Home » பாரதியார் » சுப்ரமணிய பாரதியார் – ஒரு சிறப்புக் கட்டுரை!!!
சுப்ரமணிய பாரதியார் – ஒரு சிறப்புக் கட்டுரை!!!

சுப்ரமணிய பாரதியார் – ஒரு சிறப்புக் கட்டுரை!!!

சுப்ரமணிய பாரதியார் ஒரு தமிழ் கவிஞர். இந்திய சுதந்திர போராட்ட காலத்தில் கனல் தெறிக்கும் விடுதலைப்போர் கவிதைகள் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர்.

இவர் ஒரு கவிஞர் மட்டுமல்லாமல் ஒரு எழுத்தாளர், பத்திரிக்கை ஆசிரியர், சமூக சீர்திருத்தவாதி மற்றும் தன்னுடைய பாட்டுகளின் மூலமாக சிந்தனைகளை மக்களிடம் தட்டியெழுப்பியவர் என பல்வேறு பரிமாணங்கள் கொண்டவர். கம்பனுக்குப் பின் தமிழ் மக்கள் உள்ளத்தில் நிலைத்து நின்று வரும் கவிஞர் சுப்ரமணிய பாரதியார்.

தம் தாய்மொழியாம் தமிழ்மொழி மீது அளவுகடந்த பற்றுக்கொண்ட இவர், “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்” என்று போற்றி பாடியுள்ளார். விடுதலைப் போராட்ட காலத்தில், இவருடைய தேசிய உணர்வுள்ள பல்வேறு கவிதைகள் மக்களை ஒருங்கிணைத்த காரணத்தினால் “தேசிய கவியாக” போற்றப்பட்ட மாபெரும் புரட்சி வீரன்.

இந்திய வரலாற்றின் திருப்பங்கள் நிறைந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர். இவரின் சமகாலத்தைய மனிதர்கள் மகாத்மா காந்தி, பால கங்காதர திலகர், உ. வே. சாமிநாதையர், வ. உ. சிதம்பரம் பிள்ளை மற்றும் மகான் அரவிந்தர் ஆகியோர்.

தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு மற்றும் பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளும் கட்டுரைகளும், தமிழ், ஆங்கிலம், இந்தி, சமற்கிருதம், வங்காள மொழி ஆகியவற்றில் புலமை பெற்றவர். பிற மொழி இலக்கியங்களை மொழி பெயர்க்கவும் செய்துள்ளார்.

தமிழ், ஆங்கிலம், இந்தி, சமற்கிருதம், வங்காள மொழி ஆகியவற்றில் புலமை பெற்றவர். பிற மொழி இலக்கியங்களை மொழி பெயர்க்கவும் செய்துள்ளார்.

இவர் ஒரு கவிஞர் மட்டுமல்லாமல் ஒரு  எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், சமூக சீர்திருத்தவாதி மற்றும் தன்னுடைய பாட்டுகளின் மூலமாக சிந்தனைகளை மக்களிடம் தட்டியெழுப்பியவர்.

தம் தாய்மொழியாம் தமிழ்மொழி மீது அளவுகடந்த பற்றுக்கொண்ட இவர், “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்” என்று போற்றி பாடியுள்ளார்.

விடுதலைப் போராட்ட காலத்தில், இவருடைய தேசிய உணர்வுள்ள பல்வேறு கவிதைகள் மக்களை ஒருங்கிணைத்த காரணத்தினால் “தேசிய கவியாக” போற்றப்பட்டார்.

சுப்ரமணிய பாரதியார்:

பிறப்பு: டிசம்பர் 11, 1882

பிறப்பிடம்: எட்டயபுரம், தமிழ்நாடு (இந்தியா)

