மகான் ஏகநாதரிடம் பக்தர் ஒருவர், “”சுவாமி! பாவமே செய்யக் கூடாது என்று நினைக்கிறேன். ஆனால், என்னையும் அறியாமல் செய்து விடுகிறேன். இதைத் தடுக்க வழியே இல்லையா?” என்று கேட்டார். ஏகநாதர் அவரிடம்,”” என்ன பாவம் செய்திருந்தாலும், இன்னும் ஏழுநாட்கள் மட்டும் பொறுத்துக் கொள்ளுங்கள். அதன் பின் உங்கள் கவலை தீர்ந்து விடும்!” என்றார். “”ஏன்.. இன்னும் ஏழுநாட்களில் என்ன நிகழ்ந்து விடப் போகிறது?” என்றார் பக்தர். “”ஏழுநாளோடு உங்கள் ஆயுளே முடிந்து விடப் போகிறது என்பதை தான் சொன்னேன்” என்றார் ஏகநாதர். இதைக் கேட்டு, “”சுவாமி! என் ஆயுள் இன்னும் ஏழுநாள் தானா?’ என்று அதிர்ந்தார். “”ஆம்..” என்றார் ... Read More »
Daily Archives: September 30, 2016
இரத்தினச் சுருக்கம்
September 30, 2016
இராமாயண கதையைப்பற்றி விளக்கிச் சொல்ல பெரியவர் ஒருவர் ஒரு ஊருக்கு வந்திருந்தார். அந்த ஊர் மக்கள் அனைவரும் அவரிடம் ஐந்தே நிமிடத்தில் இராமாயணக் கதையைய் சொல்லி முடிக்குமாறு கேட்டுக் கொண்டனர். சற்றே யோசித்த அந்த பெரியவர் பிறகு ஒப்புக் கொண்டார். கதை…இந்த உலகத்தில் ‘எவன் ஒருவன் தாய் தந்தையரின் சொற்படி கேட்டு நடக்கிறானோ அவனுக்கு உலக உயிர்கள் எல்லாம் துணை செய்யும். எவன் ஒருவன் மாற்றான் மனைவி மீது ஆசைகொள்கிறானோ அவனை உடன் பிறந்தவர்களே காட்டிக் கொடுப்பார்கள்’. என்று கதையைய் முடித்தார். எப்படி… எப்படி என்று கேட்டார்கள் ஊர்க்காரர்கள். பதில்…அயோத்திய மன்னனான ... Read More »
நாணயம் கூறும் பாடம்
September 30, 2016
நம் எல்லோருக்கும் தெரிந்த விஷயம் நாணயத்திற்கு இரண்டு பக்கம் உள்ளது என்பது.ஒரு பக்கம் தலை மற்றொரு பக்கம் பூ. இதே போல் தான் நம் வாழ்கையில் வெற்றியும் தோல்வியும். வெற்றி தலை என்றுவைத்துக்கொண்டால் பூ தோல்வி. நாம் நாணயத்தை சுண்டி விட்டால் தலையும் வரலாம் பூவும் வரலாம். இதன்இரண்டிற்கும் உண்டான சாத்தியக்கூறு 50% ஆகும். இது போல் தான் நம் வாழ்கையில்வெற்றியும் தோல்வியும். ஒரு முறை தோல்வி அடைந்தால்அடுத்த முறை வெற்றிஅடைய வாய்ப்பு இருக்கிறது. அடுத்த முறையும் தோல்வி அடைந்தால்அதற்கு அடுத்தமுறை வெற்றி அடைய வாய்ப்பு உண்டு. எப்போதும் பூ தான் விழும் என்று சொல்ல முடியுமா. தலை எப்போதாவது வந்து தானேஆக வேண்டும் இல்லையா. அது போல தான் வாழ்க்கை. எப்பொழுதும் தோல்வியேவரும் என்று இல்லை. நிச்சயம்மாக வெற்றி வரத்தான் செய்யும். மீண்டும் பூ விழுந்து விட்டதே என்று மீண்டும் நாணயத்தை சுன்டாமல் விட்டால் தலைஎப்படி வரும். அது போல தோல்வி அடைந்து விட்டோமே என்று மீண்டும் முயற்சிசெய்யாமல் விட்டு விட்டால் வெற்றி எப்படி அடைய முடியும். உங்களுக்கு தோல்வி வரும் போதெல்லாம் உங்கள் பாக்கெட்டிலிருந்து ஒருநாணயத்தை எடுத்து பாருங்கள். அடுத்த முறை வெற்றி தான் என்று சொல்லிகொள்ளுங்கள். உங்களுக்கு தெம்பு வரும். மீண்டும் முயற்சி செய்யும் வேகம் வரும்.அடுத்த முறை வெற்றி அடைவீகள். Read More »
இன்று: செப்டம்பர் 30!!!
September 30, 2016
நிகழ்வுகள் 1399 – நான்காம் ஹென்றி இங்கிலாந்தின் மன்னனாக முடி சூடினான். 1744 – பிரான்ஸ், மற்றும் ஸ்பெயின் இணைந்து சார்டீனியா பேரரசை தோற்கடித்தனர். 1791 – மோட்ஸார்ட்டின் கடைசி ஒப்பேரா வியென்னாவில் அரங்கேறியது. 1840 – நெப்போலியன் பொனபார்ட்டின் எஞ்சிய உடல் பகுதி பிரான்சுக்கு எடுத்து வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. 1860 – பிரித்தானியாவின் முதலாவது அமிழ் தண்டூர்தி (tram) சேவை ஆரம்பமானது. 1867 – ஐக்கிய அமெரிக்கா மிட்வே தீவின் அதிகாரத்தைக் கைப்பற்றியது. 1882 – உலகின் முதலாவது நீர்மின் திறன் ஐக்கிய அமெரிக்காவின் விஸ்கொன்சின் மாநிலத்தில் அமைக்கப்பட்டது. 1888 – கிழிப்பர் ஜேக் தனது மூன்றாவது, மற்றும் நான்காவது கொலைகளைச் செய்தான். 1895 – மடகஸ்கார் பிரெஞ்சு பாதுகாக்கப்பட்ட அரசாக அறிவிக்கப்பட்டது. 1901 – ஹியூபேர்ட் செசில் பூத் தூசுறிஞ்சிக்கான காப்புரிமம் பெற்றார். 1935 – அரிசோனா, நெவாடா மாநிலங்களுக்கிடையே ஊவர் அணை திறக்கப்பட்டது. 1938 – செக்கோசிலவாக்கியாவின் சுடெட்டென்லாந்துப் பகுதியை ஆளும் உரிமையை ஜேர்மனிக்கு வழங்குவதற்கான உடன்படிக்கையில் பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி, மற்றும் இத்தாலி ஆகியன அதிகாலை ... Read More »