புனைப்பெயர்
ஸ்பட், மர்பி, பூமி ஆப்பிள்
பணி
பல நாடுகளில் நிரந்தர உணவு, மற்ற காய்களுடன் கூட்டணி அமைத்துக் கொண்டு, சூப், சாலட், கூட்டு, குருமா குழம்பாக பரிணமிக்கும். வறுத்து, அவித்து, பொரித்து சமையல் செய்ய ஒத்துழைக்கும்.
உபரி பணி
பசை, ஆல்ஹால், டெக்ட்ஸ்ரோஸ், குளுக் கோஸ் தயாரிக்க பயன்படுதல்.
பிறப்பு
18-ம் நூற்றாண்டில் பிரஞ்சு மனிதர் அன்டயின் அகஷ்ட் இதன் பூவை முதன் முதலில் சட்டை பட்டனில் சொருகி கொண்டார். அதன் பின்னர் பதினாறாம் லூயி காய்கறிபோல சமைக்கலாம் என தனது ராஜசபையில் உத்தரவிட்டான். அதன் பின்னர் உலகம் முழுதும் பரவலானது.
அ யர்லாந்து நாட்டில் 1845-ம் ஆண்டிலிருந்து 49-ம் ஆண்டு வரை கடும் பஞ்சம். இதனால் இறந்து போனவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்துக்கும் அதிகம். இத்தனை பேரின் உயிரை பலி கொண்டது என்ன பஞ்சம் தெரியுமா… உருளைக் கிழங்கு பஞ்சம். உலக வரலாற்றிலேயே காய்கறி ஒன்றின் காரணமாக ஏற்பட்ட மிகப்பெரிய அழிவு இதுதான் என்கிறது வரலாறு.
என்னது உருளைக் கிழங்கு பஞ்சம் இவ்வளவு உயிர்களைப் பறித்ததா…? ஆம்… அயர்லாந்து மக்களின் உணவில் 90 % இடத்தைப் பிடித்திருப்பது உருளைக் கிழங்கு. பிளைட் ( Blight ) எனும் கிருமி தாக்குதலால் உருளைக்கிழங்கு விவசாயம் எகிடுதகிடாக பாதிக்கப் பட்டதே பஞ்சத்துக்கு காரணமாக அமைந்து போனது.
இப்படியரு சோக வரலாற்றை தனதாகக் கொண்டிருக்கும் உருளைக் கிழங்கின் இன்றைய நிலையே வேறு. உலகில் அதிகமாக பயிராகும் பொருட்களின் வரிசையில் நான்காவது இடத்தைப் பிடித்திருக்கும் இந்த உருளை, எந்த தட்பவெட்ப சூழ்நிலை யிலும், உலகின் அனைத்து பகுதிகளி லும் வளரக்கூடிய தன்மை கொண்டது. இமயமலையின் பதினைந்தாயிரம் அடி உயரத்தில்… உலகிலேயே தாழ்வான பகுதியான ஹாலந்து நாட்டில் என பரவலாக பயிராகிறது உருளை.
2005-ம் ஆண்டு உலக உணவு மற்றும் விவசாயக் கழகம் நடத்திய கணக்கெடுப்பின்படி, உலக அளவில் ஆண்டொன்றுக்கு 32 கோடி டன் உருளை பயிர் செய்யப்படுவதாக தெரியவந்துள்ளது. உருளை விவசாயத்தில் முதலிடம் சீனாவுக்கு தான். உணவு தேவைக்கு மட்டுமின்றி மருந்துப் பொருளாகவும் உருளை பயன்படுகிறது. இதிலிருக்கும் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் பி போன்றவை குடல் புற்று நோய் மற்றும் உடலில் தேவையில்லாத கொழுப்பு சத்துக்களைக் குறைப்பதற்கான மருந்துகளின் மூலப்பொருளாக பயன்படுகின்றன.
உருளையின் தாயகம் என்று தென்அமெரிக்காவின் பெரு நாடு என்பது பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாக இருக்கிறது. 15-ம் நூற்றாண்டில் பெரு நாட்டிலிருந்து ஐரோப்பாவுக்கு விசா வாங்கிய உருளை, 16-ம் நூற்றாண்டு வாக்கில் போர்த்துகீசியர்கள் மூலமாக இந்தியா வந்து சேர்ந்திருக்கிறது.