பணி: கவிஞர், எழுத்தாளர், விடுதலை வீரர்

இறப்பு: செப்டம்பர் 11, 1921

நாட்டுரிமை: இந்தியா

அவர் இளமையிலேயே கவிபாடக்கூடிய திறமை பெற்றிருந்தார். பதினொரு வயதுநிரம்பிய சுப்பையா என்று செல்லமாக அழைக்கப்பட்ட இவரை எட்டையபுரம்சமஸ்தானப் புலவர்கள் பற்பல சோதனைக்கு உட்படுத்தினர். அவைகளில் வெற்றிபெற்றதால் அந்தப் புலவர்கள் வியந்து அளித்த பட்டம் ‘பாரதி’. அவர் 1894 -1897  வரை  திருநெல்வேலி  ஹிந்துகல்லூரி  உயர்நிலைப்பள்ளியில்  ஐந்தாம்படிவம் வரை படித்தார். படிக்கும் போதே தமிழ்ப் பண்டிதர்களுடன் ஏற்பட்ட சொற்போர்காரணமாக 14 வயதிலேயே அக்கால வழக்கப்படி திருமணம் நடந்தது.
7 வயது நிரம்பியசெல்லம்மா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.
1898-1902  வரை  காசியில் தனது அத்தை குப்பம்மாள் அவர்களுடன் தங்கியிருந்தார். அப்போது அலகாபாத் சர்வகலாசாலையில் பிரவேசத் தேர்வு எழுதி வெற்றிப்பெற்றார்.காசி இந்து   சர்வகலாசாலையில் ஹிந்தியும், வடமொழியும் பயின்றார்.
அப்போதுதான்நமது பாரதியாருக்கு தலைப்பாகை கட்டும் பழக்கமும் மீசை வைத்துக்   கொள்ளும்பழக்கமும் ஏற்பட்டதாக அறிகிறோம். மீண்டும் எட்டையபுரம் வந்து 1902 முதல் இரண்டாண்டு காலத்திற்கு எட்டையபுரம் மன்னருக்குத் தோழனாக இருந்தார்.அப்போதுதான்   மதுரையிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த ‘விவேக பானு’ என்ற பத்திரிகையில்  இவரது  முதல் பாடல் ‘தனிமை இரக்கம்’ அச்சாகி வெளியிடப்பட்டது.
1904ம் ஆண்டு மதுரையில் உள்ள சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப்பணியாற்றினார்.
அதே ஆண்டு நவம்பரில் சென்னையிலிருந்து வெளிவரும் ‘சுதேசமித்திரன்’ பத்திரிகைக்குஉதவியாசிரியரானார். பின்பு ‘சக்கர வர்த்தினி’ என்ற பத்திரிகையின் ஆசிரியராக ஆனார்.
1905ம் ஆண்டில் பாரதியார் அரசியலில் ஈடுபட்டு இருந்தார். தீவிரமாக உழைக்கஆரம்பித்தார்.
1906ல் சென்னையிலிந்து ‘இந்தியா’ என்ற வாரப் பத்திரிகை துவங்கி அதன் மூலம் தனதுஅரசியல்   கருத்துக்களை இந்நாட்டு மக்களிடம் பரப்பினார். அப்போது திருமலாச் சாரியார்.வ.உ.சி. சர்க்கரைச் செட்டியார் முதலியோரின் நட்புக் கிடைத்தது.
சூரத் காங்கிரசில் தீவிரவாதிகளுக்கும் மிதவாதிகளுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகாரணமாக காங்கிரசில் 1907ல் பிளவு ஏற்பட்டது. பாரதியார், திலகர் போன்றதீவிரவாதிகள் பக்கம் நின்று   பணியாற்றினார். அப்போது திலகர், லாலா லஜபதிராய்,அரவிந்தர் முதலியோரைச் சந்தித்தார்.
கிருஷ்ணசாமி அய்யர் என்ற தேசபக்தர்பாரதியாரின் பாடல்களில் உள்ள வேகத்தின் தன்மையை   உணர்ந்து ‘சதேசகீதங்கள்’ என்றதலைப்பில் அவரது பாடல்கள் பலவற்றை அச்சிட்டு இலவசமாக
விநியோகித்தார்.
1908ஆண்டு ‘சுயராஜ்ஜிய தினம்’ சென்னையிலும் தூத்துக்குடியிலும் கொண்டாடப்பட்டது.அதில் வ.உ.சி சுப்ரமணியசிவா போன்றவர்களுக்குச் சிறைத்தண்டனை கிடைத்தது. அந்தவழக்கில்   பாரதியார் சாட்சியம் சொல்லியுள்ளார்.
அதே ஆண்டில் கிருஷ்ணசாமி அய்யர் அவர்கள் வெளியிட்ட ‘சுதேச கீதங்கள்’ என்றதலைப்பில்   கவிதைத் தொகுப்பு ஒன்றை பாரதியார் வெளியிட்டார்.
இது வெளிவந்தபின், பிரிட்டிஷ் அரசாங்கம் பாரதியார் மீது ஒரு கண்ணோட்டம் விட்டது. ‘இந்தியா’ பத்திரிகையின் சட்ட ரீதியான ஆசிரியர் கைது செய்யப்பட்டு பாரதியார் மீதுவாரண்ட்   போட்டது. பாரதியார் தலைமறைவானார். புதுச்சேரி சென்றார். அங்கும்போலீஸ் தொல்லைகளுக்கு உட்பட்டார்.
அப்போது ‘இந்தியா’ பத்திரிகை 1910 வரை புதுச்சேரியிலிருந்து தனது தேசியத்தொண்டைத்   துவங்கியது. எரிமலை வெடித்தது போன்ற எழுத்துக்களால் மக்களிடையேவிடுதலை   வேட்கையைப் பரப்பினார். இதனைக் கண்ட பிரிட்டிஷார் இந்தியா’ பத்திரிகைவருவதைத் தடுத்தது.அத்துடன் பத்திரிகை, விற்பனைக் குறைவால் நின்று போயிற்று.
1911ல் மணியாச்சியில் கலெக்டர் ஆஷ்துரை சுட்டுக்கொல்லப்பட்ட போது புதுச்சேரியில்உள்ள   தேசபக்தர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டு அங்கு உள்ள தேசபக்தர்களுக்குத் தாங்கொணாத் துன்பத்தை ஆட்சியினர் கொடுத்தனர். மேலும் அவர்களை அங்கிருந்தவெளியேற்றவும் முயற்சிகள் நடை   பெற்றன. பாரதியாரின் சீடர்கள் ஏராளமாயினர்.
பாரதியார் 1912-ல்  கீதையை  மொழி  பெயர்த்தார்.  மேலும்  கண்ணன்பாட்டு,   குயில்பாட்டு, பாஞ்சாலி சபதம் போன்ற காவியங்கள் எழுதப் பெற்றன. பாஞ்சாலி சபதம் வெளியிடப்பெற்றதும்   இந்த ஆண்டில்தான்.
அடுத்த ஆண்டில் ‘ஞானபாநு’ என்ற பத்திரிகைக்குச் செய்திகள் சேகரித்துக்கொண்டிருந்தார். 1914ல் முதல் உலகப் போர் துவங்கியதும் அங்கு உள்ளதேசபக்தர்களுக்கு ஏராளமான தொல்லைகள்ஏற்பட்டன.
பரலி சு. நெல்லையப்பர் அவர்கள் 1917ல் கண்ணன் பாட்டு முதற்பதிப்பைச் சென்னையில் வெளியிட்டார்கள். அதைத் தொடர்ந்து 1918ல் ‘சுதேச கீதங்கள்’,’நாட்டு பாடல்’ முதலியன வெளியிடப்பட்டன.
புதுச்சேரி வாழ்க்கையில் ஏற்பட்ட சலிப்பு உணர்வால் பாரதியார் 1918ம் ஆண்டு நவம்பர்20ந் தேதி   அங்கிருந்து வெளியேறினார். அப்போது கடலூருக்கு அருகே கைதுசெய்யப்பட்டு, சில நாட்கள்   சிறை இருந்த பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.விடுதலையானவுடன் கடையத்துக்குச் சென்றார்.
1918 முதல் 1920 வரை கடையத்தில் வாழ்ந்து வந்த பாரதியார் எட்டையபுர மன்னனுக்குசீட்டுக்   கவிகள் மூலம் தன் நிலைமையைச் சொல்லியும் எவ்விதப் பயனும் ஏற்படாமல்சென்னைக்கு   வந்தார். சென்னையில் ராஜாஜி அவர்கள் வீட்டில் மகாத்மா காந்தியைச்சந்தித்தார்.
1920ல் மீண்டும் சுதேசிமித்திரனுக்கு உதவியாசிரியரானார். பாரதியாரின் எழுத்துக்கள்அப்போது   அதில் நிறைய இடம் பெற்றன.
bharathiyar-home.jpg (530×454)

