தீபம் ஏற்றும்போது கிழக்குத் திசையில் உள்ள முகத்தை மட்டுமே ஏற்றினால்நம்மைத் தொடரும் துன்பங்கள் நீங்குவதுடன் மக்களிடையே நன்மதிப்பும்கிடைக்கும். மேற்குத் திசையில் உள்ள முகத்தைமட்டும் ஏற்றினால்சகோதரர்களிடையே ஒற்றுமை ஏற்படும்; கடன் தொல்லைகள் விலகும்.
சர்வ மங்களமும், பெரும் செல்வமும் வேண்டுவோர் வட திசையில் உள்ளமுகத்தை ஏற்ற வேண்டும். தென் திசையில் உள்ள முகத்தை ஒருபோதும்ஏற்றக்கூடாது. எதிர்பாராத தொல்லைகளும், கடன்களும் பாவங்களும் கூடும்.
ஏதோ இருக்கும் எண்ணையை ஊற்றி விளக்கு ஏற்றுதல் என்பது மிகவும் தவறான ஒன்று. கிரக தோஷங்கள் விலகி சுகம் பெற சுத்தமான பசு நெய்யினால் தீபம் ஏற்ற வேண்டும். கணவன் மனைவி உறவு நலம் பெறவும், மற்றவர்களின் உதவி பெறவும் வேப்பெண்ணை தீபம் உகந்தது.
அவரவர்கள் தங்கள் குல தெய்வத்தின் முழு அருளையும் பெற வழி செய்வது மணக்கு எண்ணை தீபம். எள் எண்ணை (நல்லெண்ணை) தீபம் என்றுமே ஆண்டவனுக்கு உகந்தது;நவக்கிரகங்களைத் திருப்தி செய்யவும் ஏற்றது.
மனதில் தெளிவும், உறுதியும் ஏற்பட வேண்டுவோர் சுத்தமான தேங்காய் எண்ணை கொண்டு தீபமேற்ற வேண்டும்.செல்வங்கள் அனைத்தையும் பெற விரும்புவோர் வேப்பெண்ணை,இலுப்பை எண்ணை, நெய் மூன்றையும் கலந்து தீபம் ஏற்ற வேண்டும்.
மந்திர சித்தி பெற வேண்டுவோர் விளக்கெண்ணை, இலுப்பை எண்ணை, நெய்,நல்லெண்ணை, தேங்காய் எண்ணை ஆகிய ஐந்து எண்ணைகளையும் கலந்து விளக்கேற்ற வேண்டும்.
கடலை எண்ணை, கடுகு எண்ணை, பாமாயில் போன்றவைகளைக் கொண்டு ஒருபோதும் விளக்கேற்றவே கூடாது. மனக்கவலையையும்,தொல்லைகளையும்,பாவங்களையுமே பெருக்க வல்லவை இந்தஎண்ணையின் தீபங்கள்.
1.கணபதிக்கு தேங்காய் எண்ணெய் உகந்ததாகும்.
2.முருகனுக்கு நெய் தீபம் உபயோகப்படுத்துவது நல்லது.
3.ருத்ராரி தேவதைக்கு இலுப்பை எண்ணெய் ஏற்றது.
4.தேவிக்கு ஐந்து வகை எண்ணெய் உபயோகிக்கலாம்.
5.நாராயணனுக்கு நல்லெண்ணெய் ஏற்றதாகும்.
6.மகாலட்சுமிக்கு நெய் உபயோகப்படுத்தலாம்.
7.சர்வ தேவதைகளுக்கு நல்லெண்ணெய் உகந்தது.
8.குலதெய்வத்திற்கு இலுப்பை எண்ணெய், நெய் மற்றும் நல்லெண்ணெய் இவை மூன்றும் உபயோகிக்கலாம்.
இனி, தீராத வினைகள் தீர, திருக்கோவில்களில் எவ்வளவு தீபம் ஏற்ற வேண்டும் என்று பார்ப்போமா?
1 தீபம். : மன அமைதி
9 தீபங்கள்: நவக்கிரக பிணி நொடியில் அடங்கும்.
12 தீபங்கள்: ஜென்ம ராசியில் உள்ள தோஷம் நீங்கும்.
18 தீபங்கள்:சக்தி தரும் சக்தி தீபம்
27 தீபங்கள்:நட்சத்திர தோஷம் நீங்கும், நல்லன கிட்டும்.