நம்நாட்டில் தற்போது 35 வகை உருளைக் கிழங்குகள், ஆண்டொன்றுக்கு சுமார் 30 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்படுகின்றன. சுமார் இரண்டரை கோடி டன் மகசூல் எடுக்கப்படுகிறது. உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், பீகார், பஞ்சாப் மற்றும் தமிழகத்தில் இது பயிரிடப்படுகிறது. நம் மாநிலத்தைப் பொறுத்தவரை நீலகிரி, பழனி ஆகிய பகுதிகளில் அதிகமாக பயிராகிறது.
எதற்கெடுத்தாலும் நம்ம ஊரில் கத்தரிக்காயை பயன்படுத்துவது போல… உலகம் முழுக்கவே பயன்படுத்தப்படுவது உருளைக் கிழங்கு. அதனாலயே அதற்கு ‘ஏழையின் உணவு’ என்றொரு பெயரும் இருக்கிறது.
எதிர்ப்பு
ஆரம்பத்தில் ஸ்காட்லாந்து பாதிரியார்கள் உருளைகிழங்கு உண்ணும் பொருளல்ல என்றார்கள். இதற்கு இவர் கள் சொன்ன காரணம்„ பைபிளில் உருளைப்பற்றிய செய்தி வரவில்லை என்பதுதான்.
பயன்
உருளை சத்து மிகுந்தது. இதில் வைட்டமின் சி, பொட்டாசியம் உள்ளது. உருளையை தோலுடன் உண்பதனால் நார்சத்து உடம்பில் சேருகிறது. மற்ற காய்கறியுடன் ஒப்பிடும் போதுகுறைவான கலோரிகளை உடைய சத்து மிகுந்தது. இதனை வறுத்து உண்பதைவிட வேக வைத்து உண்பதே நல்லது.
ஆலோசனை
உருளையில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால் இருதய நோயாளிகளுக்கும், ரத்த கொதிப்பு காரர்களுக்கும் இது மிகவும் நல்லது. உருளையை சர்க்கரை நோயாளிகள் தவிர்ப்பது நல்லது.
தோல் சுருக்கங்களை நீக்கும்
உருளைக் கிழங்கில் உள்ள மாவுச்சத்து, அடிவயிறு மற்றும் இரைப்பைகளில் உள்ள குழாய்கள் வீங்குவதையும், அவற்றில் நச்சுநீர் தேங்குவதையும் முன் கூட்டியே தடுத்து, உடலுக்கு நன்மை செய்கிறது. உடலில் எலும்பு இணைப்புகள் மற்றும் தசைப் பகுதிகளில் வீக்கம் முதலிய கோளாறுகளுக்கும், வாத நோய்களுக்கும் வெளிப் பூச்சாகத் தேய்க்க, நிவாரணம் கிடைக்கும்.
உருளைக்கிழங்கு சாற்றை அடுப்பில் வைத்து, மூன்றில் ஒரு பங்காக வற்றச் செய்து, அதில் கிளிசரின் சேர்த்து, பாட்டிலில் அடைத்து வைத்துக் கொள்ள வேண்டும். வீக்கம், வலி உள்ள இடங்களில் இரண்டு அல்லது மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை, இந்த தைலத்தை அழுத்தித் தேய்த்தால், ஒரே நாளில் வீக்கம் குறையும், வலி நீங்கும்.
அவித்த உருளைக் கிழங்குகளின் தோல்களைச் சேகரித்து, சுத்தம் செய்து, ஒரு டம்ளர் தண்ணீரில் பத்து நிமிடங்கள் அடுப்பில் வைத்து இறக்கவும். பிறகு, இந்தக் கஷாயத்தை அருந்தினாலும் கீல் வாதம் குணமாகும். இந்த முறையில் தினமும் மும்முறை தயாரித்து அருந்த வேண்டும்.
உருளைக்கிழங்கு வைத்தியம்
தினசரி உணவில், உருளைக் கிழங்கை அவித்தோ, வேகவைத்தோ, பொரித்தோ, சூப்வைத்தோ சேர்த்துக் கொள்வதுதான் உருளைக் கிழங்கு வைத்தியம். சோறு, சப்பாத்தி போன்றவற்றைக் குறைத்துக்கொண்டு உருளைக் கிழங்குடன் கீரை வகைகளை, குறிப்பாக லெட்டூஸ், பசலைக்கீரை, தக்காளி, செலரி, வெள்ளரிக்காய், பிட்ரூட் கிழங்கு, டர்னிப் போன்றவற்றையும் சேர்த்துச் சாப்பிடவேண்டும்.
இதன்மூலம், தோலில் உள்ள அழுக்குகளும், சுருக்கங்களும் நீங்கிவிடும். மலச்சிக்கலும் அகன்று, இரத்தம் சுத்தம் செய்யப்பட்டுவிடும்.