வ.உ.சி. கண்ட பாரதி

பாரதியாரின் தந்தை சின்னச்சாமி ஐயரும் வ.உ.சி.யின் தகப்பனார் உலகநாதன் பிள்ளையும் நல்ல நண்பர்கள். சின்னச்சாமி ஐயர் எட்டயபுரம் சமஸ்தானத்து உயர்மட்ட ஊழியராகப் பணியாற்றிக் கொண்டிருந்த காலகட்டத்தில் அதே சமஸ்தானத்தின் வக்கீலாகத் திகழ்ந்தவர் உலகநாதன் பிள்ளை.

வ.உ.சி.யின் சொந்த ஊரான ஒட்டப்பிடாரத்தில்தான் அப்போது தாலூகா நீதிமன்றம் உள்ளிட்ட முக்கிய அலுவலகங்கள் இருந்தன. சமஸ்தான அலுவல் நிமித்தமாக ஒட்டப்பிடாரம் வருகிறபோதெல்லாம் தனது அலுவலக சகாவும் நண்பருமான வக்கீல் உலகநாதன் பிள்ளையின் வீட்டில்தான் தங்குவார் சின்னச்சாமி ஐயர்.

அவ்வாறு தங்கிய நேரங்களில் நண்பர்கள் இருவரும் மற்றும் சிலரும் ஓய்வாகப் பேசிக்கொண்டிருப்பார்கள். சின்னச்சாமி ஐயருக்கு ஒரு மகன் இருப்பதாகவும், அவன் அதிபுத்திசாலி என்றும், தமிழில் சுயமாகப்பாடும் திறன் பெற்றவன் என்றும் உலகநாதன்பிள்ளை தனது மகன் வ.உ.சிதம்பரம் பிள்ளையிடம் சி.சுப்பிரமணிய பாரதி குறித்துப் பெருமையாகச் சொல்வதுண்டு. அப்போது வ.உ.சி. பதினைந்து வயதுப் பாலகனாக இருந்தார்.

