Home » பொது » அல்பிரட் நோபல்!!!
அல்பிரட் நோபல்!!!

அல்பிரட் நோபல்!!!

அல்பிரட் நோபல்

அல்பிரட் நோபல் 1834ஆம் ஆண்டு அக் டோபர் 21ஆம் திகதி ஸ்டொக்ஹோம் நகரில் பிறந்தார். இவர் தன் கல்வியை ரஷ்யாவில் முடித்துவிட்டு அமெ ரிக்கா சென்று அங்கு எந்திரவியலில் சிறப்பு பயிற்சி பெற்றார். இளம் வயதில் அறிவியலில் மட்டுமன்றி இலக்கியத் துறையிலும் சிறந்து விளங்கினார். ஐந்து மொழிகளிலும் நன்கு தேர்ச்சி பெற்றிருந்த இவர், தன் தந்தையைப் போன்று வெடிமருந்து உற்பத்தி தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டார். அதன் விளைவாக நைட்ரோ கிளிசரின் போன்ற வெடி மருந்துகளைப் பற்றிய ஆய்வில் தொடர்ந்து ஈடுபட்டார்.

நைட்ரோ கிளிசரினை கீசல்குர் எனும் களிமண்ணுடன் கலந்து அதனை உலர்த்தி தூளாக்கிக் கொண்டார். இதனை என்ன செய்தாலும் வெடிக்காது. ஆனால் அதை மின்சாரத்தின் உதவியுடன் அழுத்தக் கெப்பினால் பற்ற வைத்தால் பயங்கர சத்தத்துடன் வெடிக்கும். இதற்கு டைனமைட் என பெயரிட் டார்.

நோபல் கண்டுபிடித்த டைனமைட் ஆபத்து நிறைந்தது. போர்க்காலங்களில் டைனமைட்டினால் பல உயிரிழப்புகள் ஏற்பட்டன. இதே வெடிமருந்து பல நல்ல விடயங்களுக்கும் பயன்பட்டது. மலையைக் குடைந்து ரயில் பாதைகளை அமைக்கவும், பு+மியிலுள்ள கனிமப் பொருட்களை வெளிக் கொணரவும், கிணறுகள், பள்ளங்கள் வெட்டவும் பயன்படுத் தப்பட்டது. நோபலின் வெடிமருந்து கண்டுபிடிப்பு பெரும் புகழையும் செல்வத்தையும் ஈட்டியது. நாடு முழுவதும் டைனமைட்டிற்கு அமோக வரவேற்பு இருந்தது. இதன் மூலம் நோபல் பெரும் செல்வந்தர் ஆனார்.

எனினும் தான் கண்டுபிடித்தது அழிவுப் பொருளாகையால் அதற்காக மனம் வருந்தினார். இதற்கு ஏதாவது பரிகாரம் செய்தாக வேண்டும் என்ற முடிவுக்கு வந்த இவர், தான் பெற்ற செல்வங்களை மக்களுக்கே வழங்க தீர்மானித்து அறக்கட்டளையொன்றை நிறுவினார். அந்த நிதியிலிருந்து வரும் வட்டியைக் கொண்டு பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் அறிஞர்களுக்கு பரிசுகளை வழங்க ஏற்பாடு செய்தார். இதற்கான உயில் ஒன்றையும் 1895ஆம் ஆண்டில் எழுதினார்.

நோபல் பரிசானது நோபல் பெயரில் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. உலகிலேயே கண்டு பிடிப்புகளுக் காக வழங்கப்படும் மிகப்பெரிய பரிசு நோபல் பரிசாகும். நோபல் நினைவு நாளன்று சுவீடன் தலைநகரான ஸ்டொக் ஹோமில் வழங்கப்படுகிறது. நோபல் பரிசானது இயற்பியல், இரசாயனவியல்;, உடற்கூறு அல்லது மருத்துவம், சமாதா னப்பணி, இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்த வர்களுக்கு வழங்கப்படுகிறது. தான் ஈட்டிய செல்வத்தை தனக்கென வைத்துக்கொள்ளாமல் உலகிற்கே அர்ப்பணித்த நோபல் 10.12.1896 அன்று காலமானார்.

