ என்று கூறின.

உலகில் நம்மைவிட தைரியமில்லாதவர்களும் இருக்கிறார்கள்.ஆகவே நாம் எந்த சமயத்திலும் தைரியத்தை இழக்காமல் சாதனைகள் புரியவேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top