48 தீபங்கள்: தொழில் வளரும், பயம் நீங்கும்.
108 தீபங்கள்: நினைத்த காரியம் கை கூடும்
508 தீபங்கள்:திருமணத் தடை நீங்கும்
1008 தீபங்கள்:சந்தான பாக்கியம்.
தீபத்தின் தன்மை :
இருளை அகற்றும். அதற்கு மேல் பக்கம், கீழ் பக்கம் மேல் ஜாதி கீழ் ஜாதி என்ற பேதமில்லை. தீபம் திருமகளின் வடிவம். வெள்ளிக் கிழமையன்று மாலை தீபம் ஏற்றி வைத்து வணங்கினால் அதன் ஜோதியானது அவரவர்கள் விருப்பப்படி அதுவே அம்பிகை அல்லது திருமகள். ஆகவே தான் நாம் நம்முடைய எல்லா நல்ல காரியங்களையும் செய்யும் போது குத்து விளக்கு ஏற்றி வைக்கிறோம். இனி குத்து விளக்கின் தத்துவத்தைப் பற்றி காண்போம்.
தாமரை போன்ற ஆசனம் பிரம்மா. நெடிய தண்டின் நீட்சி மஹா விஷ்ணு, நெய்யேந்தும் அகல் ருத்திரன், திருமுனைகள் யாவும் மஹேஸ்வரன், நுனி சதாசிவன். நெய் – நாதம், திரி -பிந்து, சுடர்- அலை மகள், தீப்பிழம்பு -கலை மகள், ஜோதி – அம்பிகை மலை மகள். எனவே குத்து விளக்கு என்பதே இறைவடிவம்.
குத்து விளக்கின் ஐந்து முகங்கள் அன்பு, அறிவு, உறுதி, நிதானம், பொறுமை என்னும் ஐந்து நல்ல பண்புகளை குறிக்கின்றது. குத்து விளக்கில் ஒரு முகம் மட்டும் ஏற்றினால் மத்திமப்பலன் ஏற்படும், இரண்டு முகங்கள் ஏற்றினால் குடும்ப ஒற்றுமை ஏற்படும், மூன்று முகங்கள் ஏற்றினால் குழந்தை பாக்கியம் கிட்டும், நான்கு முகங்கள் ஏற்றினால் பசு, பூமி, வீடு, வாகனம் அமையும், ஐந்து முகங்களும் ஏற்றினால் அனைத்து வளங்களும் ஏற்படும்.
விளக்கு ஒரு மானிட உருவமும் கூட, பாதம், உடல், கழுத்து, முகம் எனப் பிரிக்கப்பட்டுள்ளன.அதன் ஒளிதான் உயிர். ஐந்து முகங்களும் பஞ்ச பூதங்கள். ஐந்து முகங்களையும் ஏற்றித்தொழுவதே நலம் தரும். முதலில் எண்ணெய் அல்லது நெய் ஊற்றிய பிறகுதான் திரியிட்டு தீபம் எற்ற வேண்டும். இனி தீபங்களைப்பற்றிய மற்ற குறிப்புகளைக் காண்போம்.
தீபம் ஏற்றும் திசையின் பலன்கள்:
கிழக்கு : துன்பம் ஒழியும், கிரகமும் பீடையும் ஒழியும்
மேற்கு: கடன் தொல்லை நீங்கும், சனி பீடை, கிரக தோஷம், பங்காளிப் பகை நீங்கும்.
வடக்கு: திரண்ட செல்வம், மங்களம் பெருகும், திருமணம், கல்வி, சர்வ மங்களம்.
தெற்கு: தீபம் ஏற்றக் கூடாது.
தீபம் ஏற்றும் நேரம்:
காலை : பிரம்ம முகூர்த்தம் 3 மணி முதல் 5 மணி வரை விளக்கேற்ற சர்வ மங்களம் உண்டாகும்.
மாலை : குடும்ப சுகம், புத்திர சுகங்களைத் தரும், நல்ல கணவர் அமைவர், நல்ல வேலை அமையும்.
தீபம் துலக்கும் நாட்கள் மற்றும் அதன் பலன்கள்:
குத்து விளக்கைத் துலக்கி சுத்தப்படுத்தும் பணியினை செய்ய குறிப்பிட்ட நாட்கள் உண்டு
ஞாயிறு, திங்கள், வியாழன், சனி ஆகிய நாட்களில் மட்டும் தான் குத்து விளக்கை தேய்க்க வேண்டும்.
