Home » உடல் நலக் குறிப்புகள் » கண்களில் பாதுகாப்பு!!!
கண்களில் பாதுகாப்பு!!!

கண்களில் பாதுகாப்பு!!!

மனித உறுப்புகளில் மிக மென்மையானவை, மிக நுட்பமானவை கண்கள். அதனால் கோடை உஷ்ணம் அதிகமாகும்போது கண்கள் பாதிக்கப்படும். கண்களை சரியாக பாதுகாக்கா விட்டால், உஷ்ணத்தால் கண்களில் சொறி, அலர்ஜி, கண் சிவந்து போகுதல், சீழ்கட்டி ஏற்படுதல், கண்கள் உலர்ந்து போகுதல், கார்ணியல் அல்சர் போன்ற நோய்கள் வரக்கூடும். கோடையில் என்னென்ன மாதிரியான கண்நோய்கள் வரும்? அவைகளை எப்படி தவிர்க்கலாம்? என்று பார்ப்போம்..

அல்ட்ரா வயலெட் ஆபத்து:  

கோடையில் வெயில் அதிகமாக இருப்பதால், சூரியனில் இருந்து வரும் அல்ட்ரா வயலெட் கதிர்கள் கண்களை பாதிக்கும். தொடர்ந்து அவை தாக்கும்போது, நடுத்தர வயதை கடந்த பின்பு வரக்கூடிய கண்புரை நோய், அதற்கு முன்பே வந்து விடும். அல்ட்ரா வயலெட் கதிர்கள் பார்வை படலமான ரெட்டினாவையும் தாக்கி பாதிக்கச் செய்யும்.

அதனால் வெயிலில் நின்று வேலை பார்க்கும் தொழிலாளர்கள், போக்குவரத்து போலீசார், மீனவர்கள் போன்றவர்கள் கண் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். கண்ணுக்குள் வரும் மெலனோமா, கண் ஓரத்தில் வரும் பேசல்செல் போன்ற புற்றுநோய்கள் ஏற்படவும் அல்ட்ரா வயலெட் கதிர்கள் ஒருவகையில் காரணமாக இருக்கின்றன.

எப்படி தவிர்ப்பது?  

காலை பத்து மணி முதல் பிற்பகல் 4 மணிவரை வெயில் நேரடியாக கண்களில் விழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

வெயிலில் நின்று வேலை பார்ப்பவர்கள், அடிக்கடி சுத்தமான குளிர்ந்த நீரால் கண்களை கழுவவேண்டும்.

கண்களில் நேரடியாக வெயில் விழாத அளவுக்கு தலையில் தொப்பி அணியவேண்டும். குடையும் பிடித்துக்கொள்ளலாம். அல்ட்ரா வயலெட் கதிர்களில் இருந்து 100 சதவீத பாதுகாப்பு அளிக்கும் கண்ணாடிகளையும் அணியலாம். வெயில் பயணத்தில் ஹெல்மெட் அணிவது கண்களுக்கும் பாதுகாப்புதரும்.

அலர்ஜி:

கோடைகாலத்தில் கண்களில் பலருக்கும் ஏற்படும் பிரச்சினை இது. கோடை காலத்தில் காற்றில் பறக்கும் தூசுகளும், மாசுகளும், உஷ்ணமான சூரிய கதிர்களும் கண்களை தாக்கும்போது அலர்ஜி ஏற்படும். காற்று மாசுவால் சொறி மற்றும் கண் சிவந்துபோகுதலும் தோன்றலாம். கோடைகாலத்தில் கண்களுக்கு எதனால் அலர்ஜி ஏற்பட்டது என்பதை கண்டறிந்து களைவது சிரமம் என்பதால், அலர்ஜி ஏற்பட்டதும் சிகிச்சை பெறுவதுதான் சிறந்த வழி.

தொடக்கத்திலே கண்டறிந்தால் இதற்கான சிகிச்சை எளிது. பாதிப்பு அதிகமாகி விட்டால் ஸ்டீராய்டுகள் பயன்படுத்தவேண்டியதாகிவிடும். கண் சிவப்பு நோய்: கண்களின் வெள்ளைப்படல பகுதியிலும், இமையின் உள் பகுதியிலும் ஒரு நுட்பமான பாதுகாப்பு அடுக்கு உள்ளது. அதன் பெயர் கண்ஜங்க%

Comments are closed.

Scroll To Top