கெட்டுப்போன இரத்தம், குடல்பாதையின் நச்சுத்தன்மை உள்ள அமிலம், சிறுநீரில் உள்ள புளிப்பு அமிலம் தொடர்பாக ஏற்படும் நோய்கள் உள்ளோர், நீண்ட நாள் மலச்சிக்ககால் அவதிப்படுவோர் ஆகியோர் உருளைக்கிழங்கு வைத்தியத்தை குறைந்தது ஆறுமாதங்கள் பின்பற்றினால், மேற்கண்ட நோய்களிலிருந்து பூரண நலம் பெறலாம்.
இயற்கை ‘பிளீச்சிங்’
இரவு தூங்கப்போகும் முன்னர், பச்சை உருளைக்கிழங்கை நசுக்கி, முகத்திலும் மற்ற பகுதிகளிலும் தேய்த்துக்கொண்டு உறங்கினால், அதிகாலை எழும் போது, முகம் புத்துணர்வுடன் காணப்படும். அமெரிக்காவில் இந்த முறையில் இயற்கையாக, முதுமையால் ஏற்படும் தோல் சுருக்கங்களை நீக்கிக் கொள்கின்றனர். உருளைக் கிழங்கு, மெலிந்தவர்களை சதைப்பிடிப்புடன் உருவாக்கும். எனவே கொழுத்த சரீரம் உள்ளவர்கள் உருளைக் கிழங்கைச் சாப்பிடாமல் இருந்தால் நலம்.
உலகம் வெப்பமயமாகி வருவதால் உருளைக் கிழங்குகளின் சைசும் பெரிதாகி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது என்ன புதுக் கதை.. தொடர்ந்து படியுங்கள்….
வெப்பத்தை ஈர்க்கும் கார்பன் டை ஆக்ஸைடு:
வாகனப் புகை, மரங்களை வெட்டித் தள்ளுதல், தொழிற்சாலை புகை என பல்வேறு காரணங்களால் பூமியில் கார்பன் டை ஆக்ஸைடின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த கார்பன் டை ஆக்ஸைடு வெப்பத்தை தன்னுள் ஈர்த்துக் கொள்வதால், பூமியின் வெப்பநிலையும் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் ஆர்க்டிக் மற்றும் அண்டார்டிக் ஆகிய துருவப் பகுதிகளில் பல ஆயிரம் கி.மீ. பரப்பில் பரந்து விரிந்துள்ள பனி மலைகள் உருகிக் கொண்டுள்ளன. இதெல்லாம் நமக்குத் தெரிந்த விவரங்கள் தான்.
உருளைக் கிழங்கின் அளவு பெரிதாகிறது…
இந் நிலையில் ஹவாய் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளரான ஹோச் ஜெஹ்ரேன் நடத்திய ஆய்வில் பூமி வெப்பமயமாகி வருவதால் உருளைக் கிழங்கின் அளவும் கூட அதிகரித்து வருவதைக் கண்டுபிடித்துள்ளார். வளரும் நாடுகளில் 5வது மிக முக்கிய உணவாக இருப்பது உருளைக் கிழங்கு தான் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆராய்ச்சிகள் சொல்வது என்ன?:
இந் நிலையில் கார்பன் டை ஆக்ஸைடு அளவை 390 ppm, 760 ppm, 1140 ppm, 1520 ppm என்ற அளவுகளில் வைத்து ஆய்வகத்துக்குள் உருளைக் கிழங்கு செடிகளை வளர்த்துள்ளனர் விஞ்ஞானிகள். இதில், கார்பன் டை ஆக்ஸைட் 760 ppm என்ற அளவைக் கொண்டு வளர்க்கப்பட்ட செடியில் விளைந்த உருளைக் கிழங்கு வழக்கமான சைஸை விட 96 சதவீதம் பெரிதாக வீங்கியுள்ளது.
சத்து இல்லை…
அளவு தான் மிகவும் பெரிதாக இருந்ததே தவிர இந்த உருளைக் கிழங்குகளில் உள்ள சத்துக்களின் அளவு பெருமளவு குறைந்ததும் உறுதி செய்யப்பட்டுள்ளது. கார்பன் டை ஆக்ஸைட் அதிகரிக்க அதிகரிக்க விளையும் பொருட்களின் புரோட்டீன், வைட்டமின்கள் உள்ளிட்ட சத்துக்களின் அளவு குறைவது ஏற்கனவே தெரிந்தது தான். ஆனால், இப்போது இந்த உருளைக் கிழங்கு சோதனை இதை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.