திங்கள் நடு இரவு முதல் புதன் நடு இரவு வரை குபேர தன தாட்சாயணியும், குக குரு தன தாட்சணியும் குத்து விளக்கில் பூரணமாய் குடியிருப்பதாய் கூறப்படுகின்றது. எனவே இந்த நாட்களில் விளக்கினை தேய்த்துக் கழுவினால் இந்த சக்திகள் விலகிப் போகுமென்பது நம்பிக்கை.
வெள்ளியன்று கழுவுவதால் அதில் குடியிருக்கும் குபேர சங்க நிதி யட்சிணி விலகிப் போய் விடும் என்பதும் மக்களின் பரவலான நம்பிக்கை.
ஞாயிறன்று விளக்கைத் துலக்கி தீபம் போடுவதால் கண் சம்பந்தமான நோய்கள் அகலும். மனம் நிலைப்பட திங்கள் அன்று துலக்கி தீபம் ஏற்ற வேண்டும். ‘குரு பார்வை’ இருந்தால் கடினமான வேலைகளையும் எந்தவிதமான பிரச்சினையும் இல்லாமல் எளிதாக செய்ய முடியுமே!.
வியாழன் அன்று தீபமேற்றினால் ‘குருவின் பார்வையும்’- அது தரும் கோடி நன்மையும் நமக்கே கிடைக்கும். வாகன விபத்துக்களைத் தவிர்க்க உதவுவதுதான்
சனியன்று விளக்கு துலக்கி நாம் போடும் தீபம். மற்ற நாட்களில் விளக்கு துலக்காமல் தீபம் போடலாம். விளக்கு துலக்காத நாட்களில் விசேஷமான நாட்கள் வந்தால் விளக்கை நீரில் கழுவித் துடைத்து விபூதி கொண்டு தேய்த்துச் சுத்தமான துணியினால் விளக்கைத்துடைத்து தீபம் ஏற்றலாம்.
பஞ்சமி திதியன்று விளக்கேற்றுவது அகால மரணத்தைத் தவிர்க்கும், புதிதாக நெய்த பருத்தி ஆடையில் அரைத்த சந்தனம், பன்னீர் சேர்த்துத் தடவிக் காய வைத்து, அதை திரியாக்கி வடக்கு முகமாக வைத்து , ‘பஞ்ச தீப’ எண்ணெய் ஊற்றி திருவாதிரை நட்சத்திரத்தன்று தொடர்ந்து ஓராண்டு விளக்கேற்ற நோய்களின் வேகம் குறையும். பல காலம் வராமலிருந்த பணம் தேடி வரும். இது அருந்ததிக்கு சாவித்திரி தேவி அருளிய வாக்கு.
இறைவனுக்கு உகந்த எண்ணெய்:
நெய் : மஹா லக்ஷ்மி
நல்லெண்ணெய் : நாராயணன்
தேங்காய் எண்ணெய்: கணபதி
இலுப்பை எண்ணெய்: ருத்திரபதி, சர்வ தேவதை.
பலன்:
ஆமணக்கு எண்ணெய்: நல்லது நடக்கும். குல தெய்வத்தின் முழு அருள் கிட்டும்
நெய்: மிகச்சிறந்தது. சகல வித சுகத்தையும் தரும். வீட்டின் நலம் பெருகும். அதிலும் பசு நெய் பயன் படுத்துவது மிகவும் உத்தமமானது. தேவர்கள் மற்றும் அனைத்து தேவர்களும் பசுவில் வசிக்கின்றனர். பசுவின் பாலில் இருந்து உருவாகும் நெய்யில் அம்பிகை வாசம் செய்வதாக ஐதீகம். ஆகவே தீபத்தில் பசு நெய் இடுவதால் அது சிவமாகிய ஜோதியுடன் சேர்ந்து சிவசக்தி சொரூபமாகிறது.
நல்லெண்ணெய்: பீடைகள் விலகும், துக்கம் அகலும்.
விளக்கெண்ணெய்: புகழ், பந்த சுகங்கள் கிடைக்கும், வளம், செல்வம் பெருகும்.
வேப்பெண்ணெய்: கணவன் மனைவி உறவு நலம் பெறும், மற்றவர்களின் உதவி கிட்டும்.
