பரமார்த்த குரு கதைகள் நரகலோகத்தில் பரமார்த்தர் மட்டியும் மடையனும் கன்னத்தில் கை வைத்துக் கொண்டு, கவலையோடு இருந்தனர். மண்டுவும் மூடனும் போனாரே! எங்கள் குரு செத்துப் போனாரே! என்று மூக்கால் அழுது கொண்டு இருந்தனர். “இனி மேல் யார் சுருட்டுக்கு நான் கொள்ளி வைப்பேன்? எங்களைத் தனியாக விட்டுட்டு, இப்படி அநியாயமாச் செத்துட்டீங்களே!” என்று ஒப்பாரி வைத்தான், முட்டாள் அதன் பிறகு, ஐந்து சீடர்களும் மடத்துக்கு எதிரே தெருவில் கட்டிப்பிடித்து உருண்டார்கள். “செத்துப்போன நம் குரு, எங்கே ... Read More »
Monthly Archives: October 2016
உலக சேமிப்பு நாள்!!!
October 31, 2016
உலக சேமிப்பு தினம் , இத்தாலியில் உள்ள மிலானோ நகரில் முதலாவது சர்வதேச சேமிப்பு வங்கி மாநாடு (சேமிப்பு வங்கிகள் உலக சமூகம்) அக்டோபர் 31, 1924-ம் ஆண்டு நிறுவப்பட்டது. உலகம் முழுவதிலும் இருந்து 29 நாடுகளை சார்ந்த அதன் பிரதிநிதிகள், பொதுமக்கள் மத்தியில் சேமிப்பு மற்றும் அதனால் ஏற்படும் பொருளாதார உயர்வு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவ்வொரு தனிமனிதனுக்கும் உள்ள கடமையை அவர்கள் மனதில் பதிய வைக்க வேண்டும் என இந்த மாநாட்டில் தீர்மானிக்க பட்டது. மேலும், ... Read More »
இந்திரா காந்தி!!!
October 31, 2016
இந்திரா காந்தி (1917 – 1984) இந்திய நாட்டின் தலைசிறந்த தலைவர்களில் இவரும் ஒருவர். உலக வரலாற்றில் பெண்களினாலும் ஒரு நாட்டை நிர்வகிக்க முடியுமென்ற நிலையை ஆணித்தனமாக நிரூபித்து இந்திய நாட்டின் முதலாவது பெண் பிரதமராக பதவி வகித்த பெருமைக்குரியவர் மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி. கடந்த 1917 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19 ஆம் திகதி ஜவஹர்லால் நேருவிற்கும் கமலா நேருவிற்கும் மகளாக பிறந்தார் இந்திரா காந்தி என அழைக்கப்பட்ட இந்திரா பிரியதர்ஷனி. இவரின் ... Read More »
ஹாலோவீன்!!!
October 31, 2016
அமெரிக்கத் தீபாவளி – ஹாலோவீன் மெரிக்கர்களின் அன்றாட வாழ்க்கையில் சற்று மாறுதலை ஏற்படுத்தும் வகையில் ஒரு வெளிச்ச விழா! இந்த அமெரிக்கத் தீபாவளி. இந்த அமெரிக்கத் தீபாவளிக்குப் பெயர் “ஹாலோவீன்”. இறந்தவர்கள் சொர்க்கத்துக்கும் போகாமல் நரகத்துக்கும் போகாமல் ஆவியாக அலைந்து கொண்டிருப்பவர்களை மகிழ்விக்கும் நன்னாள் தான் “ஹாலோவீன்” நாள் என்பது. இப்படிப்பட்ட கெட்ட ஆவிகளை மகிழ்ச்சியடையச் செய்வதன் மூலம் தங்களுக்கு எந்த விதமான பாதிப்புகளும் நேராது என நம்புகிறார்கள் அமெரிக்கர்கள். தீபாவளியைப் போலவே ஹாலோவீனுக்கும் வாழ்த்து அட்டைகளிலிருந்து ... Read More »
வால்நட் எனப்படும் அக்ரூட்!!!