பின்னர் வளர்ந்து வழக்கறிஞரான பிறகு தனது பணியின் பொருட்டு சென்னை சென்றிருந்தபோது, தான் தங்கியிருந்த திருவல்லிக்கேணியிலிருந்து நகரப்பகுதிக்குச் சென்று கொண்டிருந்தார். போகிற வழியில் இந்தியா இதழின் அதிபர் திருமலாச்சாரியாரின் வீடு அங்கிருப்பதை அறிந்தார்.

அடிக்கடி அவ்வீட்டைத் தாண்டிச் சென்ற வ.உ.சி., ஒருநாள் அவ்வீட்டுக்குள் திருமலாச்சாரியாரைச் சந்திக்கும் நோக்கில் சென்றார். அதிபர், வீட்டின் மாடிப்பகுதியில் இருப்பதாக அங்கிருந்தவர்கள் சொன்னார்கள். மாடிக்குச் சென்று திருமலாச்சாரியாரைப் பார்த்துத் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார் வ.உ.சி.

வ.உ.சி. தனது ஊரையும் பெயரையும் உச்சரித்து முடித்தவுடனேயே திருமலாச்சாரியார் மாடியின் உள்ளே அமைந்த அரங்கை நோக்கி “”பாரதி, உங்கள் ஊரார் ஒருவர் வந்திருக்கிறார்” என்று உரக்கச் சொல்ல, உள்ளே இருந்த பாரதி, அதிபர் அமர்ந்திருந்த இடத்துக்கு வந்தார். இவர்தான் ஆசிரியர் சுப்பிரமணியபாரதி என்று வ.உ.சி.க்கு பாரதியை அறிமுகப்படுத்தினார் திருமலாச்சாரியார்.

முதல் சந்திப்பே இருவருக்கும் மிகுந்த மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் ஊட்டுவதாக அமைந்தது. இருவருமே ஒருவரையொருவர் நேரில் அதுவரை பார்த்ததில்லையாயினும் இருவரின் பள்ளிப்பருவ காலத்திலேயே இரண்டு பேரின் தந்தைமார்களும் தங்களின் மகன்களைப் பற்றி அக்காலத்திலேயே கருத்துகளையும் தகவல்களையும் பரிமாறிக் கொண்டிருந்த காரணத்தால், ஒருவரைப்பற்றியொருவர் நன்கு அறிந்திருந்தனர்.

பழைய நினைவுகளைப் பாசத்தோடும் பரவசத்தோடும் நினைவுகூர்ந்து பேசி மகிழ்ந்ததோடு பாரதி, திருமலாச்சாரியார், வ.உ.சி. மற்றும் இந்தியா இதழில் பணியாற்றும் இன்னொரு நண்பர் என நால்வரும் பேசியவாறே திருவல்லிக்கேணி கடற்கரைக்குச் சென்றனர். கடற்கரை மணலில் அமர்ந்தபடி அன்றைய நாட்டு நடப்பு குறித்து விரிவாக வெகுநேரம் மிகுந்த அக்கறையோடு கலந்து பேசினர். பெரும் பகுதி நேரம் பாரதியும் வ.உ.சி.யுமே உரையாடினர்.

தனது முதல் சந்திப்பு குறித்து வ.உ.சி., “”அப்பேச்சு அவரைக் கம்பராகவும் என்னைச் சோழனாகவும் நான் நினைக்கும்படி செய்தது” என்றும், “”என் உள்ளத்தில் மின்மினிப்பூச்சிபோல் ஒளிர்ந்து கொண்டிருந்த தேசாபிமான நெருப்பு விளக்குப்போல ஒளிவிட்டுப் பிரகாசித்தது” என்றும் பதிவு செய்துள்ளார்.

சென்னை செல்கிறபோதெல்லாம் அன்றாடம் இந்தியா அலுவலகத்துக்குச் சென்று பாரதியுடன் மெய்மறந்து உரையாடியதையும், அவர்கள் இருவரும் அடிக்கடி கடற்கரைக்குச் சென்று நீண்ட நெடுநேரம் அன்றைய அரசியல் நிகழ்வுப் போக்குகள் குறித்துப் பேசுவதுமாக இருந்ததாகவும் வ.உ.சி. தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

பாரதியின் அரசியல் பிரவேசத்துக்கு சில ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வ.உ.சி.யின் அரசியல் நடவடிக்கைகள் தெளிவாகத் தொடங்கிவிட்டன. 1893-ம் ஆண்டிலிருந்தே பாலகங்காதரதிலகரின் பேச்சுகளையும் எழுத்துகளையும் உன்னிப்பாகக் கவனித்து வந்ததாக வ.உ.சி.யே குறிப்பிட்டுள்ளார்.

