சிரியா அல்லது சிரிய அரபுக் குடியரசு மத்தியக்கிழக்கில் அமைந்துள்ள ஒரு நாடாகும். இது மேற்கில் லெபனானையும்,தென்மேற்கில் இசுரேலையும், கிழக்கில் ஈராக்கையும், வடக்கே துருக்கியையும் எல்லையாகக் கொண்டுள்ளது. நவீன சிரியா 1936 இல் பிரான்சிடமிருந்து மக்கள் ஆணை மூலம் விடுதலைப் பெற்றது. ஆனாலும், அதன் இருப்பை கி.மு. நான்காம் நூற்றாண்டுக்கு முன்பு வரை காணலாம். இதன் தலைநகர் டமாஸ்கஸ் உலகின் பழைய நகரங்களில் ஒன்றாகும். சிரியா 1961-ம் ஆண்டு ஐக்கிய அரபுக் குடியரசில் இருந்து வெளியேறியது.
கி.பி. 1884 – ஆம் ஆண்டு துருக்கியின் ஸ்மீர் என்னும் ஊரில் இஸ்மெட்இனோனு (Ismet Inonu) பிறந்தார். கல்வியை முடித்த இவர் உதுமானிய படையில்சேர்ந்தார். படையில் பல பதவி உயர்வுகளைப் பெற்று 1918 வாக்கில்போர்த்துறையின் துணைச் செயலராகப் பதவி வகித்தார். 1920 ஆம் ஆண்டுஎட்ரின் தொகுதியிலிருந்து உதுமானிய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பின்னர், தேசிய இராணுவத்தின் படைத்தலைவராக பதவி வகித்தார். அப்போது மேற்கு அனடோனியாவைக் கைப்பற்றிக் கொண்ட கிரேக்கப் படைகள் மீது இரு போர்களை நடத்தி அவர்களை விரட்டியடித்தார். இப்போர் நடைபெற்றஇடம் இனோனு ஆகும். தாம் பெற்ற வெற்றியின் நினைவாகவே இவர் தம்மைஇனோனு இஸ்மத் எனக் கூறிக்கொண்டார்.
அங்காராவில் அமைக்கப்பெற்ற தேசிய பெருமன்றத்தின் ஆட்சியில் 1922 –ஆம் ஆண்டு இவர் வெளியுறவு அமைச்சராக பதவி ஏற்றார். 1923 – ஆம் ஆண்டுஅக்டோபர் 29 ஆம் நாள் துருக்கி குடியரசு நாடானது. குடியரசு துருக்கியின்முதல் தலைமை அமைச்சராக 1923 முதல் 1937 வரை பதவி வகித்தார்.
1938 ஆம் ஆண்டு முஸ்தபா கெமால் ஆடாடர்க் மரணமடைந்த பின்,இவர் குடியரசு தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1946 – இல் மக்களாட்சிகட்சியை உருவாக்கி ஊக்கம் கொடுத்தார். 1950 –ஆம் ஆண்டு தேர்தலில்மக்களாட்சி கட்சி குடியரசு கட்சியைத் தோற்கடித்தது. 1950 முதல் 1960 வரைஇவர் எதிர்க் கட்சித் தலைவராக இருந்தார்.
1960 இல் ராணுவப் புரட்சி ஏற்பட்ட பின் 1961 க்கும் 1965 க்கும்இடைப்பட்டக் காலத்தில் மூன்று கூட்டாட்சி அரசுகளை அமைத்தார். 1965, 1969 –ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் இவரது கட்சிபடு தோல்வியடைந்தது. இவரை எதிர்த்த குடியரசுக் கட்சியினர், 1967 – இல் கட்சியை உடைத்து புதிய கட்சியைத் துவக்கினர். 1972 – ஆம் ஆண்டு இவர்கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.
துருக்கியை முடியாட்சிக் கொடுமைகளிலிருந்து விடுவித்துகுடியரசாக்கிய முஸ்தாபா கெமால் ஆடாடர்குக்கு உறுதுணையாக விளங்கியஇவர் 1973 – ஆம் ஆண்டு டிசம்பர் 25 – ஆம் நாள் மரணமடைந்தார்.