“தன்னுடைய மரணச் செய்தியை பத்திரிகையில் வாசிக்கும் சந்தர்ப்பம் பலருக்குக் கிடைப்பதில்லை. ஆனால் அல்பிரட் நோபலுக்கு அந்த சந்தர்ப்பம் 1888 இல் கிடைத்தது. ஒரு பிரான்ஸ் பத்திரிகை “மரணத்தின் வர்த்தகன் மரணம்” என்று தலைப்பிட்டு அல்பிரட் நோபலின்மரணச் செய்தியை பிரசுரித்திருந்தது. ”

அந்த செய்தியில் மனிதர்களை விரைவாக கொன்று குவிக்கும் வழிகளைக் கண்டுபிடித்து கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்தDr.அல்பிரட் நோபல் நேற்று காலமானார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

நோபல் பரிசு இன்று உலகில் வழங்கப்படுகின்ற அதியுயர்ந்த பரிசாக கருதப்படுகின்றது. இலக்கியம், சினிமா போன்றவற்றிற்காக வழங்கும் சர்வதேச விருதுகளை விடவும் மிகவும் உயர்ந்ததாக நோபல் பரிசு மதிக்கப்படுகின்றது.

நோபல் பரிசின் ஆரம்பம் பற்றி தெரிந்து கொள்வதற்கு அல்பிரட் நோபல் பற்றியும் அவரது கண்டுபிடிப்புக்கள் பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கின்றது.

அல்பிரட் நோபல் ஒக்டோபர் 21.1833 இல் ஸ்டொக்ஹோம் நகரில் பிறந்தார். அவருடைய தந்தையான இமானுவேல் நோபல் ஒரு பொறியியலாளராகவும் கண்டுபிடிப்பாளராகவும் இருந்தார். அவர் பாலங்களை நிர்மாணிக்கும் துறையில் பணியாற்றினார். இதனால் மலைகளைத் துளைக்கவும் கற்பாறைகளை பிளக்கவும் பல்வேறு நுட்பங்களை கண்டுபிடிக்க வேண்டியிருந்தது.

அல்பிரட் நோபலின் தாய் அன்டிரியட் செல்வந்தக் குடும்பமொன்றைச் சேர்ந்தவர். அல்பிரட் நோபல் பிறந்த ஆண்டில் இமானுவேல் நோபல் பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டார். அதற்கான காரணம் நிர்மாணப் பணிகளுக்காக படகுகள் மூலம் கொண்டுவரப்பட்ட பொருட்கள் நீரில் மூழ்கி யமையாகும்.

எனவே, இமானுவேல் நோபல் தனது குடும்பத்தினரை விட்டுவிட்டு ரஷ்யாவிற்கு சென்றார். அங்கு ஒரு பொறியியல் நிலையத்தை ஆரம்பித்தார். ஸ்டொக்ஹோமில் அவரது மனைவி ஒரு பலசரக்குக் கடையை நடத்தி வந்தார். இமானுவேல் நோபல் தனது பொறியியல் நிலையத்தின் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட நீரில் மிதக்கும் கண்ணிவெடிகளை ரஷ்ய இராணுவத்திற்கு விற்பனை செய்துவந்தார். அவர் கைத்தொழிற்துறையில் அடைந்த வளர்ச்சியின் காரணமாக அவரது பொருளாதார நிலைமையும் உயர்வடைந்தது. 1842 ஆம் ஆண்டு தனது குடும்பத்தையும் ரஷ்யாவிற்கு அழைத்துக் கொண்டார். அங்கு அவரது பிள்ளைகளுக்கு மிகச்சிறந்த ஆசிரியர்களைக் கொண்டு இயற்கை விஞ் ஞானங்கள், மொழிகள், இலக்கியம் போன்றவற்றைக் கற்பித்தார். இதனால் அல்பிரட் நோபல் 17 வயதிலே ஆங்கில மொழி உட்பட சுவீடன், ரஷ்யா, பிரான்ஸ், ஜேர்மனி போன்ற நாடுகளின் மொழிகளையும் திறம் படக் கற்றுக் கொண்டார்.

அல்பிரட் நோபலுக்கு கவிதையிலும் இலக்கியத்திலுமே ஆர்வம் அதிகமாகக் காணப்பட்டது. ஆனால், இமானுவேல் நோபல் தனது மகனை ஒரு பொறியியலாளராக உருவாக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். தந்தையின் ஆசைக்கு மகனும் விருப்பத்துடன் உடன்பட்டார். எனவே, இரசாயன பொறியியலில் அவர் உயர் கல்வி கற்பதற்காக சுவீடன், ஜேர்மன், பிரான்ஸ், அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு சென்றார்.