1898-ல் வ.உ.சி. காங்கிரஸ் மகாசபையில் அங்கம் பெற்று அமைப்புரீதியாகவே செயல்பட்டு வந்துள்ளார். வ.உ.சி.யின் அரசியல் தெளிவை, தேசிய இலக்கிய மாத இதழான விவேகபாநு இதழில் 1906-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியான சுதேசாபிமானம் எனும் அவரது முதல் அரசியல் கட்டுரையின் மூலம் நன்கு உணரலாம்.

1906-ன் தொடக்கத்தில் பாரதியை தான் முதன்முதலாகச் சந்தித்ததாக தனது வாழ்க்கைக் குறிப்பில் வ.உ.சி. குறிப்பிட்டுள்ளார். பாரதியை முதலில் சந்தித்தபோதே அரசியல் தெளிவோடும் கொள்கை உறுதியோடும் விளக்கியுள்ளார். வ.உ.சி.க்கே பாரதியின் சந்திப்பு புத்தெழுச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதேபோல வ.உ.சி.யைச் சந்தித்ததில் பாரதிக்குப் புத்துணர்ச்சி பிறந்துள்ளது. முதல் சந்திப்பில் தன் உள்ளத்தில் தேசாபிமான நெருப்பு விளக்குபோல் ஒளிவிட்டுப் பிரகாசித்த செய்தியை வ.உ.சி. பாரதியிடம் சொல்லி முடித்தவுடன் மாலை 4 மணியிலிருந்து மெய்மறந்து நீண்ட நேரம் உரையாடிக் கொண்டிருக்கும் நிலையில் இருள் சூழத்தொடங்கிய அவ்வேளையில் கடற்கரை மின்சார விளக்குகள் பளிச்சென ஒளிவிட்டு எரியத் தொடங்கின. அதைக் கண்ட பாரதி பிள்ளைவாள், “”சக்திதுணை செய்வாள்.

நம் உள்ள ஒளி பிரகாசிக்கும்பொழுது மின்னொளியையும் பிரகாசிக்கச் செய்தது நம் அன்னை பராசக்தியே வாழ்க; இனிநம் முயற்சி வெற்றி எடுத்ததெல்லாம் வெற்றி என்பதற்கான சுபசகுனம் இதுதான். வாழி அன்னை வாழி அம்மை சக்தி வாழி” என்று ஆவேசத்தோடு வ.உ.சி.யிடம் கூறினார் பாரதி.

அடிக்கடி இவ்வாறான இருவரின் சந்திப்பு நிகழ்ந்ததோடு பாரதி வீட்டுக்கு வ.உ.சி. செல்வதும் வ.உ.சி. தங்கியிருந்த இல்லத்துக்கு பாரதி வருவதும், இருவருமாகச் சேர்ந்து உண்பதும் உறங்குவதுமாகத் தோழமை வேரூன்றியது.

bharathi.jpg (275×183)

அந்தச்சூழலில் பிரான்ஸ், இத்தாலி போன்ற உலக நாடுகளில் நடைபெற்ற போராட்டம் குறித்தும் இன்னும் இதுபோன்ற கிளர்ச்சிகள் பற்றி வெளிவந்திருந்த ஆங்கிலக்கவிதைகள் குறித்தும் பாரதி, வ.உ.சி.க்கு உணர்ச்சிகரமாக எடுத்துக் கூறினார். இவர்களின் உறவின் நெருக்கம் மாமனார், மருமகன் என்று முறை வைத்துத் தங்களுக்குள் அழைத்துக் கொள்ளும் அளவுக்கு அன்னியோன்யமாக இருந்தது.

திருவல்லிக்கேணியிலிருந்த தேசபக்தர்களான மண்டயம் குடும்பத்தாரிடம்- குறிப்பாக திருமலாச்சாரியார், ஸ்ரீனிவாசாச்சாரியார் போன்றவர்களிடம் தீவிரமாக ஆலோசித்த பின்னர் பாரதியும் வ.உ.சி.யும் முன்னின்று சென்னை ஜனசங்கம் என்ற தேசாபிமான சங்கத்தை அமைத்தனர்.

தீவிரவாத தேசியத்தையும் மிதவாத தேசியத்தையும் அடிப்படையாகக் கொண்டு காங்கிரஸ் இயக்கம் இரண்டு பிரிவுகளாக இயங்கி வந்த சூழலில், திலகர் தலைமையில் திரண்ட தீவிரவாத தேசியப் பிரிவின் முன்னணிப் படைத்தளபதிகளாக வ.உ.சி., பாரதி, சிவா ஆகியோர் விளங்கினர்.