வேப்பெண்ணெய், நெய், இலுப்பெண்ணெய் மூன்றும் சேர்த்து விளக்கேற்றினால் செல்வம் உண்டாகும், குல தெய்வத்திற்கு ஏற்றது.
நெய், விளக்கெண்ணெய், வேப்பெண்ணெய், இலுப்பெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகிய ஐந்து எண்ணெய்களும் கலந்து தீபமேற்றினால் தேவியின் அருள் சக்தி கிட்டும்.
கடலை எண்ணெய் : ஊற்றக் கூடாது.
பூஜைக்கு ஏற்ற விளக்கு:
அகல் விளக்கு, வெள்ளி விளக்கு, பஞ்ச லோகத்தால் செய்த விளக்கு.
விளக்கு திரிகளின் வகைகள்:
திரியுடன்எண்ணையிட்டால்தானே தீபம் எரியும்?
எந்த எண்ணையிட்டாலும் விளக்கு எரியும்தான். ஆனால் பலன்…?
நலம் வேண்டி நாம் விளக்கேற்றும்போது அதில் விடும்எண்ணையினால் பலன்கள் நேரெதிராகவும் வாய்ப்புகள் உண்டே?
திரியில்லாமல் தீபம் ஏது?
திரிகளின் வகைகளும் அவை தரும் பலன்கள் பற்றியும் பார்க்கலாமா?
1.சுகங்களைக் கூட்டும் தன்மை கொண்டதுதான் பஞ்சுத்திரி.
2.முற்பிறவியின் பாவங்களை அகற்றி- செல்வத்தைத் தக்க வைத்துக் கொள்ள
வேண்டுமென்றால் தாமரைத் தண்டு திரி போட்டு விளக்கேற்ற வேண்டும்.
3.மழலைப் பேறில்லையே என ஏங்குவோர் வாழைத்தண்டு திரி போட்டுவிளக்கேற்ற வேண்டும்.
4.செய்வினைகள் நீங்கவும், நீடித்த ஆயுள் பெறவும் வெள்ளெருக்குப் பட்டைத் திரியில் விளக்கேற்ற வேண்டும். முழுமுதற் கடவுளான கணேசப்பெருமானுக்கும் உகந்தது இது.
5.தம்பதிகள் மனமொத்து வாழவும் – மகப்பேறு பெறவும் மஞ்சள் நிறங்கொண்ட புதிய திரிபோட்டு விளக்கேற்ற வேண்டும்.
பஞ்சு : பஞ்சுத் திரிதான் விளக்கேற்ற மிகவும் சிறந்தது. மெல்லிய திரிகளாக திரித்து வைத்துக் கொள்ள வேண்டும். திரிக்கும் போது ஒரு பக்கம் மட்டுமே உருட்ட வேண்டும். வீட்டில் மங்களம் பெருகும், சுகங்களைக் கூட்டும்.
தாமரைத்தண்டுத்திரி: தீவிணை போகும், செல்வம் நிலைக்கும்.
வாழைத்தண்டுத்திரி: குழந்தை பாக்கியம், தெய்வக்குற்றமும், குடும்ப சாபமும் நீங்கும். செல்வம் தங்கும்.
வெள்ளெருக்கு: இதன் பட்டையை திரியாக செய்து தீபம் போட்டால் செல்வம் பெருகும் , பேய் விலகும்.( கணேசருக்கு உகந்தது)
மஞ்சள் நிறத்திரி: அம்மனின் அருள் கிட்டும், வியாதி குணம் ஆகும்
புது சிவப்புவண்ணத் திரி: திருமணத்தடை, குழந்தை பாக்கியமின்மை விலகும்.
புது வெள்ளை வண்ணத் திரி: தரித்திரம் அகலும், சுபிட்சம் பெருகும்.
விளக்கை எண்ணெய் இல்லாமல் தானே அனைய விடுவது தவறு. நாமே அமர்த்துவது நல்லது, ஒரு சொட்டு பால் கொண்டோ அல்லது மலர் கொண்டோ அமர்த்துவது உத்தமம். குறிப்பாக வெளியில் செல்லும் போதும் இரவு படுக்கச்செல்லும் போதும் விளக்கை தொடர்ந்து எரிய விடாமல் அமர்த்தா வேண்டும். வாயினால் ஊதி அமர்த்தக் கூடாது.