1. பெற்றோரையும், பெரியோரையும் மதித்து நடப்பது சிறப்பு.
2. ஒழுக்கம் தவறாத நடத்தையுடன் இருப்பது சிறப்பு.
3. அடுத்தவர்களின் மகிழ்ச்சியில் இன்பம் காண்பது சிறப்பு.
4. யார் மனதையும் புண்படுத்தி பேசாமல் இருப்பது சிறப்பு.
5. எது நடந்தாலும் மனம் கலங்காமல் தன்னம்பிக்கையுடன் இருப்பது சிறப்பு.
6. உன்னைப்போல் பிறரையும் நேசித்து வாழ்வது சிறப்பு.
7. ஆடம்பர செலவு செய்யாமல் சிக்கனமாக
சேமித்து வைப்பது சிறப்பு.
8. அடுத்தவர்களைப் பார்த்து பொறாமைப்படாமல் உன்னிடம் உள்ளதை வைத்து மனதிருப்தியுடன் வாழ்வது சிறப்பு.
9. அதிகமாக ஆசைப்படாமலும், கோபப்படாமலும், கவலைப்படாமலும் வாழ்வது சிறப்பு.
10. பிறர் நம்மீது வைத்திருக்கும் பாசம், நம்பிக்கையை சீர்கெடாமல் வாழ்வது சிறப்பு.
11. மனபலத்தையும், உடல் பலத்தையும் பாதிக்கும்
தீய செயல்களைச் செய்யாமல் வாழ்வது சிறப்பு.
12. தீயவர்களுடன் சேராமலும், நல்லவர்களுடன் நட்புறவு கொள்வது சிறப்பு.
13. அனைவரிடமும் அன்புடனும், பணிவுடனும், புன்னகையுடனும் பழகுவது சிறப்பு.
14. பிறரை ஏமாற்றாமலும், பிறரிடம் ஏமாறாமலும் வாழ்வது சிறப்பு.
15. தீயது என தெரிந்ததை செய்யாமலும், நல்லது என அறிந்ததை துணிவுடன் செய்துநல்ல மனசாட்சியுடன் வாழ்வது சிறப்பு.