Home » பொது » வரலாற்றில் இன்று: நவம்பர் 4
வரலாற்றில் இன்று: நவம்பர் 4

வரலாற்றில் இன்று: நவம்பர் 4

1333 – ஆர்னோ ஆறு பெருக்கெடுத்து வெள்ளம் பரவியதில் இத்தாலியின் புளோரென்ஸ் நகரில் பெரும் சேதம் ஏற்பட்டது.
1576 – ஸ்பானியப் படைகள் பெல்ஜியத்தின் ஆண்ட்வேர்ப் நகரை கைப்பற்றினர். மூன்று நாட்களில் இந்நகரம் பெரிதும் சேதப்படுத்தப்பட்டது.
1847 – Chloroform கண்டுபிடிக்கப்பட்டது. அறுவை சிகிச்சைகளில் மயக்கமூட்டுவதற்காகப் பயன்படும் அந்த மருந்தைக் கண்டுபிடித்தவர் சர் ஜேம்ஸ் சிம்ப்சன்.
1861 – வாஷிங்டன் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது.
1869 – அறிவியல் இதழ் நேச்சர் முதற்தடவையாக வெளியிடப்பட்டது.
1918 – முதலாம் உலகப் போர்: இத்தாலியிடம் ஆஸ்திரியா-ஹங்கேரி அரசு சரணடைந்தது.
1918 – 40,000 கடற்படையினர் கீல் துறைமுகத்தைக் கைப்பற்றியதை அடுத்து ஜெர்மானியப் புரட்சி தொடங்கியது.
1956 – அக்டோபர் 23 இல் ஆரம்பமான ஹங்கேரியப் புரட்சியை முறியடிக்க சோவியத் படைகள் ஹங்கேரியை முற்றுகையிட்டன. ஆயிரக்கணக்கான ஹங்கேரியர்கள் கொல்லப்பட்டு லட்சக்கணக்கானோர் நாட்டை விட்டு வெளியேறினர்.
1966 – இத்தாலியின் புளோரென்ஸ் நகரத்தின் மூன்றில் இரண்டு பகுதி வெள்ளப் பெருக்கில் அழிந்தது. 113 பேர் கொல்லப்பட்டனர். பல பெறுமதியான ஓவியங்களும் நூல்களும் அழிந்தன.
1967 – நடிகர் எம். ஜி. ராமச்சந்திரன் கொலை முயற்சி வழக்கில் நடிகர் எம். ஆர். ராதாவுக்கு ஏழு ஆண்டுக் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.
1979 – ஈரானியத் தீவிரவாதிகள் டெஹ்ரானில் அமெரிக்கத் தூதராலயத்தை முற்றுகையிட்டு 53 அமெரிக்கர்கள் உட்பட 90 பேரை பணயக்கைதிகளாகப் பிடித்தனர்.
1984 – நிக்கராகுவாவில் இடம்பெற்ற தேர்தல்களில் சண்டினீஸ்டா முன்னணி வெற்றி பெற்றது.
2004 – ஐவரி கோஸ்டில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரில் 12 பிரெஞ்சுப் படையினர் மற்றும் 3 ஐநா கண்காணிப்புக் குழு உறுப்பினர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். – See more at: http://www.tamilnews.cc/news.php?id=65186#sthash.xRAw0kyL.dpuf

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top