முல்லா தனது வீட்டின் கூறை மேல் ஏதோ ரிப்பேர் வேலை செய்து கொண்டிருந்தார் அப்போது ஒரு சாமியார் அவரை கீழே வருமாறு அழைத்தார் , முல்லா மிகவும் சிரமப்பட்டு கீழே வந்து அவரிடம் “ என்ன விசயம் எதற்க்காக என்னை கீழே வருமாறு அழைத்தீர்கள் “ எனக்கேட்டார்.
அந்த சாமியார் “ நான் உன்னிடம் ஏதாவது தானமாக பெற வந்துள்ளேன்! அதை சத்தமாக கேட்க வெட்கமாக இருந்தது! அதனால்தான் உன்னை கீழே அழைத்தேன் , மன்னிக்கவும் “ என்றார்
உடனே முல்லா “ எடுப்பது பிச்சை இதில் போலி கவுரவம் வேறு ! சரி பரவாயில்லை என்னுடன் வா” என்று சொல்லிவிட்டு மீண்டும் கூறை மேல் ஏறினார்.
அந்த சாமியாரும் தனது மிகவும் தடித்த உடலை கஷ்டப்பட்டு தூக்கமுடியாமல் தூக்கிக்கோண்டு முல்லாவை தொடர்ந்தார்
சாமியார் மேலே வந்து சேர்ந்ததும் , முல்லா மீண்டும் தனது வேலையை பார்க்கத்தொடங்கினார்.
சாமியார் “ எனக்கு என்ன தருகிறீர்கள் ? “ எனக் கேட்டார் சற்று பொறுமை இழந்தவராக
முல்லா “ என்னிடம் கொடுப்பதற்க்கு ஒன்றும் இல்லை, sorry ! “ என்றார்
சாமியார் “ முட்டாள் ! இதை கீழேயே சொல்லித்தொலைக்க வேண்டியதுதானே, ஏன் என்னை இவ்வளவு கஸ்டப்பட வைத்து மேலே அழைத்தாய் ! “
முல்லா “ என் பக்கத்து வீட்டுக்காரன் இருந்தான் அவன் முன்னே ஒன்றும் இல்லை என சொல்ல வெட்க்கமாக இருந்தது அதான்- மற்றும் நான் கீழே வரப் பட்ட அனுபவத்தையாவது ( கஷ்டத்தையாவது) உனக்கு தானமாக கொடுக்கலாம் என்று உன்னை அழைத்தேன்! .… “ என்றார்.