Home » பொது » இன்று: அக்டோபர் 8!!!
இன்று: அக்டோபர் 8!!!

இன்று: அக்டோபர் 8!!!

கிரிகோரியன் ஆண்டின் 281ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 282ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 84 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1573 – எண்பதாண்டுப் போரில் நெதர்லாந்து முதலாவது வெற்றியை எசுப்பானியாவுக்கு எதிராகப் வெற்றியைப் பெற்றது.
1582 – கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து இத்தாலி, போலந்து, போர்த்துக்கல், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் புதிய நாட்காட்டியில் இவ்வாண்டின் இந்நாள் இடம்பெறவில்லை.
1813 – பவேரியாவுக்கும் ஆசுதிரியாவுக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டது.
1821 – பெருவில் ஜோஸ் டெ சான் மார்ட்டின் தலைமையிலான அரசு கடற்படையை அமைத்தது.
1860 – லாஸ் ஏஞ்சலஸ், சான் பிரான்சிஸ்கோ நகர்களுக்கிடையே மின்சாரத் தந்தி அறிமுகமானது.
1862 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்கப் படைகள் கென்டக்கியில் கூட்டமைப்புப் படைகளின் முற்றுகையைத் தடுத்து நிறுத்தினர்.
1871 – சிகாகோ பெருந்தீ: சிக்காகோவில் இடம்பெற்ற பெரும் தீயில் 100,000 பேர் வீடுகளை இழந்தனர். விஸ்கொன்சின் மாநிலத்தில் இடம்பெற்ற தீயில் 2,500 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
1895 – கொரியாவின் கடைசி அரசி ஜோசியனின் மின் ஜப்பானியர்களால் கொல்லப்பட்டாள்.
1912 – முதலாவது பால்கன் போர் ஆரம்பமானது: மொண்டெனேகுரோ உதுமானியப் பேரரசுடன் போர் தொடுத்தது.
1918 – இரண்டாம் உலகப் போர் – பிரான்சில் அமெரிக்கக் கோப்ரல் “அல்வின் யோர்க்” தனியாளாக 25 ஜெர்மனிய இராணுவத்தினரைக் கொன்று, 132 பேரைக் கைப்பற்றினார்.
1932 – இந்திய வான்படை நிறுவப்பட்டது.
1939 – இரண்டாம் உலகப் போர்: ஜேர்மனி மேற்கு போலந்தை இணைத்துக் கொண்டது.
1944 – குரூசிஃபிக்ஸ் ஹில் சண்டை ஆஃகன் இற்கருகில் இடம்பெற்றது.
1952 – லண்டனில் தொடருந்து விபத்தில் 112 பேர் கொல்லப்பட்டனர்.
1962 – அல்சீரியா ஐக்கிய நாடுகள் அவையில் இணைந்தது.
1967 – கெரில்லா இயக்கத் தலைவர் சே குவேராவும் அவரது சகாக்களும் பொலிவியாவில் கைப்பற்றப்பட்டனர்.
1973 – சூயஸ் கால்வாயின் இஸ்ரேலியப் பக்கத்தில் இடம்பெற்ற போரில் 140 இஸ்ரேலியத் தாங்கிகள் எகிப்திய படைகளினால் அழிக்கப்பட்டது.
1982 – சொலிடாரிட்டி தொழிற்சங்கம் போலந்தில் தடை செய்யப்பட்டது.
1987 – விடுதலைப் புலிகள் இந்திய அமைதி காக்கும் படையின் சரக்கு வாகனத்தைத் தாக்கியதில் 8 இந்திய இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
1990 – ஜெருசலேமில் இஸ்ரேலியக் காவல்துறையினர் கோவில் மலையில் பாறைக் குவிமாடம் மசூதியைத் தாக்கியதில் 17 பாலஸ்தீனர் கொல்லப்பட்டு 100 பேருக்கு மேல் காயமடைந்தனர்.
2001 – இத்தாலியின் மிலான் நகரில் இரண்டு விமானங்கள் நடுவானில் மோதியதில் 118 பேர் கொல்லப்பட்டனர்.
2005 – 03:50 ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்க்கு காஷ்மீரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பாகிஸ்தான், இந்தியா, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மொத்தம் 74,500 பேர் கொல்லப்பட்டு 106,000 பேர் காயமடைந்தனர்.

பிறப்புக்கள்

1922 – கோ. நா. இராமச்சந்திரன், இந்திய அறிவியலாளர் (இ. 2001)
1924 – திருநல்லூர் கருணாகரன், இந்தியக் கவிஞர் (இ. 2006)
1932 – கென்னத் அப்பெல், அமெரிக்கக் கணிதவியலாளர்
1935 – மில்கா சிங், இந்திய தடகள விளையாட்டு வீரர்
1950 – சு. கலிவரதன், தமிழக எழுத்தாளர்
1970 – மேட் டாமன், அமெரிக்க நடிகர்
1971 – பா. ராகவன், தமிழக எழுத்தாளர்
1983 – அபிசேக் நாயர், இந்தியத் துடுப்பாட்ட வீரர்

இறப்புகள்

1936 – பிரேம்சந்த், இந்திய எழுத்தாளர் (பி. 1880)
1959 – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கவிஞர், பாடலாசிரியர் (பி. 1930)
1967 – கிளமெண்ட் அட்லீ, ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் (பி. 1883)
1979 – ஜெயபிரகாஷ் நாராயண், இந்திய அரசியல்வாதி (பி. 1902)
2003 – வீரமணி ஐயர், ஈழத்துக் கவிஞர் (பி. 1931)
2011 – பாரத லக்சுமன் பிரேமச்சந்திர, இலங்கை அரசியல்வாதி (பி. 1956)

சிறப்பு நாள்

குரொவேசியா – விடுதலை நாள்
ஐக்கிய அமெரிக்கா – கொலம்பஸ் நாள்
இந்தியா – விமானப் படை நாள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top