சூரத்தில் 1907-ம் ஆண்டு நடைபெற்ற இருபத்து மூன்றாவது காங்கிரஸ் மாநாட்டில் தமிழகத்தின் பிரதிநிதிகளாகக் கலந்து கொண்டதோடு அம்மாநாட்டின் நிகழ்வுகளில் பெரும் பங்களிப்பைச் செலுத்தியவர்கள் பாரதியும், வ.உ.சி.யும்.

வ.உ.சி. தூத்துக்குடியில் சுதேசிக்கப்பல் கம்பெனியை நிறுவி வெள்ளையனுக்கு எதிராக இரண்டு சுதேசிக் கப்பல்களை ஓடவிட்டது, அங்குள்ள கோரல் மில் தொழிலாளர்களின் கோரிக்கைகளை முன்வைத்துப் போராடியது, விபின்சந்திரபாலர் விடுதலை நாளைக் கொண்டாடியது போன்ற புரட்சிகர வடிவங்களில் விடுதலைப் போராட்டத்தைத் தலைமையேற்று நடத்திச் சென்றபோது பாரதி இந்தியா இதழில் இந்த வரலாற்று நிகழ்வுகளையெல்லாம் வரிதவறாமல் பதிவு செய்தார். இந்தச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு தனது இதழ்மூலம் தமிழகத்தில் ஒரு புத்தெழுச்சியையே உருவாக்கினார் பாரதி.

வ.உ.சி., சிவா ஆகியோரை ஆங்கிலேய அரசு அடக்கிவிட வேண்டுமென்ற நோக்கில் பல்லாண்டு காலம் சிறைத்தண்டனை அளித்தபோது வெகுண்டெழுந்தார் பாரதி. “”தற்சமயம் சிறைப்படுத்தியிருக்கும் கோயம்புத்தூர் ஜெயிலில் அதிகாரி அவரைக் கைகால் விலங்கிட்டுக் கேவலம் மிருகம்போல் எண்ணெய் ஆட்டும் செக்கிழுக்கும்படி செய்கிறாராம். நடு வெயிலில் தீப்பறக்கும் செக்கிழுத்துக் கஷ்டமடைகிறாராம். அந்தோ இக்கொடிய துன்பத்தை நினைக்கும் போதே நெஞ்சுருகுகிறதே… இங்கெழுதும் போதே கை நடுங்குகிறதே… இக்கொடுந்துன்பத்தைச் சகிக்கும் தேசபக்தர் பாடு எங்ஙனமோ கடவுளேயறிவர்”.

“”கைதிகளுக்கு எத்தனை வேலைகள் இருக்க இத்தேசபக்தருக்கு நாற்கால் மிருகங்களும் துன்புறக்கூடிய எண்ணெய் யந்திரம் சுழற்றும் வேலையா கொடுக்க வேண்டும்? அவர் கைகால்களுக்கு விலங்கிடுவதேனோ?” எ ன்று 1908-ம் ஆண்டு இந்தியா இதழில் மனம் பதைபதைக்க நெகிழ்ந்துபோய் எழுதியுள்ளார் பாரதி.

வெறும் செய்திக் கட்டுரைகள் எழுதுவதோடு நின்றுவிடாமல் அன்றைய திருநெல்வேலி மாவட்டக் கலெக்டர் வின்ச், வ.உ.சி.யிடம் கூறியதாகவும், அதற்கு அவர் மறுமொழி சொன்னதாகவும் பாரதி வடித்த இரண்டு கவிதைகள் ஒரு காவியம்போல் வரலாற்றில் நிரந்தரமாகப் பதிந்து விட்டவை.

தொடக்கத்தில் பாளையங்கோட்டை சிறையில் வ.உ.சி.யும் சிவாவும் அடைக்கப்பட்டிருந்தபோது, சென்னையிலிருந்து பாளையங்கோட்டை சென்று சிறை அதிகாரிகளிடம் அனுமதி பெற்று இருவரையும் சிறைச்சாலைக்குள் பார்த்து உரையாடிவிட்டு வந்தார் பாரதியார்.

இந்நிகழ்வு குறித்து எழுதும்போது ஸ்ரீசிதம்பரம் பிள்ளையை முன்பு நான் தூத்துக்குடியிலே அவருடைய அரிய பிரசங்கங்களை ஆயிரக்கணக்கான ஜனங்கள் கேட்டுப் புகழ்ச்சி கூறிக் கொண்டிருந்த காலத்தில் பார்த்தபோது அவருடைய முகம் எவ்வளவு பிரசன்னமாகவும் தேஜஸýடனும் விளங்கியதோ அதே மாதிரியிலேயே இப்பொழுதும் இருக்கக் கண்டேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

வ.உ.சி., சிவா, பத்மநாப ஐயங்கார் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட செய்தி காட்டுத்தீ போல் பரவி மக்கள் எழுச்சியை உருவாக்கிவிட்டது. வரலாறு காணாத பேரெழுச்சி திருநெல்வேலியில் மூண்டு விட்டது. இந்த மக்கள் எழுச்சியை அடக்க காவல்துறை களமிறங்கி கண்மூடித்தனமாகச் சுட்டது.

