________________________________________________________________________________
இசை : ஜி.ராமநாதன் பாடல் : பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
குரல்கள் : டி.எம்.சௌந்திரராஜன் வருடம் : 1961
________________________________________________________________________________
சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா – நான்
சொல்லப் போற வார்த்தையை நல்லா எண்ணிப் பாரடா
நீ எண்ணிப் பாரடா
( சின்னப்பயலே…
ஆளும் வளரணும் அறிவும் வளரணும் அது தாண்டா வளர்ச்சி
ஆளும் வளரணும் அறிவும் வளரணும் அது தாண்டா வளர்ச்சி
ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே நீ தரும் மகிழ்ச்சி
ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே நீ தரும் மகிழ்ச்சி
நாளும் ஒவ்வொரு பாடம் கூறும் காலம் தரும் பயிற்சி – உன்
நரம்போடு தான் பின்னி வளரணும்
தன்மான உணர்ச்சி
( சின்னப்பயலே…
மனிதனாக வாழ்ந்திட வேணும் மனதில் வையடா – தம்பி
மனதில் வையடா
வளர்ந்து வரும் உலகத்துக்கே நீ வலது கையடா – நீ
வலது கையடா
தனியுடமைக் கொடுமைகள் தீரத் தொண்டு செய்யடா – நீ
தொண்டு செய்யடா
தனியுடமைக் கொடுமைகள் தீரத் தொண்டு செய்யடா – நீ
தொண்டு செய்யடா
தானா எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா
எல்லாம் பழைய பொய்யடா
வேப்பமர உச்சியில் நின்னு பேயொன்னு ஆடுதுன்னு
வேப்பமர உச்சியில் நின்னு பேயொன்னு ஆடுதுன்னு
விளையாடப் போகும் போது சொல்லி வைப்பாங்க – உந்தன்
வீரத்தைக் கொழுந்திலேயே கிள்ளி வைப்பாங்க
வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை
வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை
வேடிக்கையாகக் கூட நம்பி விடாதே – நீ
வீட்டுக்குள்ளே பயந்து கிடந்து வெம்பி விடாதே
நீ வெம்பி விடாதே
( சின்னப்பயலே…