நாட்டின் பெயர்:
செக் குடியரசு (Czech republic)
அமைவிடம்:
மத்திய ஐரோப்பா
எல்லைகள்:
வட கிழக்கு – போலந்து
கிழக்கு – சுலோவாக்கியா
தெற்கு – ஒஸ்திரியா
மேற்கு, வட மேற்கு – ஜேர்மனி
தலைநகரம்:
பிராக் அல்லது பிரகா (Prague / Praha)
அலுவலக மொழிகள்:
செக் மற்றும் சுலோவாக்
அங்கீகரிக்கப்பட்ட ஏனைய மொழிகள்:
பல்கேரியன், குரோசியன், ஜெர்மன், கிரேக்க மொழி, ஹங்கேரியன், பொலிஷ், ரோமானி, ரஷ்யன், ருசின், செர்பியன், மற்றும் உக்ரேனியன்.
இனப் பிரிவுகள்:
ஷெக்ஸ் 90.5 %
மோராவியன்ஸ் 3.7 %
சுலோவாக்ஸ் 1.9 %
ஏனையோர் 3.7 %
சமயங்கள்:
ரோமன் கத்தோலிக்கம் 26,8 %
புரட்டஸ்தாந்துகள் 2,1 %
ஏனையோர் 3,3 %
வகைப்படுத்த முடியாதவர் 8,8 %
நாத்தீகர் 59 %
கல்வியறிவு:
99 % *(ஐரோப்பாவிலேயே கல்வியறிவு அதிகம் உள்ள நாடுகளுள் ஒன்று)
ஆயுட்காலம்:
ஆண்கள் 73,9 வருடங்கள்
பெண்கள் 80,6 வருடங்கள்
அரசாங்க முறை:
பாராளுமன்ற ஜனநாயகக் குடியரசு
ஜனாதிபதி:
வக்ளவ் கிளாவ்ஸ்
பிரதமர்:
மிரெக் டொபொலானெக்
செக்கோஸ்லோவாக்கியாவில் இருந்து செக் குடியரசாகப் பிரிந்த தேதி:
1.1.1993
பரப்பளவு:
78,866 சதுர கிலோ மீட்டர்கள்.
சனத்தொகை:
10,535,811 (2011 மதிப்பீடு)
நாணயம்:
செக் கொருனா(Czech koruna / CZK)
இணையத் தளக் குறியீடு:
.cz
சர்வதேசத் தொலைபேசிக் குறியீடு:
00 + 420
விவசாய உற்பத்திகள்:
கோதுமை, உருளைக்கிழங்கு, இனிப்பு(சீனி)கிழங்கு, பழங்கள், பூக்கள், பன்றி மற்றும் பன்றி இறைச்சி சம்பந்தமான பொருட்கள், கோழி இறைச்சி, கோழி முட்டை.
தொழில் மற்றும் தொழிற்சாலை உற்பத்திகள்:
வாகனங்கள், உலோகங்கள் தயாரிப்பு, இயந்திரங்கள், மின்சார உபகரணங்கள், கண்ணாடி, இராணுவத் தளபாடங்கள்(ஆயுதங்கள்)
ஏற்றுமதிகள்:
இயந்திரங்கள், வாகன உதிரிப் பாகங்கள், எரிபொருட்கள், இரசாயனப் பொருட்கள்.
இயற்கை வளங்கள்:
நிலக்கரி, மரம், லிக்னைட், யுரேனியம், மக்னசிட்
நாட்டைப் பற்றிய சிறு குறிப்புகள்:
கடந்த 2004 ஆம் ஆண்டுவரை கிழக்கு ஐரோப்பியப் பொருளாதாரக் கொள்கையைக் கடைப்பிடித்து வந்த மேற்படி நாடு 2004 ஆம் ஆண்டு தொடக்கம் ஐரோப்பிய ஒன்றியத்தில் (EU) இணைந்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினர் ஆன போதிலும் ‘யூரோ’ நாணயத்தில் இணையவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடுகளில் கல்வியறிவிலும், தொழில்நுட்ப வளர்ச்சியிலும் உயர்ந்து நிற்கும் நாடு.
வருடம் ஒன்றிற்கு பத்து லட்சத்திற்கு மேற்பட்ட மகிழுந்துகளை(கார்களை) தயாரிக்கும் நாடு.