பிரான்ஸின் பாரிஸ் நகரில் பிரபல்யமான இரசாயனவியலாளரான டி.ஜே. பெலசின் ஆய்வுகூடத்தில் சிறிதுகாலம் பணியாற்றினார். அங்கிருந்தபோது இத்தாலியின் இளம் இரசாயனவியலாளர் அஸ்கன்னியே சோபரேரை சந்தித்தார். அவர் அதற்கு மூன்று வருடங்களுக்கு முன்பு நைட்ரோ கிளிசரினை கண்டுபிடித்திருந்தார். அது அதிகூடிய எரிப்பற்று நிலையைக் கொண்ட திரவமாகும். அத்திரவம் கிளிசரின், சல்பூரிக்கமிலம்,நிற்றிக் அமிலம் ஆகியவற்றின் மூலம் தயாரிக்கப்பட்டிருந்தது. அதனை கையாள்வது மிகச் சிரமமானதாகவும் ஆபத்தானதாகவும் காணப்பட்டது.

”1905 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு அல்பிரட் நோபலின் தோழியும் அமைதிக்காக தனது வாழ்நாள் முழுவதும் குரல் கொடுத்தவருமான பேர்த்தா வோன் சட்னருக்கு வழங்கப்பட்டது விஷேட அம்சமாகும்.”

அல்பிரட் நோபல் அதனை சாதாரணமாக நிர்மாணப் பணிகளில் பயன்படுத்துவதற்கு முயற்சித்தார். அந் நிலையில் அவர் மீண்டும் குடும்பத்துடன் வந்து இணைந்து கொள்ளுமாறு இமானுவேல் நோபலினால் கேட்டுக் கொள்ளப்பட்டார்.

அப்போது யுத்தம் நிறைவடைந்திருந்தமையால் இமானுவேல் நோபலின் வியாபாரமும் மந்த நிலையை அடைந்திருந்தது. அவர் இரண்டாம் முறையாக பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டார். எனவே, அவரும் அவரது இரண்டு மகன்களான அல்பிரட், எமில் ஆகியோரும் ஸ்டொக்ஹோமிற்குத் திரும்பினர். மற்றைய இரண்டு மகன்களான ரொபட்டும் லுடையினும் ரஷ்யாவிலேயே இருந்தனர்.

ஸ்டொக்ஹோமில் குடும்ப வருமானத்திற்காக ஒரு எண்ணெய்த் தொழிற்சாலையை தந்தையும் மகனும் இணைந்து ஆரம்பித்தனர். அதன் மூலம் சிறிது காலத்திலே அவர்களது பொருளாதார நிலை ஓரளவு சீரடைந்தது.

1863 ஆம் ஆண்டு நைட்ரோகிளிசரினை சாதாரண பாவனைக்கு கொண்டு வரும் தனது முயற்சியை அல்பிரட் தொடர்ந்தார். 1864ஆம் ஆண்டு அத்த கைய பரிசோதனை ஒன்றின்போது ஏற்பட்ட வெடிவிபத்தினால் அல் பிரட்டின் சகோதரர் எமிலும் இன்னும் சிலரும் கொல்லப்பட்டனர். அதனால் அவ ரது ஆய்வுகூடத்தை ஸ்டொக்ஹோம் நகர எல்லையிருந்து வெளியே கொண்டு செல்ல வேண்டியேற்பட்டது.

எனவே, மலாரேன் ஏரியில் நங்கூரமிடப்பட்ட பட கொன்றில் தனது பரிசோதனை முயற்சிகளை அல்பிரட் தொடர்ந்தார். 1864 ஆம் ஆண்டு நைட்ரோயும் கிளிசரினையும் Kieselguhr ஐயும் (பளபளப்பு ஏற்படுத்துவதற்கும் வெடி மருந்து தயாரிப்பதற்கும் பயன்படுத்தப்படும் ஒருவகை மண்) இணைத்து பசை போன்ற ஒன்றை அல்பிரட் தயாரித்தார். அது சாதாரணமாக பயன்படுத்தக் கூடியதாக இருந்தது. அதுவே இன்று டைனமைட் என்று அழைக்கப்படுகின்றது. இதற்கான பேட்டன்ட் எனும் கண்டுபிடிப்பிற்கான காப்புரிமையை 1867 ஆம் ஆண்டு அல்பிரட் பெற்றுக் கொண்டார்.