குண்டடி பட்டுச்சாவு, படுகாயம் என்று மக்கள் பதறிக் கொண்டிருக்கும் நிலையில் இதன் விளைவுகளை நேரில் கண்டறிந்து இந்தியாவில் எழுதுவதற்காக பாரதி திருநெல்வேலிக்கே சென்று சம்பவம் நடந்த இடங்களைப் பார்வையிட்டதோடு பாதிக்கப்பட்ட மக்களையும் சந்தித்து விசாரித்தறிந்து தனது இதழில் விளக்கமாக எழுதினார்.

பாரதி புதுச்சேரியில் இருந்த காலங்களில் அவரைச் சந்திப்பதற்கென்றே புதுச்சேரிக்குச் சென்று அவருடன் தங்கியிருந்து தன்னுடைய தோழமையை வெளிப்படுத்தியவர் வ.உ.சி. இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழகத்தின் திரிசூலம் என்றும் மும்மூர்த்திகள் என்றும் போற்றப்பட்டவர்கள் வ.உ.சி., பாரதி, சிவா ஆகியோர்.

இதில் வ.உ.சி., சிவா உறவு குறித்தும், பாரதி-சிவா நட்பு குறித்தும் தனித்தனியாக விரித்துச் சொல்லும் அளவுக்கு ஆழமானவை.

1936-ல் வ.உ.சி. மரணப்படுக்கையிலிருக்கும் வேளையில் காங்கிரஸ் தொண்டர் சிவகுருநாதனை அழைத்து பாரதி பாடலைப் பாடப் பணித்தார்.

“என்று தணியும் இந்தச் சுதந்திரதாகம்’ என்ற பாடலை உருக்கம் கலந்த எழுச்சியோடு சிவகுருநாதன் பாட அதைக் கேட்டுக் கொண்டே வ.உ.சி.யின் உயிர் பிரிந்தது.

பாரதியின் குரு:

ஞானகுருவாக சாருநிவேதிதாவையும் (விவேகானந்தரின் சிஷ்யை), அரசியல் குருவாக பாலகங்காதர திலகரையும் ஏற்றுக் கொண்டார். “மகாகவி’ என்றும், “தேசியகவி’ என்றும் மக்களால் போற்றப்பட்டார். புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பாரதியாரை “”பைந்தமிழ்த்தேர்ப்பாகன், அவனொரு செந்தமிழ்த்தேனீ, சிந்துக்குத் தந்தை” என்று பாராட்டி மகிழ்ந்தார். பாரதியார் தன்னுடைய கடமையாக, “”நமக்குத் தொழில் கவிதை! நாட்டிற்கு உழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல்” என்று குறிப்பிட்டுள்ளார். இவர் தன்னுடைய தோழனாக, தாயாக, தந்தையாக, சேவகனாக, அரசனாக, சீடனாக, சற்குருவாக கண்ணனைக் கொண்டாடி மகிழ்ந்தார்.

பாரதியை மக்கள்: 

‘கவி’, ‘மானுடம் பாடவந்த மாகவி’, ‘புது நெறி காட்டிய புலவன்’, எ’ண்ணத்தாலும் எழுத்தாலும் இந்திய சிந்தனைக்கு வளம் சேர்த்தவர்’, ‘பல்துறை அறிஞர்’, ‘புதிய தமிழகத்தை உருவாக்க கனவு கண்ட கவிக்குயில்’, ‘தமிழின் கவிதை’ மற்றும் உரைநடையில் தன்னிகரற்ற புலமை பெற்ற பேரறிவாளர்,  என்றெல்லாம் புகழ்கின்றனர். உலகதமிழர் நாவில் மக்கள்கவி பாரதியாரின் பெயர் அடிக்கடி உச்சரிக்கபடுகிறது என்றால் அது மிகையாகாது.

புதுக்கவிதைப் புலவன்:

பாட்டுக்கொரு புலவன் பாரதி பாடல்களின் இலக்கணக் கட்டுக்களைத் தகர்த்தெறிந்தவன். இவருக்கு முன்பாக கவிபுனைந்த கவிஞர்கள் தொல்காப்பிய இலக்கணம் சிறிதும் வழுவாமல், பொருள்கொள், யாப்பு, அணி என இலக்கணத்தில் கட்டுண்டு கற்றோர் மட்டும் கற்றறியும் கவிதைகளையே புனைந்தனர். இலக்கணச் சட்டங்களைத் தகர்த்தெறிந்த பாரதி, புதுக் கவிதை என புகழப்படும், பாமரரும் கேட்டுணரும் வசன கவிதையைத் தமிழுக்குத் தந்தவர். கேலிச்சித்திரம் (ஸ்ரீஹழ்ண்ஸ்ரீஹற்ன்ழ்ங்) எனப்படும் வரையும் முறையை தமிழுக்கு முதலில் தந்த பெருமை பாரதியையே சாரும்.