October 30, 2016
வளம் சேர்க்கும் வால்நட் உடல் பருமன் மற்றும் கொழுப்புச் சத்தால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் வால்நட் எனப்படும் அக்ரூட்கள் முக்கியப் பங்காற்றுகின்றன என உணவியல் வல்லுனர்களும், ஆராய்ச்சியாளர்களும் தெரிவித்துள்ளனர். உடலில் தேவையற்ற கொழுப்புச் சத்தின் அளவு அதிகரிக்கும் போது மாரடைப்பு உள்ளிட்ட பல்வேறு இதய பாதிப்புகள் தாக்கும் அபாயம் உண்டு. மனிதனுக்கு ஏற்படும் சில வகைப் புற்று நோய் கட்டிகளின் வளர்ச்சியைக் குறைக்கும் ... Read More »
ஜென் கதைகள் – மூன்று தலைகள் !!!
October 30, 2016
மாமன்னர் அசோகர் குடிமைப் பணிகளைப் பார்வையிட்டு அரண்மனை திரும்பிக் கொண்டிருந்தார். போரே வேண்டாம்… போரே மன்னனின் தொழில் என்றிருந்த அவர் புத்தரின் பாதையில் அன்பு வழி போதும் என மனதளவில் மாற்றம் அடைந்திருந்த நேரம்! இப்போது அவருக்கு எதிரில் வந்து கொண்டிருந்த ஒரு வயோதிக துறவியும் அவரது சீடர்களும் மன்னருக்கு வழிவிட்டு ஒதுங்கி நின்றனர். அசோகரின் பார்வை ஒதுங்கி நின்ற துறவி மீது பட்டது. உடனே தமது ரதத்தை நிறுத்திவிட்டு இறங்கிச் சென்று புத்த பிக்ஷுவின் காலில் ... Read More »
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர்!!!
October 30, 2016
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர்: பிறப்பு: இராமநாதபுரம் மாவட்டத்தில் பசும்பொன் எனும் ஊரில் 1908ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 30ம் நாள் பிறந்தார். பெற்றோர்: தந்தை- உக்கிரபாண்டித்தேவர். தாய் – இந்திராணி. இஸ்லாமியபெண்மணி இவருக்கு பாலூட்டி வளர்த்தார். இவருடைய ஆசிரியர் -குறைவறவாசித்தான்பிள்ளை. தொடக்கக்கல்வி – கமுதியில் கிருஸ்தவ பாதிரியார்களிடம் – பசுமலைஉயர்நிலைப்பள்ளி(மதுரை) – 10ம் வகுப்பு ராமநாதபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில்.இராமநாதபுரத்தில் பரவிய பிளேக் நோயால் இவரது கல்வி நின்றது. தமிழ், ஆங்கிலம்இருமொழிகளிலும் வல்லவர். சிலம்பம், குதிரை ஏற்றம், துப்பாக்கி சுடுதல், ஜோதிடம்,மருத்துவம் ஆகியவர்றை கற்றறிந்தார். முத்துராமலிங்கத்தேவர் எத்தனை சிற்றூர்களில் இருந்த தம் சொந்த நிலங்களைதாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கினார் – 32 சிற்றூர்களில் இருந்த நிலங்கள். முத்துராமலிங்கத்தேவர் தன்னுடைய அரசியல் குருவாக கருதியவர் – வங்கத்துசிங்கம் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ். இவரின் விருப்பத்திற்கேற்ப நேதாஜி 06.09.1939-ல் மதுரை வந்தார். நிலக்கிழார் ஒழிப்பிலும் ஆலய நுழைவுப் போராட்டத்திலும் முன்னின்றார். சமபந்தி முறையை ஆதரித்தார். தேசியம் காத்த செம்மல் என இவரை திரு.வி.க பாராட்டியுள்ளார். தேர்தலில் போட்டியிட்டு ஐந்துமுறை வெற்றி பெற்றார்.(1937,1946,1952,1957,1962) தெய்வீகம் தேசியம் இரண்டையும் இருகண்களாக போற்றியவர். சிறப்பு பெயர்கள்: வேதாந்த பாஸ்கர், பிரணவகேசரி, சன்மார்க்க கண்ட மாருதம்,இந்து புத்த சம்ய மேதை. 1995ல் மத்திய அரசு இவருக்கு அஞ்சல்தலை வெளியிட்டது. தமிழக அரசு சென்னையில் இவருக்கு சிலையும், அச்சிலை இருக்கும் சாலைக்கு இவருடைய பெயரையும் சூட்டியுள்ளது. முத்துராமலிங்க தேவர் தன்னுடைய சொத்துக்களை 17 பாகங்களாக பிரித்தார். 