· கல்வியின் அடிப்படையான இலட்சியமே மனதை ஒரு முகப்படுத்துவதுதான். மனதை ஒரு முகப்படுத்துகிற அளவுக்கு அறிவு வளர்ச்சியும் அதிகமாகும்.
· கல்வி, தன்னம்பிக்கை இவற்றின் மூலமே நம்முன் மறைந்திருக்கும் தெய்வீக சக்தியை நாம் வெளிபடுத்த முடியும்.
· ஆயிரம் முறை இடறி விழுவதன் மூலம்தான் நல்ல ஒழுக்கத்தை உறுதியாக நிலை நிறுத்த முடியும்.
· ஒருவனுடைய உண்மைத் தன்மையை ஆராய வேண்டின் அவனது பெருஞ் செயல்களைப் பார்க்க வேண்டாம்; அவன் தன் சாதாரண காரியங்களை எங்ஙனம் செய்கிறான் என்பதை கவனிக்க வேண்டும். அவை தாம் ஒருவனுடைய உண்மைத் தன்மையை வெளிகாட்டும். சில சமயங்களில் கயவரும் புகழ்பெறுவதுண்டு. எந்த நிலையிலும் பெருந்தன்மையுடன் நடப்பவனே உண்மையில் பெரியோனாவான்.
· நம் எண்ணங்களே நம் தன்மையை உண்டாக்கியிருக்கின்றன. இரும்பின் மேல் சம்மட்டி அடிக்கும் ஒவ்வோர் அடியும் அதன் உருவத்தைத் தீா்மானம் செய்வது போல்,நம் ஒவ்வோர் எண்ணமும் நம் தன்மையைத் தீர்மானம் செய்கிறது. வார்த்தைகள் அவ்வளவு முக்கியம் அல்ல; எண்ணங்களே மிக முக்கியமானவையாகும்.