கஷ்டப்பட்டு வேலை செய்தால்
பின்னால் பலன் உண்டு என்று சொன்னது
வாழ்க்கை ஒரு சக்கரம் அதில்
நம்பிக்கை தான் அச்சாணி
இன்று உணவகத்தில் சுத்தம் செய்கிறான்
நாளை முதலாளி ஆகலாம் என்ற நம்பிக்கையில்
உழவன் உழுது பயிர் வைக்கிறான்
நாளை அது விளைச்சல் தரும் என்ற நம்பிக்கையில்
குழந்தை துணையுடன் நடக்க முயற்சி செய்கிறது
நாளை யார் துணையும் இல்லாமல் நடக்கலாம் என்ற நம்பிக்கையில்
நடந்து நடந்து கால்கள் ஒய்ந்தது
மனதில் மட்டும் தெம்பு இருந்தது
கஷ்டப்பட்டு வேலை செய்தால்
பின்னால் பலன் உண்டு என்று சொன்னது
மனதில் வரும் வலி
விரைவில் தீரும் என்று நம்பு
தோல்வி இல்லாத வாழ்க்கை
இனிப்பு இல்லாத பாயாசம்
வாழ்க்கை ஒரு ஏணி அதில்
ஏற்ற இறக்கம் நிச்சயம்
ஆயிரம் வேலை செய்யலாம் ஆனால்
குறிக்கோள் ஒன்றாக வை
ஆயிரம் வேலைகளும் குறிக்கோளை அடைய
உதவி செய்திட வை
நடந்து நடந்து கால்கள் ஒய்ந்தது
மனதில் மட்டும் தெம்பு இருந்தது
கஷ்டப்பட்டு வேலை செய்தால்
பின்னால் பலன் உண்டு என்று சொன்னது