உறுதிப்படுத்தினார், விரிவாக்கினார்
தமது நூலக மாடிப்படியில் இடறிவிழுந்து, ஹூமாயூன் திடீரென முடிவுற்றார். தந்தையின் மறைவுச் செய்தி வந்தபொழுது அக்பர் போர்க்-களத்தில் இருந்தார்; வயது 14 நடந்து கொண்டி-ருந்தது. அவருடைய காப்பாளராக இருந்த பைராம்-கான், 1556 பிப்ரவரியில் எளிமையான முறையில் உடனடியாக முடிசூட்டு விழா நடத்தினார். பஞ்சாபில் குர்தாஸ்பூர் மாவட்டத்தில், கலனார் எனும் இடத்தில் இது நடந்தது.
சிறுவனை வீழ்த்தி-விட்டு, அரசைக் கைப்பற்றப் போட்டியாளர்கள் கிளம்பினார்கள். அவர்களில் முக்கியமானவர், ஹெமு. ஆக்ராவையும் டெல்லியையும் கைப்பற்றி, பழைய விக்ரமாதித்தன் பட்டத்தைத் தனக்குச் சூடிக்-கொண்டார், ஹெமு. ஆகையால், பைராம்-கானின் முடிவின்படி அக்பர் போருக்குக் கிளம்பினார். 1556 நவம்பரில் பானிப்பட்டில் போர் நடந்தது. ஹெமு தோற்றார், கொல்லப்பட்டார். அக்பரின் ஆட்சி உறுதிப்-பட்டது. குவாலியர், ஜான்பூர் ஆகியனவும் இணைக்கப்பட்டன.
பைராம்கானை, காப்பாளர் நிலையில் இருந்து நீக்கிவிட்டுப் பதினெட்டாம் வயதில் அக்பர் முழு ஆட்சிப் பொறுப்பையும் ஏற்றார். அக்பருடைய தாய், மற்றும் செவிலித்தாய் ஆகியோரை மய்யமாக வைத்துக் குழுவாகச் சிலர் கூடினர்; பூசலிலும் அதிகாரம் செலுத்துவதிலும் ஈடுபட்டனர். செவிலித்தாயின் மகன் ஆதம்கான், அவர்களில் ஒருவர், அக்பரின் நம்பிக்கைக்குரிய அமைச்சர் சம்-சுத்தீன் என்பவரை, அரண்மனைக்குள்ளாகவே ஆதம்கான் கொன்றான். அக்பரால் இதைப் பொறுக்க-முடியவில்லை. தனது முட்டியால் தாக்கிக் கொலைகாரனை வீழ்த்தினார்; பின்பு அவனைக் குண்டுக்கட்டாகக் கட்டி, கோட்டைச் சுவரின் மேல் இருந்து உருட்டிவிடச் செய்தார். இவ்வாறு, ஆட்சிக்குக் கேடு-செய்யும் உள்பூசலை 20 ஆம் வயதில் முடிவுக்குக் கொண்டுவந்தார்.
கிட்டத்தட்ட தம் இறுதிக் காலம் வரை அக்பர் தம் அரசின் எல்லையை விரிவுபடுத்திக்-கொண்-டேயிருந்தார். போரிட்டு வெற்றி-பெற்றோ, ஒப்பந்தங்களின் மூலமோ புதிய நாடுகளை இணைத்தார். புதிதாக இணைக்கப்பட்ட அரசு-களின் ஆட்சிப் பொறுப்பை, அவற்றை முன்பு ஆண்டு-கொண்டிருந்த-வர்களிடமே பெரும்-பாலும் விட்டுவைத்தார்.
மாளவம், கோண்டுவானா ஆகிய-வற்றை வென்ற பின்பு காபூலில் தம் ஒன்றுவிட்ட சகோ-தரரின் கிளர்ச்சியை ஒடுக்கினார்.
ரஜபுத்திர அரசுகளைத் தம் மேலாதிக்கத்தின் கீழ் கொண்டுவர அக்பர் விரும்பினார். அவருடைய விருப்-பத்திற்குப் பணிந்த ஜெய்பூர் அரசரின் மகளை மணந்தார். மேவார் நாட்டின் ராணா பணிய மறுத்தார். அவருடைய சித்தூர் கோட்-டையை அக்பரின் படை முற்றுகையிட்டது. கடும் போருக்குப் பின்பு, பெரும் சேதம் உண்டாக்கி, அதைக் கைப்பற்றியது (1568). ஆனால், ராணா உதய்சிங் தப்பி-விட்டார்.
உதய்பூர் என்ற புதிய நாட்டை உருவாக்கினார். இருப்-பினும், ரன்தம்பூர், பிகானீர், ஜெய்-சால்மர் ஆகியவற்றின் அரசர்கள் அக்பரின் மேலாதிக்கத்தை ஏற்றனர். ராஜபுடானா எனும் புதிய மாநிலம் (சுபா) உருவாயிற்று. அதற்கு ஆஜ்மீர் தலைநகர். ரஜபுத்திர அரசர்களும் இளவரசர்-களும் மொகலாயப் பேரரசில் படைத்தலைவர்களாகவும், சிறந்த செல்வாக்கான நிர்வாகிகளாகவும் ஆக முடிந்தது.