துருக்கிநாடு அமைந்துள்ள ஆசியாவின் பகுதியைப் பொது ஆண்டுக்கு 1900 ஆண்டுகளுக்கு முன்பு ஹிட்டைட் அரச வமிசம் ஆட்சி செய்தது. ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு பாரசீக அரசு இப்பகுதியைத் தனதாக்கிக் கொண்டது. அதன்பின் ரோமப் பேரரசு கைப்பற்றி, கான்ஸ்டான்டைன் பேரரசர் காலத்தில் (இன்றைய இஸ்தான்புல்) கான்ஸ்டான்டிநோபில் கிழக்கிந்திய ரோமப் பேரரசின் தலைநகர் ஆக்கப்பட்டது. ரோமானிய அரசுக்குப் பின் பைஜான்டின் சாம்ராஜ்யத்தின் பிடியில் சிக்கி, அதன்பின் ஒட்டோமான் பேரரசின் ஆட்சியில் வந்தது.
ஓட்டோமான் பேரரசு 600 ஆண்டுக்காலம் ஆண்டது. இக்காலத்தில் தென்கிழக்கு அய்ரோப்பியப் பகுதிகளையும் தன்அரசில் இணைத்துக் கொண்டது. இப்பேரரசு தன் ஆதிக்கத்தில் மேலைநாடுகளான சிரியா, இசுரேல், ஈராக், அரேபியாவின் பெரும் பகுதி, எகிப்து, வடஆப்ரிகாவில் அல்ஜீரியா போன்ற பகுதிகளையும் தன்வசம் வைத்துக்கொண்டிருந்தது. 1922இல் ஒட்டோமான் பேரரசு சீர் குலைந்து துருக்கிக் குடியரசும் பற்பல சிறுநாடுகளுமாகச் சிதைந்தது.
1909இல் இளந்துருக்கியரின் புரட்சி வெடித்தது. அதன் விளைவாக அரசமைப்புச் சட்டம் அமைத்திடவும் தரமான சிந்தனையுள்ள அரசு அமைத்திடவும் ஏற்பாடானது. முதல் உலகப்போரில் ஜெர்மனியுடன் கூட்டு வைத்திருந்த காரணத்தால் தனது அரசின் பெரும் பகுதியை நாடு இழந்தது.
1923இல் துருக்கிக் குடியரசு பிரகடனப் படுத்தப்பட்டது. துருக்கியின் தந்தை (அத்தாதுர்க்) எனப் போற்றப்படும் முஸ்தபாகெமால் பாட்சாவின் தலைமையில் அரசு அமைந்தது. அரசராகவும் மதகுருவாகவும் ஆட்சி செய்து ஒரே நபர் அதிகாரம் செய்துகொண்டிருந்த காலிஃபா முறையை கமால்பாட்சா ஒழித்தார்.
ஏராளமான சமூகச் சீர்திருத்தங்களையும் சமுதாய மாற்றத்தையும் ஏற்படுத்தி அய்ரோப்பாவின் நோயாளி துருக்கி என்று இருந்த பெயரை மாற்றினார். அய்ரோப்பிய பாணி உடையை ஆணும் பெண்ணும் அணியும் மாற்றத்தை உண்டாக்கினார். இங்கிலீஷ் எழுத்துகளில் துருக்கி மொழியை எழுதும் முறையைக் கொண்டு வந்தார். இசுலாமியர்கள் துருக்கிக் குல்லாய் அணிவதை மாற்றி அய்ரோப்பிய பாணித்தொப்பி அணிவதையும் பெண்கள் புர்க்கா அணிவதையும் தடைசெய்து, மாற்றினார்.
அய்ரோப்பிய, ஆசியக் கண்டத்தின் எல்லைநாடாக, கருங்கடல் கரையிலும் ஏமன் கடலிலும், மத்தியதரைக்கடலிலும் தனது எல்லைகளைக் கொண்டு கிரீசுக்கும் சிரியாவுக்கும் இடையில் அமைந்துள்ளது. இதன் பரப்பு 7லட்சத்து 80 ஆயிரத்து 580 சதுர கி.மீ. மக்கள் தொகை 7 கோடியே 4லட்சம் எல்லாரும் சன்னி இசுலாமிய மதத்தவர். ஆட்சிமொழி துருக்கி. 87 விழுக்காட்டினர் கல்வியறிவு பெற்றவர்கள்.
29.10.1923இல் விடுதலை நாள். குடியரசு நாடு. குடியரசுத் தலைவரும் பிரதமரும் உள்ளனர். 10 விழுக்காடு மக்களுக்கு வேலை கிட்டவில்லை.