17 பாக சொத்துக்களில் 16 பாகங்களை 16 பேர்களுக்கு இனாம் சாசனமாக எழுதிவைத்தார். உப்பக்கம் என்றால் முதுகப்பக்கம் என்று பொருள். உம்பர் என்றால் மேலே என்று பொருள். உதுக்கண் – சற்றுத் தொலைவில் பார். கன்னியாகுமாரியில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்ட ஆண்டு – 2001 சனவரி-1. இவரின் கூற்றுகள்: சாதியையும் நிறத்தையும் பார்த்து மனிதனை தாழ்வுபடுத்துவது பெருங்கொடுமைஆண்டவன் மனித குலத்தைத்தான் படைத்தானே தவிர சாதியையும் நிறத்தையும்அல்ல சாதியும் நிறமும் அரசியலுக்கும் இல்லை, ஆன்மீகத்ததிற்கும் இல்லை. வீரமில்லாத வாழ்வும் விவேகமில்லாத வீரமும் வீணாகும். பனை மரத்திலிருந்து விழுந்து பிழைத்தவனும் உண்டு. வயல் வரப்பில் வழுக்கி விழுந்து இறந்தவனும்உண்டு. மனிதனின் மனநிலையை இருள், மருள், தெருள், அருள் என குறிப்பிட்டுள்ளார். மறைவு – 1936ஆம் ஆண்டு அக்டோபர் 30(பிறந்தநாள்) Read More »
தயானந்த சரஸ்வதி சுவாமி!!!
October 30, 2016
பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோன்றிய இந்து மதத்தலைவர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவராக கருதப்படுபவர் சுவாமி தயானந்த சரஸ்வதி ஆவார். இந்து சமயத்தின் தீவிர சிந்தனையாளராகவும், உலகம் போற்றும் தத்துவவாதியாகவும் வாழ்ந்தவர். இந்து சமுதாயத்தில் இருந்து வரும் தீமைகளைக் களையவும், வேத சமுதாயத்திற்கு புத்துயிர் அளிக்கவும், இந்து மதத்தை மெருகேற்றிப் புதுப்பொலிவுடன் மிளிரச் செய்யும் “ஆரிய சமாஜம்” என்னும் அமைப்பை 1875 ஆம் ஆண்டில் உருவாக்கினார். சிறு வயதிலேயே சமய நம்பிக்கைகள் குறித்து பகுத்தறிவுடன் பல கேள்விகள் எழுப்பியது மட்டுமல்லாமல், இந்த ... Read More »
சமூக முன்னேற்றத்துக்கு பெண்களின் பங்கு!!!
October 29, 2016
விவேகானந்தர் பார்வையில் சமூக முன்னேற்றத்துக்கு பெண்களின் பங்கு:- ஓர் ஆணுக்கு இயல்பாகவே கிடைக்கின்ற கல்வி, ஆன்மிகம், வீரம், வேலை, தொழில் இவை எல்லாமே பாகுபாடின்றி பெண்ணுக்கும் கிடைக்க வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக இருந்தார் சுவாமி விவேகானந்தர். குறிப்பாக பெண்களின் பலம் அவர்களுக்குத் தெரியவில்லை என்பதையும் பல இடங்களில் வலியுறுத்தியுள்ளார். ‘எங்கள் குடும்பங்களில் அன்னையே கடவுள். இவ்வுலகில் தன்னலம் சிறிதும் அற்ற, உண்மையான அன்பு ஒரு தாயிடம் மட்டுமே இருக்கிறது. அந்த அன்பினால் அவள் எப்போதும் துன்புற்றுக் ... Read More »
யார் கொடுப்பார்?
October 29, 2016
ஓர் ஊரில் செல்வந்தர் ஒருவர் இருந்தார். அந்த வட்டாரத்தில் உள்ள செல்வந்தர்களின் சொத்து மதிப்பைக் கணக்கிட்டால், அவர்தான் முதலிடம் பெறுவார். அந்த அளவுக்கு அவருக்கு சொத்துக்களும், செல்வமும் இருந்தன. அதாவது அசையும் சொத்து, அசையாச் சொத்து ஆகியவை அளவிட முடியாத அளவுக்கு இருந்தன. இவ்வளவு செல்வக் குவியலோடு இருந்த அந்தச் செல்வந்தர் தனது பெற்றோர் மற்றும் மனைவி, மகன்கள், மகள்களுடன் மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வந்தார். தனது மகனோ, மகளோ எதை விரும்பிக் கேட்டாலும், அடுத்த நொடியிலேயே ... Read More »