இந்த டைனமைட் பொதுவாக மலைகளை சிதைப் பதற்கும் குகைகளை அமைப்பதற்கும் கட்டிடங்களை தகர்ப்பதற்கும் பயன்படுத்தப்படுவதோடு பெரு மளவில் ஆயுத உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகின்றது என்பதுதான் துயரமா னது.

டைனமைட்டிற்கான கேள்விகள் வேகமாக அதிகரித்ததால் அல்பிரட்டிற்கான வியாபார வாய்ப்புகளும் அதிகரித்தன. அவர்1865 ஆம் ஆண்டு ஜேர்மனியின் ஹம்பேர்க் நகரில் ஒரு தொழிற்சாலையை அமைத்தார். அதன் உற்பத்திகளை ஐரோப்பா,அமெரிக்கா,அவுஸ்திரேலியா போன்ற கண்டங்களிலுள்ள நாடுகளுக்கு விற்பனை செய்தார். அதனைத் தொடர்ந்து சுமார் 20நாடுகளில் 90 இற்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளை அமைத்தார். அவர் பாரிஸில் வாழ்ந்தபோதும் அவரது வாழ்க்கை பயணத்திலேயே கழிந்தது. அவரை விட்டர் ஹியூகோ என்பவர்‘ஐரோப்பாவின் பணக்கார நாடோடி’ என்று வர்ணித்தார்.

தொடர்ந்து அல்பிரட் பல்வேறு பரிசோதனை முயற்சிகளில் ஈடுபட்டார்.1896 ஆம் ஆண்டு அவர் மர ணிக்கும்போது 355பேட்டன்ட் எனும் கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமைகளைக் கொண்டிருந்தார்.

”1968 ஆம் ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டதிலிருந்து இதுவரை அதனைப் பெறுகின்ற முதலாவது பெண் ஒஸ்ட்ரோம் ஆவார். காடுகள் நீர்ப்பாசனத் தொகுதிகள் மற்றும் புல்வெளி நிலங்கள் போன்ற இயற்கையான வளப் பயன்பாட்டை அரசாங்க மற்றும் தனியார் துறைகளின் கட்டுப்பாட்டிலிருப்பதை விடவும் எவ்வாறு சிறப்பாக முகாமைத் துவம் செய்யலாம் என்று வழிக்காட்டியமைக்காக றோயல் சுவிடீஸ் அகடமி இவருக்கு இந்தப் பரிசை வழங்குகின்றது.”

அல்பிரட் தனது தொழில் மற்றும் பயணங்களினால் தனது சொந்த வாழ்க்கையை மறந்திருந்தார். அவருக்கு 43 வயதானபோதுதான்,தான் முதிர்ச்சியடைந்துவிட்டதாக உணர்ந்தார். எனவே,பத்திரிகையொன்றில் செல்வந்தரான உயர்கல்வி கற்ற ஒருவருக்கு செயலாளராகவும் இல்லத்தரசியாகவும் இருக்க திருமண வயதில் ஒரு பெண் தேவை என்று விளம்பரம் செய்தார்.

அவரது விளம்பரத்தைப் பார்த்த நிறைய பெண்கள் விண்ணப்பித்தனர். அவர்களில் ஒஸ்ட்ரியாவைச் சேர்ந்த பேர்த்தா கின்ஸ்கியை தனது செயலாளராக அல்பிரட் தெரிவுசெய்துகொண்டார். அவர் சிறிது காலம் அல்பிரட்டுடன் பணியாற்றிவிட்டு தனது சொந்த நாட்டிற்கு திரும்பிச் சென்றுவிட்டார்.

இவருக்கும் அல்பிரட்டிற்கும் திருமணம் நடந்ததாக சிலர் கூறியபோதும் இவர் நாட்டிற்குத் திரும்பி சிறிது காலத்திலே இன்னொருவரை திருமணம் முடித்தார். ஆனால், பேர்த்தாவிற்கும் அல்பிரட்டிற்குமிடையே கடிதத் தொடர்புகள் காணப்பட்டன. சில வருடங்களின் பின்னர் பேர்த்தா, அல்பிரட்டின் செயற்பாடுகளை கடுமையாக விமர்சிக்கத் தொடங்கினார். அவர் எழுதிய‘ஆயுதங்களை கீழே வையுங்கள்’ என்ற புத்தகம் மிகப் பிரபல்யமானது. இப் புத்தகம் அல்பிரட்டை மிகக் கடுமையாகப் பாதித்தது. இதன்விளைவாகவே அவரது உயிலில் சமாதானத்திற்காக உழைக்கின்ற தனிமனிதர்கள்,நிறுவனங்களுக்கும் விருது வழங்குமாறு கூறியிருந்தார்.

