1530 – நெதர்லாந்தில் நிகழ்ந்த பெரும் வெள்ளம் றெய்மேர்ஸ்வால் என்ற நகரத்தை அழித்தது.
1556 – முகலாயப் பேரரசுப் படைகள் இந்தியாவின் சூர் பேரரசின் தளபதி ஹேமு என்பவனின் படைகளை பானிபாட் என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் தோற்கடித்தன. பேரரசன் அக்பர் இந்தியாவின் அரசனானான்.
1605 – ரொபேர்ட் கேட்ஸ்பி என்பவனால் இங்கிலாந்து நாடாளுமன்றத்தைத் தகர்க்க எடுக்கப்பட்ட முயற்சி முறியடிக்கப்பட்டது.
1757 – புரூசியா பேரரசன் பிரெடெரிக் பிரான்ஸ் மற்றும் ரோம் பேரரசு ஆகியவற்றின் கூட்டுப் படையை ரொஸ்பாக் என்ற இடத்தில் தோற்கடித்தான்.
1814 – இலங்கையின் வடக்கு மற்றும் வட-மேற்குப் பகுதிகளில் இடம்பெற்ற பெரும் சுழற்காற்று யாழ்ப்பாணம், விடத்தல் தீவு, மற்றும் மன்னார் ஆகிய இடங்களில் பெரும் அழிவை ஏற்படுத்தின.
1831 – ஐக்கிய அமெரிக்காவில் அடிமைக் கிளர்ச்சியில் ஈடுபட்ட நாட் டர்னர் வேர்ஜீனியாவில் குற்றவாளியாகக் காணப்பட்டு தூக்குத் தண்டனை அறிவிக்கப்பட்டது.
1861 – ஆஸ்திரேலியாவில் மெல்பேர்ணில் முதலாவது மெல்பேர்ண் கிண்ணக் குதிரைப் பந்தயப் போட்டி ஆரம்பமாயிற்று.
1895 – தானுந்தின் முதலாவது அமெரிக்கக் காப்புரிமத்தை ஜோர்ஜ் செல்டன் பெற்றார்.
1927 – நமது சாலைகளின் தானியங்கி போக்குவரத்து விளக்குகள் போக்குவரத்தை முறைப்படுத்த உதவுகின்றன. முதன் முதலில் 1927 ல் பிரிட்டனில் வொல்வர் ஹாம்ப்டன் எனும் பகுதியில் சிவப்பு, பச்சை ஆரஞ்சு நிறம் கொண்ட தானியங்கி போக்குவரத்து விளக்குகள் அமைக்கப்பட்டன.
1932 – பொப்பிலி அரசர் திரு. ரவு சுவட்ட சல்லபதி ராமகிருஷ்ண ரங்காராவ் தலைமையில் நீதிக்கட்சியின் 5 ஆவது அமைச்சரவை பதவியேற்ற நாள்
1935 – மொனோபொலி மட்டை ஆட்டம் முதன் முதலில் பாக்கர் சகோதரர்கள் என்ற நிறுவனத்தினால் வெளியிடப்பட்டது.
1940 – பிராங்கிளின் ரோசவெல்ட் ஐக்கிய அமெரிக்காவின் அதிபராக மூன்றாவது தடவையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1945 – நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தினர் மீதான வழக்கு விசாரணை டில்லி செங்கோட்டையில் ஆரம்பமானது.
1965 – ரொடீசியாவில் அவசரகாலச் சட்டம் நடைமுறைக்கு வந்தது.
1971 – இன்ரெல் நிறுவனம் உலகின் முதல் நுண்செயலியான 4004 இனை வெளியிட்டது.
1987 – தென்னாபிரிக்காவில் 24 ஆண்டுகால சிறைவாசத்தின் பின்னர் கொவான் உம்பெக்கி சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
1996 – பாகிஸ்தான் அதிபர் பரூக் அகமது கான் பிரதமர் பெனாசீர் பூட்டோ தலைமையிலான அரசைக் கலைத்தார்.
1999 – இலங்கைப் படைகளுக்கெதிராக விடுதலைப் புலிகள் தொடுத்த ஓயாத அலைகள் மூன்று நடவடிக்கையின் முதலாவது கட்டம் ஏ-9 நெடுஞ்சாலையின் தெற்குப்புறமாக விளக்குவைத்த குளம் என்ற பகுதி கைப்பற்றப்பட்டதுடன் முடிவுக்கு வந்தது.
2006 – 148 ஷியா முஸ்லிம்களை 1982இல் கொன்றதாக தொடரப்பட்ட வழக்கில் இடைக்கால ஈராக் அரசின் சிறப்பு நீதிமன்றம் முன்னாள் அதிபர் சதாம் ஹுசேனுக்கு மரண தண்டனை தீர்ப்பு அளித்தது – See more at: http://www.tamilnews.cc/news.php?id=46412#sthash.l565Nj72.dpuf