நர்சரி பள்ளி ஒன்றின் உணவறையில் ஒரு கூடை நிறைய ஆப்பிள்கள் வைக்கப்பட்டிருந்தன. அந்தக் கூடையின் மேல், “ஒன்றுக்கு மேல் எடுக்காதீர்கள்; கடவுள் பார்த்துக்கொண்டிருக்கிறார்
சற்று தொலைவில் ஒரு பெட்டி நிறைய சாக்லேட்டுகள் வைக்கப்பட்டிருந்தன.
அந்தச் சாக்லேட் பெட்டியின் மீது ஒரு குழந்தை பின்வருமாறு எழுதியது:
‘எவ்வளவு வேண்டுமோ எடுத்துக்கொள்ளுங்கள்; கடவுள், ஆப்பிளைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்
சிந்தித்து பாருங்கள்
பிரபலமான ஒருவர் மேடையில் பேசி கொண்டிருக்கும் போது ஒரு காமெடியை சொல்கிறார், உடனே அங்கிருந்த பார்வையாளர்கள் அனைவரும் சிரிக்கின்றனர், உடனே அவர் திரும்பவும் அதே காமெடியை சொல்கிறார், இரண்டாவது தடவை அவருக்கு சில சிரிப்பு சத்தங்களே கிடைத்தது, மீண்டும் அதே காமெடியை சொல்கிறார், ஆனால் இந்த தடவை அங்கிருந்த பார்வையாளர்கள் யாரும் சிரிக்கவில்லை, சற்று நேரம் கழித்து பேச தொடங்கிய அவர், ” ஒரே காமெடிக்கு இரண்டு முறைக்கு மேல் சிரிக்காத நீங்கள், ஏன் உங்கள் வாழ்வில் நிகழும் பிரச்சனைகளுக்காக பல தடவை அழ வேண்டும்” என்றார்.
நண்பர்களே! கவலை படுவதால் என்ன பயன் சொல்லுங்கள், துவே சிந்தித்தால் நல்ல வழி பிறக்கும் என சொல்லலாம், கவலை நம்மை முடக்கி போடும் தீய சக்தி அதனை வெல்ல, முதலில் அதனை ஒழியுங்கள், அது உங்கள் நேரத்தை வீண் ஆக்குவதோடு உங்களையும் பாழாக்கும், இதற்க்கு வழி ஆக்கபூர்வமாக சிந்திப்பதே ஒரே வழி!
கவலையை ஒழிக்க :
ஆசையே துன்பத்திற்கு காரணம் எனவே நம்முடைய தேவை இல்லாத பேராசைகளை குறைத்து கொண்டாலே நாம் எளிதாக கவலையில் இருந்து விடுபடலாம்.
என்னை சந்திப்பவர்கள் வெற்றி அடையாமல் செல்வதில்லை
-இப்படிக்கு தோல்வி