அல்பிரட் நோபல் வாழ்வின் இறுதிக் காலப்பகுதி யில் சமூக சேவைகளிலும் சமாதான செயற்பாடுகளிலும் ஆர்வத்துடன் செயற்பட்டார். அத்துடன் கவிதை இலக்கியத்துறையிலும் ஈடுபட்டார்.

அல்பிரட் உருவாக்கிய பல நிறுவனங்கள் இன்றும் உலகில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. அவற்றில் Imperial Chemical Industries, Dyno Industriesபோன்றன குறிப்பிடத்தக்கவையாகும்.

அல்பிரட் நோபல் 1986.12.10 ஆம் திகதி ஸென் ரெமோ நகரில் மரணித்தார். அவரது மரணத்தின் பின்னர் அவர் எழுதிய உயிலை இளம் பொறியியலாளர்களான Ragnar Sohlman, Rodola Lijeguistஆகிய இருவரும் வாசித்தனர்.

நோபல் பரிசு வழங்குவதற்காக தெரிவுசெய்யப்படுபவர் குறித்து அவ்வப்போது விமர்சனங்கள் தெரிவிக் கப்பட்டுள்ளன.

உலகில் மிகநீண்ட ஆண்டுகளாக வழங்கப்படுகின்ற உன்னத விருதாகிய நோபல் பரிசின் ஸ்தாபகர் அல்பிரட் நோபல் ஆவார். நோபல் பரிசானது 1901 ம் ஆண்டு தொடக்கம் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
இரண்டு வெவ்வேறான துறைகளில் நோபல் பரிசு பெற்ற பெருமைக்குரியவர்கள்;   லீனஸ்கார்ல்பெளலிங் (இரசாயனம்1954 & ;சமாதானம்1962) மேரிகியூரி (இரசாயனம்1903  & ; பெளதிகம்1911) ஆகியோராவர்.
மிகக்குறைந்த வயதில் (25) நோபல்பரிசு பெற்ற பெருமைக்குரியவர் லோரன்ஸ்ப்ராக், இவர் பெளதிகவியல் துறைக்கான நோபல்பரிசினை 1915ம் ஆண்டு தனது தந்தையரான வில்லியம்ப்ராக் உடன் பகிர்ந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
மிகக்கூடிய வயதில் (90) நோபல் பரிசு பெற்ற பெருமைக்குரியவர் லியோனிட்ஹுர்விக்ஸ், இவர் பொருளியல் துறைக்கான நோபல் பரிசினை 2007ம் ஆண்டு பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
ஒரேதுறையில் இரண்டுதடவைகள் நோபல்பரிசினைப் பெற்ற பெருமைக்குரியவர்கள்;   ஜொன்பார்டீன், இவர்பெளதிகவியல் துறைக்கான நோபல் பரிசினை 1956 மற்றும்1972ம் ஆண்டுகளில் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
ப்ரெட்ரிக்சான்கர் இவர் இரசாயனவியல் துறைக்கான நோபல்பரிசினை1958 மற்றும்1980ம் ஆண்டுகளில் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
மூன்று தடவைகள் நோபல் பரிசினைப் பெற்ற ஒரேயொரு அமைப்பு, சர்வதேச செஞ்சிலுவைச்சங்கம் ஆகும். சமாதானத்திற்கான நோபல்பரிசினை 1917, 1944 மற்றும்1963ம் ஆண்டுகளில் ICRC பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
 “நோபல்” குடும்பம்…!
1903ம் ஆண்டு பெளதிகவியல் துறைக்கான நோபல்பரிசினை மேரிகியூரி தனதுகணவரான பியூரிகியூரியுடன் இணைந்து பெற்றுக் கொண்டார்.
1935ம் ஆண்டு இரசாயனவியல் துறைக்கான நோபல் பரிசினை மேரிகியூரி, பியூரிகியூரி ஆகியோரின் புதல்வியான ஐரீன்ஜூலியட்கியூரி தனது கணவரான ப்ரெட்ரிக்ஜூலியட்கியூரியுடன் இணைந்து பெற்றுக்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top