உருண்டு திரண்டது, உருளைக்கிழங்கு என்று சொன்னால் மிகையில்லை. ஸ்டார்ச், வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் மிகுந்தது உருளை.
உலகம் முழுவதும் உள்ள ஏழைகளின் முக்கிய உணவுப் பொருட்களில் ஒன்றாக உருளை உள்ளது. இதிலுள்ள சத்துக்களை அறிவோம்…
* சோலனயேசியே தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த உருளையின் அறிவியல் பெயர் சோலனம் டியூபரோசம். ஆண்டு முழுவதும் விளையக்கூடிய கிழங்கு வகை உருளை. வெள்ளை, மஞ்சள், இளஞ்சிவப்பு, பழுப்பு என பல நிறங்களிலும், ஒழுங்கற்ற கோள வடிவங்களிலும் உருளை விளைகிறது.
* உருளையில் அதிக அளவில் ஸ்டார்ச் சத்து உள்ளது. 100 கிராம் உருளை 70 கலோரி ஆற்றலை உடலுக்கு வழங்குகிறது.
* மிக குறைந்த அளவில் கொழுப்பு சத்து உள்ளது. 100 கிராமிற்கு 0.1 கிராம் கொழுப்பு இதிலுள்ளது. வைட்டமின்கள், தாதுஉப்புகள், நார்ச்சத்து உருளையில் மிகுந்து காணப்படுகிறது.
* உருளையில் எளிதில் கரையத்தக்க மற்றும் கரையாத, நார்ச்சத்துக்கள் உள்ளன. எளிதில் வளர்ச்சிதை மாற்றம் அடையும் நார்ச்சத்துக்கள், மலச்சிக்கலைத் தடுக்கும். கெட்ட கொழுப்புகளை கரைக்கும்.
* நார்ச்சத்தானது குடலில் இருந்து ஒற்றைச் சர்க்கரையை உறிஞ்சு கொள்கிறது. மேலும் ஸ்டார்ச்சை மெதுவாக ஜீரணம் செய்ய உதவுகிறது. இதனால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைப்பதில் உருளை பங்கெடுக்கிறது.
* பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் உருளைக் கிழங்கில் மிகுந்துள்ளது. பைரிடாக்சின் (வைட்டமின் பி6), தயமின், நியாசின், பான்டோதெனிக் அமிலம் மற்றும் போலேட்டுகள் அடங்கி உள்ளன.
* புத்துணர்ச்சி மிக்க உருளையின் தோலில் நிறைய ஆன்டி ஆக்சிடென்டுகள் உள்ளன. குறிப்பாக வைட்டமின் சி மிகுந்துள்ளது. 100 கிராம் கிழங்கில் 11.4 மில்லிகிராம் அளவில் வைட்டமின் சி உள்ளது. பல்வேறு காய் கறிகளில் இருந்தும் தொடர்ச்சியாக உடலுக்கு வைட்டமின் சி, கிடைப்பது பல்வேறு நோய்த் தொற்றுகளில் இருந்து உடலைக் காக்கும் வேலையைச் செய்கிறது. ப்ரீ ரேடிக்கல்களையும் கட்டுப்படுத்துகிறது.
* அதிக அளவில் இரும்பு, மாங்கனீசு, மெக்னீசியம், பாஸ்பரஸ், தாமிரம், பொட்டாசியம் போன்ற அத்தியாவசிய தாதுக்களும் உருளையில் அடங்கி உள்ளது.
* சிவப்பு மற்றும் பழுப்பு நிற உருளையில் தேவையான அளவில் வைட்டமின் ஏ உள்ளது. இது சிறந்த நோய் எதிர்ப்பொருளாக செயலாற்றும்.
* புற்று நோய் மற்றும் இதய பாதிப்புகளுக்கு எதிராக செயலாற்றும் திறன் உருளையில் இருப்பதாக நவீன ஆய்வுகள் கூறுகின்றன.
* உருளைக் கிழங்கை மற்ற காய்கறிகளுடன் சேர்த்து பல்வேறு குழம்புகள் செய்து ருசிக்கலாம். உருளை சேர்த்து செய்த சாம்பார் அதிக சுவையுடையது.
* வட்டம் மற்றும் விதவிதமான வடிவில் வெட்டி சிப்ஸ் செய்தும், வதக்கியும் சாப்பிடலாம்.
* மாஸ்டு பொட்டட்டோ சுவையானது. உருளையை அவித்து தோல் உரித்துவிட்டு சூடான பாலில் அல்லது இனிப்பு தயிரில் கரைத்து மாஸ்டு பொட்டட்டோ செய்யப்படுகிறது.