Home » பொது » வாழ்க்கையை மேம்படுத்த வெற்றிப்படி தரும் நற்சிந்தனைகள் !!!

வாழ்க்கையை மேம்படுத்த வெற்றிப்படி தரும் நற்சிந்தனைகள் !!!

01. அதிகம் செய்வது சிறந்தது என்ற கருத்தை மாற்றிக் கொண்டு, குறைவாக செய்வதில் நிறைய பலன் உண்டு என்று நினைத்து நடவுங்கள், வாழ்வில் மகிழ்ச்சி ஆரம்பித்துவிடும்.

02. தினமும் மூன்று என்று திட்டமிட்டு காரியங்களை செய்து வந்தால் அதிசயிக்கக் கூடிய வெற்றியை எட்டித் தொட்டிருக்கக் காண்பீர்கள். முடித்தாக வேண்டிய பணிகளில் முதல் மூன்றை தேர்வு செய்து முடியுங்கள் என்பது இதன் கருத்து.

03. தேவையில்லாத விடயங்களை அங்குலம் அங்குலமாக யோசித்து, யோசித்து அலட்டிக் கொள்வதால் காலமும் நேரமும் விரயமாகிறதே அல்லாமல் வேறெதுவும் நடப்பதில்லை என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

04. அச்சத்தினால் ஒத்திப் போடும் பழக்கமே உங்கள் பகைவனாகும். அதை நிர்மூலம் செய்வதில்தான் வெற்றி தங்கியுள்ளது.

05. வாழ்க்கையில் சின்னச் சின்ன விடயங்கள் கூட பெரிய பெரிய சந்தோசத்தை அள்ளித்தரக் கூடியவை. அன்றாட வாழ்வில் சின்னச்சின்ன விடயங்களை முடிப்பதன் மூலம் பெரிய சந்தோசத்தை அனுபவிக்க முடியும்.

06. நமது மனோ நிலையில் பொதிந்துள்ள ஆற்றல்தான் முடிவைத் தீர்மானிக்கப் போகிறது. ஆக்கபூர்வமான எதிர்பார்ப்பை தெரிவு செய்யுங்கள் ! வெற்றியை எதிர் பாருங்கள். ஆனால் வெற்றி நாளை வருமென்று மனதிற்கு தகவல் கொடுக்காதீர்கள். வெற்றி இதோ இதைப்படிக்க வந்திருக்கிறீர்களே இக்கணம்தான் வெற்றி.

07. உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள், உங்களின் உள்ளேயுள்ள திசைகாட்டியின் வழியே நடவுங்கள். அதுதான் உள்ளிருப்பதை வெளிக்காட்டி வெற்றிகொள்ளும் வழிமுறையாகும்.

08. இடர்களை எதிர் கொள்ளத் துணிந்தவன் மட்டுமே உண்மையில் சுதந்திர மனிதனாகும். இடர்களை எதிர் கொள்ள தயங்குவோர் விலங்கு ப10ட்டிய அடிமைகள்.

09. ரிஸ்க் எடுப்பது அவசியம், அதை குழந்தைகளின் சிறிய நடைபோல சிறிது சிறிதாக பிரித்து எடுத்தால் பாரம் தெரியாமலே இலக்கை அடைந்துவிடலாம்.

10. எல்லாவித மகிழ்வுகளையும் இழந்து தலைமைப் பதவியை அடைந்த ஒருவர் தனது வெற்றி கூட தவறான பாதையில் சென்றுவிட்டதைக் கண்டு கொண்டார்.

11. வெற்றி என்பது ஒரு தொடர் நடவடிக்கை, அது ஓர் உணர்வு. நான் யார் என்னவாக இருக்கிறேன், எப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறேன், என்பதுபற்றி நமக்குள்ளே ஜொலிக்கும் இதமான உணர்வுதான் வெற்றி !

12. அன்றாட வாழ்க்கையில் மூழ்கிப் போவதால் கனவுகளை நிறைவேற்ற முடியாமல் போய்விடுகிறோம். ஒரு கட்டத்தில் இலட்சியத்தையே மறந்துவிடுகிறோம். ஆகவேதான் நேரத்தை நழுவ விட்டுவிடக் கூடாது.

13. இதுவரை நீங்கள் பெற்றிருப்பதற்காக செலுத்தும் நன்றிகள் அந்த நன்மைகளை தொடர்ந்து பெருகச் செய்யும்.

14. பணப்பற்றாக்குறை இருக்கிறது என்ற எண்ணத்தை முளையிலேயே கிள்ளி எறிந்துவிடுங்கள். என்வாழ்வில் ஏராளமாக பணம் சேர்கிறது என்ற எண்ணத்தை மனதிற்கு வழங்கி அமைதி காணுங்கள், பின்னர் அவதானியுங்கள் வளங்கள் பெருகியிருக்கக் காண்பீர்கள்.

15. தாங்கள் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் வேலை, பரவசமானதாகவும் அர்த்தம் நிறைந்ததாகவும் அமையப் பெற்றவர்கள் மிகவும் சந்தோசமானவர்கள்.

16. நாம் வலுவாக நினைக்கும் ஒன்று நமக்குக் கிடைக்கிறது.

17. பிரச்சனையில் கவனம் செலுத்துகிறோமா அல்லது தீர்வில் கவனம் செலுத்துகிறோமா என்பதை யோசித்து நடக்க வேண்டும்.

18. ஒரு பிரச்சனையை தீர்ப்பதற்கு 25 விதமான வழி முறைகள் உள்ளன. எனவேதான் உங்கள் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு பல்வேறு விதமான வழிகளை தேடுவதில் நாட்டம் காணுங்கள்.

19. வேகமாக ஓடுவோர் ஒரு கட்டத்தில் களைத்து நின்றுவிட வேண்டி வரும். சாவகாசம், நிதானம் என்பதே களைப்பின்றி பயணிக்க ஏற்ற மருந்தாகும்.

20. இந்த வாரமாவது உங்கள் வேக வியாதியை கொஞ்சம் ஒத்தி வையுங்கள், சாவகாசமாக, நிதானமாக செயற்படுவதில் உள்ள பரவசத்தை அனுபவியுங்கள்.

21. வெற்றியை புகழ்ந்து பாராட்டும் கலையை கற்றுக் கொள்ள வேண்டும். நாம் செய்ய வேண்டியதும், செய்ய முடிகிறதுமான காரியம் இதுவாகும்.

22. நாம் ஒழுங்காக செய்ததைவிட ஒழுங்குபட செய்யாத காரியத்தில்தான் கூடுதல் கவனம் செலுத்தி கவலைப்பட்டு வருகிறோம்.

23. குறைகளை பார்ப்பதை விடுத்து, உங்கள் வெற்றிகளையும், மற்றவர் வெற்றிகளையும் பாராட்டப் பழகுங்கள்.

24. வெற்றிகரமாக வாழ விரும்பினால் – செம்மையான செயற்பாடு .. – என்பதற்கு விடைகொடுக்க வேண்டி வரும்.

25. செம்மையோ செம்மை என்ற மனோபாவம் நம்மிடமிருந்து விடுபடுவதற்கான பயிற்சியை மேற் கொள்வோம். திருத்தம், செம்மை என்பதை விடுத்து நன்றாக சிறப்பாக செயற்படுவதில் நாட்டம் கொள்வோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top