ஒரு நாட்டு அரசனுக்கு திடீர் என ஒரு யோசனை!
ராஜாவோ நானே வருகிறேன் என்று கிளம்பினார்! அருகாமையில் இருந்த ஒருகாட்டில் அந்த மனிதர் காணப்பட்டார்! ஒரு துறவியை போன்ற தோற்றம்! கந்தலாடைகள்! மரத்தடியில் வாசம்! விறகு வேட்டிகள் தரும் ஏதாவது உணவும் காட்டுக்கனிகளுமே உணவு!
துறவியிடம் அரசன் கேட்டான்! தங்களுக்கு என்ன வேண்டும் என்று!
துறவியோ அரசனிடம் கேட்டார் என்ன தரப்போகிறாய் என்று!
ஒரு வீடு கட்டி, நல்ல துணிமணிகள் தருகிறேன் தினமும் உணவு தருகிறேன் என்றான் அரசன்!
எனக்கு எதற்கு என்று கேட்டார் துறவி!
தங்களை பார்த்தல் மிக வறிய நிலையில் இருப்பதாக தெரிகிறதே என்றான் அரசன் !
அதற்க்கு துறவி நானா வறியவன்? என்னை விட ஒரு வறியவன் உள்ளான் என சொன்னார்! மேலும் எனக்கு ரசவாதம் தெரியும்! இந்த உலகையே தங்கமாக மாற்ற முடியும் என்றார்!
அரசனுக்கோ பேரார்வம்!
அந்த ரசவாத வித்தையை எனக்கு கற்றுத்தாருங்கள்! மேலும் அந்த வறியவர் யார் என்று சொல்லுங்கள் என்று கேட்டான்.
துறவியோ தான் சொல்லும் நிபந்தனைக்கு உட்பட வேண்டும் என்றார்.
சரியாக ஓராண்டு காலம் தினமும் சூரியோதயத்துக்கு முன்னும் சூரிய அஸ்தமனத்துக்கு முன்னும் வந்து ஒரு மணிநேரம் தன்னுடன் கழிக்க வேண்டும் என்றார்!
அரசனும் ஒத்துக்கொண்டான்!
தினமும் அரசனும் வருவான்! துறவி முன்னர் அமர்வான்! துறவி எதுவும் பேசாமல் தன கருணை பார்வையை மட்டும் அரசன் மீது செலுத்திக்கொண்டிருப்பார்!
முதலில் சில நாட்கள் அரசனுக்கு என்னவோ போலிருந்தது! நாட்களாக நாட்களாக தன்னை சுற்றிலும் நடப்பதை கவனிக்க ஆரம்பித்தான்! இனிய காலைவேளைகளில் பறவைகள் பாடுவதும், விலங்குகள் ஓடியாடிதிரிவதும், சூரிய உதயமும் மாலையில் சூரிய அஸ்தமனமும் ஒருவித கிளர்ச்சியை மன்னனுக்கு ஏற்படுத்தின!
திடீர் என துறவி கேட்டார் ஆமாம் நீ எதுவோ கேட்டிருந்தாயே! நினைவிருக்கிறதா என்று! அப்போதுதான் சுய நினைவுக்கு வந்தான் மன்னன் அதற்கு சிறிது நேரம் கழித்து பதிலளித்தான்!
ஆம்! ஆனால் இப்போது விடை தெரிந்துகொண்டேன்! ரசவாததுக்கு ஆசைப்பட்ட நானே பெரும் ஏழை! இந்த உலகத்தை எப்படி தங்கமாக்குவது என்ற வித்தையும் அறிந்து கொண்டேன் ! இந்த வித்தை இதுவரை எனக்குள்ளே தான் இருந்திருக்கிறது! இப்போது தான் நான் கண்டுகொண்டேன்!