டீச்சர் : ஏன்டா… இன்னிக்கும் ஹோம் வொர்க் செய்யலையா?
மாணவன்: கரண்ட்டு இல்ல டீச்சர் …
டீச்சர் : வெளக்கு, மெழுகு வர்த்தி ஏத்தி வச்சுக்கிட்டு செய்திருக்கலாம்ல?
மாணவன்: ஆமா டீச்சர் … முயற்சி பண்ணினேன்… ஆனா தீப்பெட்டிய எடுக்க முடியலை….
டீச்சர் : வொய்????
மாணவன்: அது பூஜை ரூமுல இருந்தது….
டீச்சர் : உள்ள போயி எடுத்திருக்கலாம்ல?
மாணவன்: இல்ல டீச்சர் …. குளிக்கலல்ல…. எப்பிடிப் போறது?
டீச்சர் : குளிக்கலையா….ஏன்?
மாணவன்: மேல் தொட்டியில தண்ணியில்ல….
டீச்சர் : மோட்டார் போட்டு ஏத்த வேண்டியது தானடா?… சோம்பேறி…!! எரும
மாணவன்: டீச்சர் , லூசு மாதிரிப் பேசாதீங்க டீச்சர் … அதான் முதல் பதில்லையே சொன்னேனுல்ல கரண்டு இல்லன்னு..
நண்பன்1- நேற்று பெண் பார்க்கப் போன இடத்தில மயங்கி விழுந்திட்டேன்டா…
நண்பன்2- பெண் அவ்வளவு அழகா?
நண்பன்1- இல்லடா… விஷயம் தெரிந்து என் மனைவியும் அங்கே வந்திட்டா..
Female ல் male இருக்கு
Lady ல் lad இருக்கு
Woman ல் man இருக்கு
She ல் he இருக்கு
அடடா…
.
.
.
.
.
Mrs ல் Mr ம் இருக்கார்!
பக்கத்துவீட்டுகாரர்- வீட்ல எப்பவும் சிரிப்பு சத்தம் கேக்குதே?
ராமு- மனைவி என் மேல பாத்திரத்த தூக்கி போடுவா.
மேல படலேன்னா நான் சிரிப்பேன், பட்டதுன்னா அவள் சிரிப்பா.
மனைவி : என்னங்க செத்துட்டா சொர்கத்துல கணவன் மனைவி தனியாத்தான் இருகனுமாம்ல…………..
கணவன் : அதனால தாண்டி அது சொர்க்கம் ………..!
மனைவி . . . . ????
ஒருவன்: டேய்! ஏன்டா ஃபேனை ஆப் பண்ணிட்ட?
மற்றொருவன்: எங்கப்பாதான் சொல்லி இருக்காரு,
வியர்வை சிந்தி சாப்பிடனும்ன்னு!
நண்பர்-உங்க மனைவியை தேள் கொட்டிச்சாமே என்ன பண்ணீங்க?
ராமு-என்ன பன்றது?
ராமு-சந்தோஷத்தை கொண்டாட முடியாம தவிச்சுப் போயிட்டேன்.
மனைவி-உங்க பிரண்ட் உங்ககிட்ட கடன் வாங்க வந்து இருக்கார் போலிருக்கு
கணவன் -எப்படி சொல்ற ராதா
மனைவி-என் சர்க்கரை போடாத காபியை இப்படி புகழ்றாரே.
கணவன் – அம்மாவுக்கு உடம்பு சரியில்லையாம். பணம் அனுப்ப சொல்லி, லெட்டர் போட்டிருக்காங்க.
மனைவி – சுக்கு காய்ச்சி குடிக்கச் சொல்லுங்க எல்லாம் சரியாப் போய்டும்.
கணவன் – ஓகே அப்படியே உங்கம்மாவுக்கு எழுதிப் போட்டுகிறேன்.
மனைவி . . . . ????
நீதிபதி: ஏன் உங்க மனைவியை விவாகரத்து செய்யணும்னு நினைக்கிறீங்க?
கணவன்: 6 மாசமா அவ என்கிட்டே பேசுறதே இல்லை
நீதிபதி: நல்லா யோசிச்சுப் பாருங்க! இப்படியெல்லாம் ஒரு வாய்ப்பு மறுபடியும் கிடைக்கிறது கஷ்டம்ங்க..
டாக்டர்! நான்தான் பிழைத்து விட்டேனே? பின்ன எதுக்கு ஸ்கேன் எடுக்க சொல்றீங்க?
நீங்க பிழைச்சா போதுமா? ஸ்கேன் சென்டெர் வச்சுருகிற என் மச்சான் பிழைக்க வேண்டாமா?
அப்பா: டேய்! ஏண்டா இண்டர்வியுக்கு போகலையா?
மகன்: ச்சீ..சீ.. நாலு பேரு கேள்வி கேட்கற மாதிரி நடக்க கூடாதுன்னு நீங்கதானே சொன்னீங்க!
பாடகர்: தொண்டையில ஆபரேஷன் முடிந்த பிறகு நான் பாடலாமா டாக்டர்?
டாக்டர்: நீங்க இனிமே பாடக்கூடாதுன்னுதானே இந்த ஆபரேஷன்!!
நோயாளி : டாக்டர், வயித்து வலி என்னால பொறுக்க முடியல…
டாக்டர் : வயிறு வலிக்கும்போது, நீங்க ஏன் பொறுக்கப் போறீங்க?
காதலன் : நம்ம காதலை மெதுவா எங்க வீட்டில் சொல்லிட்டேன்.
காதலி : அவங்க என்ன சொன்னாங்க, ஒத்துக்கிட்டாங்களா?
காதலன் : மெதுவா சொன்னதால அவங்களுக்கு கேட்கலை…
காதலி : !!!!
அப்பா: என்னடா! டெஸ்ட்ல பூஜ்யம் மார்க் வாங்கிட்டு வந்திருக்க?
பையன்: அது பூஜ்யம் இல்லப்பா… வாத்தியார் நான் நல்லா படிச்சதுக்காக “O” போட்டாங்க…
“பொதுக் கூட்ட மேடையிலே ஏன் தீப்பிடிச்சிருக்கு?”
“தலைவர் அனல் பறக்கப் பேசினாராம்!”
காதலன்: பேரழகிகளை பிடிக்காது….
காதலி: என்னை உனக்கு பிடிக்காதா?
காதலன்: யார் சொன்னா? உன் தங்கச்சியைத்தான் பிடிக்காது என்றேன்.
மனுஷனாப் பொறந்தா வாழ்க்கையில ஏதாவது பெரிசா சாதிக்கணும்…
நல்லவேளை…நான் கொழந்தையாத் தான் பொறந்தேன்…
கொசு கடிக்காம இருக்க இந்த க்ரீமைத் தடவுங்க…! …
அதெப்படி டாக்டர், ஒவ்வொரு கொசுவையும் பிடிச்சி இந்தக் க்ரீமைத் தடவுறது?
நாம மத்தவங்களுக்கு உதவத்தான் பிறந்து இருக்கோம்….
சரி … அப்ப மத்தவங்க எதுக்குப் பிறந்து இருக்காங்க?
ஏன் உங்க டைரக்டர் இப்பல்லாம் ’மசாலா’ படங்கள் எடுக்கறதில்லே?
வெங்காய விலை குறையட்டும்னு காத்திருக்கார்..
இலவசம் என்றால் என் கணவர் எதையும் விட மாட்டார்…
அப்படியா?..
ஆமாம்! இப்பப் பாரேன்… இலவச திருமணம் செய்துக்கிட்டு வந்திருக்கிறார்.