கிரிகோரியன் ஆண்டின் 278ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 279ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 87 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1582 – கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து இத்தாலி, போலந்து, போர்த்துக்கல், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் இவ்வாண்டின் இந்நாள் இடம்பெறவில்லை.
1780 – வேலு நாச்சியார் தலைமையில் திண்டுக்கல்லிலிருந்து சிவகங்கை நோக்கிப் படையெடுப்பு இடம்பெற்றது.
1789 – பிரெஞ்சுப் புரட்சி: பாரிஸ் பெண்கள் பதினாறாம் லூயி மன்னனுக்கு எதிராக வேர்சாய் அரண்மனை நோக்கி அணிதிரண்டு சென்றனர்.
1793 – பிரெஞ்சுப் புரட்சி: பிரான்சில் கிறிஸ்தவம் தடைசெய்யப்பட்டது.
1795 – இலங்கையின் மன்னார்ப் பகுதியை ஆங்கிலேயர் கைப்பற்றினர்.
1799 – ஆங்கிலேயரினால் பிடிக்கப்பட்ட கட்டபொம்மன் கயத்தாறு கொண்டுவரப்பட்டு சிறையிலடைக்கப்பட்டான்.
1864 – இந்தியாவின் கல்கத்தா நகரத்தில் இடம்பெற்ற சூறாவளி நகரை முற்றாக சேதப்படுத்தியது. 60,000 பேர் கொல்லப்பட்டனர்.
1886 – தங்கம் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து தென்னாபிரிக்காவின் ஜோகானஸ்பேர்க் நகரம் உருவாக்கப்பட்டது.
1903 – சாமுவேல் கிரிஃபித் ஆஸ்திரேலியாவின் முதலாவது தலமை நீதிபதியாக நிமனம் பெற்றார்.
1905 – வில்பர் ரைட் 24 மைல்களை 39 நிமிடங்களில் விமானத்தில் பறந்து சாதனை படைத்தார்.
1910 – போர்த்துக்கலில் அரசாட்சி முடிவுக்கு வந்து குடியரசு நாடாகியது.
1915 – முதலாம் உலகப் போர்: பல்கேரியா போரில் இறங்கியது.
1944 – இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியின் ஜெட் விமானம் ஒன்றை முதற் தடவையாக கனேடிய விமானப் படையினர் பிரான்சில் சுட்டு வீழ்த்தினர்.
1944 – பிரான்சில் பெண்கள் வாக்களிக்க அனுமதியளிக்கப்பட்டனர்.
1948 – துருக்மெனிஸ்தான் தலைநகர் அஷ்கபாத் நகரில் நிலநடுக்கம் ஏற்பட்ட்டாதில் 110,000 பேர் கொல்லப்பட்டனர்.
1962 – முதலாவது ஜேம்ஸ் பொண்ட் திரைப்படமான டொக்டர் நோ ஐக்கிய இராச்சியத்தில் வெளிவந்தது.
1974 – இங்கிலாந்தில் ஐரியக் குடியரசு இராணுவத்தினர் மதுபான சாலை ஒன்றில் குண்டு ஒன்றை வெடிக்க வைத்ததில் 5 பேர் கொல்லப்பட்டனர். 65 பேஎர் காயமடைந்தனர்.
1978 – ஈழத்தமிழர்களின் பிரச்சனையை ஐக்கிய நாடுகள் அவையின் கவனத்தில் கொண்டு வந்து தமிழீழ தேசத்தினைத் தனிநாடாக அங்கீகரிக்குமாறு கிருஷ்ணா வைகுந்தவாசன் ஐநா பொதுச்சபைக் கூட்டத்தில் உரையாற்றினார்.
1987 – விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்கள் 12 பேர் இந்தியப் படையின் காவலில் இருக்கும்போது நஞ்சருந்தி மரணமானார்கள்.
1991 – இந்தோனீசியாவின் இராணுவ விமானம் ஒன்று ஜகார்த்தாவில் விபத்துக்குள்ளாகியதில் 137 பேர் கொல்லப்பட்டனர்.
1999 – மேற்கு லண்டனில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் 31 பேர் கொல்லப்பட்டனர்.
2000 – சேர்பியாவில் சிலோபதான் மிலோசேவிச்சுக்கு எதிரான மிகப் பெரும் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
1823 – இராமலிங்க அடிகளார் (வள்ளலார்) , இந்தியாவின் சன்மார்க்க சிந்தனையாளர் (இ. 1873)
1911 – கண்ணாம்பா, தமிழ்த் திரைப்பட நடிகை.
1934 – சோ, பத்திரிகை ஆசிரியர், நாடக ஆசிரியர், நடிகர்
1957 – பெர்னி மாக், அமெரிக்க நடிகர் (இ. 2008)
இறப்புகள்
1565 – லியூஜி ஃபெறாரி, இத்தாலிய கணித ஆய்வாளர் (பி. 1522)
1976 – லார்ஸ் ஒன்சாகர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1903)
1996 – யாழ்வாணன், ஈழத்து எழுத்தாளர் (பி. 1933)
2009 – இசுரேல் கெல்ஃபாண்ட், சோவியத் கணிதவியலர் (பி. 1913)
சிறப்பு நாள்
போர்த்துக்கல் – குடியரசு நாள் (1910)
அனைத்துலக ஆசிரியர் நாள்