தீபனும் திவ்யாவும் கணவன் மணைவி.
இருவரும் தனிமையில் பேசி கொண்டிருக்கும் போது
தீபன் கூறினான்.
நான் கல்யாணத்துக்கு முன்னடி
ஒரு பெண்ணை காதலித்தேன் என்றான்.
உடனே திவ்யா,
இதையேன் கல்யாணத்துக்கு முன்னடியே சொல்ல,
இப்படி என்னை ஏமாத்திட்டிங்களே.!
உங்க கூட இனி என்னால வாழ முடியாது
என கூறி கோபத்தோடு தன் தாய் வீட்டுக்கு
போய் விட்டாள் திவ்யா.
தீபன் எவ்வளவோ எடுத்து சொல்லியும்
திவ்யா கேட்கவில்லை.
பிடிவாதமாக இருந்தாள்.
மனைவி பிரிந்த துக்கத்தில் அதிகமாக குடித்து
மரண படுக்கைக்குள் விழுந்தான் தீபன்.
அவன் மரண படுக்கையில் இருக்கும் நேரம்
தன் மனைவி திவ்யாவுக்கு ஒரு கடிதம் எழுதி
அதை தன் மனைவியிடம் கொடுத்து விடும்படி கூறினான் தீபன்.
தீபன் கொடுத்த கடிதத்தை திவ்யாவிடம்
கொடுத்து விட்டு தீபனை வந்து பார்த்து விட்டு
போகும்படி கூறினார்கள்.
ஆனால் திவ்யா,
அதை காதில் வாங்காமல் கடிதத்தை தூக்கி
பழைய பெட்டிக்குள் போட்டாள். நாட்கள் சென்றது.
திவ்யாவின் அண்ணனுக்கு திருமணம் ஆனது.
அண்ணி வந்த சில நாட்களிலையே திவ்யாவை
சாடைமடையாக பேச சண்டையிட ஆரம்பித்தாள்.
அப்போது தான் திவ்யாவுக்கு புரிந்தது,
தாய் வீடு என்றைக்கும் ஒரு பெண்ணுக்கு நிரந்தரமில்லை என்று.
தன் கணவனை நினைக்க ஆரம்பித்தாள்.
அப்போது அவன் எழுதிய கடிதம் நினைவுக்கு வந்தது.
இரும்பு பெட்டியிலிருந்து எடுத்து கடிதத்தை படித்தாள் திவ்யா.
அன்புள்ள மனைவிக்கு,
நான் தற்போது மரண படுக்கையில் இருக்கிறேன்
மரணிக்கிற நேரத்தில் யாரும் பொய் கூற மாட்டார்கள்.
நான் கூறுவது உண்மை.
நான் திருமனத்திற்கு முன்பே
உன்னை காதலிக்க ஆரம்பித்து விட்டேன்.
அதை தான் நான் திருமனத்திற்கு முன்பே
ஒரு பெண்ணை காதலித்தேன்
அது நீ தான் என்பதற்குள் நீ சண்டையிட்டு சென்று விட்டாய்.
நீ இக்கடிதத்தை படிக்கும் நேரம் நான் மரணித்து இருப்பேன்.
என்று தீபன் எழுதிய கடிதத்தை படித்து முடித்து,
அவசரபட்டுட்டேனே என அழ ஆரம்பித்தாள் திவ்யா.
நீதி : “சரியாக கூறபடாத தகவல்களும்
அவசரபட்டு எடுக்கும் முடிவுகளும் அவஸ்தைகளை தேடி தரும்”