Home » படித்ததில் பிடித்தது » படித்தது / பிடித்தது ….

படித்தது / பிடித்தது ….

நண்பனுடன்
அவனது
வீட்டிற்குச்சென்றிருந்தேன்..

வாசலில்
அவனது பாட்டி
கயிற்றுக்கட்டிலில்
கிடந்தார்..

நண்பன் உள்ளே
போய்விட்டான்..

நான் : என்ன பாட்டி நல்லா இருக்கிங்களா..?

பாட்டி : நல்லாருக்கேன் ராசா.. நீ ராசா..?

நான் : நல்லாருக்கேன் பாட்டி..

இடையே எனது Android  தொலைபேசி அழைத்தது..
பேசி முடித்தேன்..

பாட்டி : என்னாய்யா அது   டிவி பொட்டி கணக்கா..?
நான் : இதுவா பாட்டி..
இது புதுசா வந்துருக்குற ஃபோனு..
சட்டென்று ஞாபகம் வந்தவனாய்
அதிலிருந்த Talking Tom-ஐ
எடுத்துக்காட்டினேன்..
பாட்டி இதுகிட்ட பேசினா
அத அப்புடியே திரும்ப பேசும்..

பாட்டி : என்ன ராசா சொல்றே..?
Talking Tom :என்ன ராசா சொல்றே..?

நானும், பாட்டியும், Talking Tomமும் சிரித்தோம்..

பிறகு வீட்டினுள்
சென்றேன்..

எல்லோருடன்
பேசிவிட்டு வெளியில் வந்தேன்…

வாசலில் பாட்டி..

நான் : போயிட்டு வாரேன் பாட்டி..

பாட்டி : ராசா…

நான் : என்னா பாட்டி..?

பாட்டி : ஏய்யா.. அந்தபூனகுட்டிய
இங்க உட்டுட்டு போயா..

நான் : என்ன பாட்டி சொல்றிங்க..?

பாட்டி : ஆமாய்யா..
இந்த வயசான காலத்துல இங்க
எங்கிட்ட யாருமே பேச மாட்றாங்கயா..
நா செத்துபோறப்ப
அந்த பூனகுட்டிகிட்டயாச்சும்
பேசிட்டே சாவுறேன்யா..

(வீட்டில் உள்ள முதியோர்களிடம்மூம் பேச நேரம் ஒதுக்குங்கள்அவர்கள் உணர்வுகளுக்கும் மதிப்பளியுங்கள்…)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top