குஜராத், பிஹார், பெங்கால், காஷ்மீர், சிந்து, ஒரிசா, காந்தஹார், பிரார் (விதர்பா), அகமது நகர், அசிர்கார் ஆகிய பகுதிகளையும் அக்பர் தமது பேரரசில் சேர்த்தார். மொத்தம் 15 சுபாக்கள் (மாநிலங்கள்) அவருடைய ஆட்சியின் கீழ் இருந்தன.
சிறந்த நிருவாகம்
துணிந்த திறமையான போர்க்கள வீரராகவும் தளபதியாகவும் விளங்கிய அக்பர், மக்கள் நலம் நாடிய சிறந்த ஆட்சியாளர் என்பதையும் மெய்ப்பித்தார். முஸ்லீம்கள் அல்லாதவர் மீதான ஜிசியா எனும் வரியையும், இந்துக்கள் மீதான யாத்திரை வரியையும், போரில் பிடிக்கப்பட்டவர்களை அடிமைகளாக்கும் முறையையும் நீக்கி மக்களின் ஆதரவைப் பெற்றார்.
மத, இன வேறுபாடு பார்க்காமல், நிருவாகத்தை நன்கு நடத்துகிறவர்களைப் பதவியில் அமர்த்தினார். ராஜா தோடர்மால் அக்பரின் ஆட்சியைச் சிறக்கவைத்தார். ஹூமாயூனைத் தோற்கடித்து, சுமார் ஆறு ஆண்டுக்காலம் முற்போக்கான ஆட்சி நடத்தியவர், ஆஃப்கானியரான ஷெர்ஷா. அவரைப் பின்பற்றி நிலவரியை ராஜா தோடர்மால் சீராக்கினார். நிலவுடைமையின் பரப்பு, நிலத்தின் வளம், பயிரின் தன்மை ஆகியவற்றிற்குத் தக வரி நிர்ணயிக்கப்பட்டது. கட்டவேண்டிய வரியின் அளவு உறுதியான-தால், வசூல் செய்வதில் கொடுமையும் ஊழலும் ஒழிந்தன.
அக்பர் ஒரு சிறந்த கலைஞர் ஆவார். அவர் ஒரு சிறந்த போர் வீரர் ,கலைஞானி ,தச்சு வேலை, கொல்ல வேலைகள் தெரிந்திருந்ததோடு, போர்க்கருவிகளையும் கலை நுணுக்கத்துடன் சேமித்து வைத்துக் கையாளத் தெரிந்த போர் வீரரும் ஆவார். அவர் பேரரசர் மட்டுமல்லாமல் பரந்த மனம் படைத்தவர். அவர் சிறந்த கண்டுபிடிப்பாளர்.
விலங்குகளைப் பயிற்றுவிக்கும் நல்ல பயிற்சியாளர். தனது ஆட்சியின் போது அவர் ஆயிரக்கணக்கான காட்டு வகைப் பூனைகளைச் சிறந்த முறையில் தானாகவே பயிற்றுவித்தார். அவர் சிறந்த போர்க் காலணி நாடாக்களைத் தயாரிப்பதில் வல்லவர். அவர் சிறந்த தொழில் நுட்ப கலைஞர் மற்றும் தத்துவஞானியும் ஆவார்.கலைகளுக்கு அவர் ஆற்றிய சேவை காலம் காலமாக சொல்லப்படவேண்டிய ஒன்று ஆகும். அக்பர் பல இலக்கியங்களை ஒரு சேரத் தொகுப்பதற்கு வழி வகை செய்தார்.
அவைகளில் அக்பர் நாமா அயினி அக்பரி போன்றவைகளும் அடங்கும். மொகலாய வழியில் வந்து சேர்ந்த பல கலைகளைப் பற்றிய தகவல்களையும் தொகுப்பதற்கு வழி வகை செய்தார். பல கலை நுணுக்கங்களுடன் பலரும் புகழும் கட்டங்களை கட்டுவித்தார். அவர் முதன் முதலில் இழையில் ஆன வீட்டை கட்டினார். மற்றும் அசையும் உருவ முறைகளையும் கண்டு பிடித்தார் .அக்பர் மத சம்பந்தமான வாதங்களை முஸ்லிம் அறிஞர்களுக்கும் மற்றும் மதத்தினருக்கும் சீக்கிய மதத்தினருக்கும், முஸ்லிம் அறிஞர்களுக்கும் இந்து சமயத்தினருக்கும் , இடையே நடத்தினார் .
கார்வக கொள்கையை உடையவர்களிடமும் மற்றும் போர்த்துக்கலில் இருந்து வந்த யேசுசபைக் கிறித்தவ மதத்தினருடனும், முஸ்லிம் மத அறிஞர்களுடனும் வாதம் செய்ய வைத்தார். அவர் தனது புதிய மதக் கொள்கையை “தீன் இலாஹி” என பெயர் இட்டு அழைத்தார். அதற்கு “தெய்வீக நம்பிக்கை” என்று பொருள் ஆகும் . இந்த மதம் தனித்துவம் வாய்ந்த கொள்கைகளை உடையதாக இருந்தது . அதன் பிறகு இந்த மதம் சார்ந்த கொள்கைகள் மறைந்து போயின.
சுமார் 50 ஆண்டுகள் ஆட்சிசெய்து, 1605 அக்டோபர் 27 இல் புகழ் பெற்ற பெரு மன்னராக மறைந்தார். அவருடைய மனைவி அக்பரின் மறைவுக்கு பின் இந்த மத கொள்கையைப் பின்பற்றினார்.