பெண்ணுரிமைப் போராளி:

தமிழகத்தில் முதலில் பெண்ணுரிமையைப் பேசியது பாரதியாகத்தான் இருக்கமுடியும். பெண்ணடிமை தீருமட்டும் பேசும் இத் திருநாட்டில் மண்ணடிமைதீருதல் முயற்கொம்பே என பெண்ணுரிமையை ஏத்தினார். “போற்றி போற்றியோராயிரம் போற்றி நின் பொன்னடிக்குப் பல்லாயிரம் போற்றிகான்” என்ற பாரதி பெண்மை வாழ்கவென கூத்திடுவோமடா என்றார். பெண்களின் கல்வியறிவுக்காகவும் சட்டங்களை செய்திடவும் கனவு கண்ட பாரதி, சாதம் படைக்க மட்டுமல்லாது தெய்வச் சாதி படைக்கவும் பெண்கள் தகுதிபடைத்தவர்கள் என்று கண்டார்.

படைப்புகள்:

01. குயில் பாட்டு

02. கண்ணன் பாட்டு – கடவுளான கண்ணன் மீது பாடிய பாடல்களின் தொகுப்பாகும்.

03. சுயசரிதை

04. தேசிய கீதங்கள்

05. பகவத் கீதை

06. பாரதி அறுபத்தாறு

07. ஞானப் பாடல்கள்

08. தோத்திரப் பாடல்கள்

09. விடுதலைப் பாடல்கள்

10. விநாயகர் நான்மணிமாலை

11. பாரதியார் பகவத் கீதை (பேருரை)

12. பதஞ்சலியோக சூத்திரம்

13. நவதந்திரக்கதைகள்

14. உத்தம வாழ்க்கை சுதந்திரச்சங்கு

15. ஹிந்து தர்மம் (காந்தி உபதேசங்கள்)

16. சின்னஞ்சிறு கிளியே

17. ஞான ரதம்

18. பகவத் கீதை

19. சந்திரிகையின் கதை

20. பாஞ்சாலி சபதம்

21. புதிய ஆத்திசூடி

22. பொன் வால் நரி

23. ஆறில் ஒரு பங்கு

பாரதியார் நினைவுச் சின்னங்கள்:

தமிழக அரசு மகாகவி பாரதியார் நினைவினைப் போற்றும் வகையில் எட்டயபுரத்தில் அவர் வாழ்ந்த இல்லத்தையும், சென்னை திருவல்லிக்கேணியில் அவர் வாழ்ந்த இல்லத்தையும், புதுச்சேரியில் அவர் வாழ்ந்த இல்லத்தையும் நினைவு இல்லமாகவும் பொதுமக்களின் பார்வைக்காக பராமரித்து வருகிறது. இவர் பிறந்த எட்டயபுரத்தில் பாரதி மணிமண்டபமும், மைய மண்டபத்தில் மகாகவி பாரதியின் ஏழு அடி உயர திருவுருவச்சிலை அமைக்கப்பட்டு 11-12-1999 அன்று பஞ்சாப் மாநில முதல்வர் தர்பாராசிங் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. 25 சதுர அடி பரப்பளவில் 1000 நபர்கள் அமரக்கூடிய அளவில் திறந்தவெளிக் கலையரங்கம் உள்ளது. இங்கு பாரதியின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படக் கண்காட்சியும் வைக்கப்பட்டுள்ளது.

பாரதியார் வாழ்ந்த காலம்: 11.12.1882 – 11.09.1921(அகவை 38)

பாரதியார் பிறந்த ஊர்: திருநெல்வேலி மாவட்டம், எட்டையபுரம்.

பாரதியாரின் பெற்றோர்: சின்னச்சாமி அய்யர் – லெட்சுமி அம்மாள்

பாரதியாரின் இயர் பெயர்: சுப்ரமணிய பாரதியார்.

பாரதியார் 1897ஆம் ஆண்டு செல்லம்மாளை மணந்தார்.

பாரதியாரின் சிறப்பு பெயர்கள்: மகாகவி, தேசியகவி, பாட்டுக்கொரு புலவன்.

பாரதிக்கு மகாகவி என பட்டம் கொடுத்தவர் – வ.ரா(ராமசாமி அய்யங்கார்)

பாரதி தன்னை ஷெல்லிதாசன் என அழைத்துக்கொண்டார்.

பாரதி என்பதன் பொருள் – கலைமகள்.

பாரதியின் முதல் பாடல் “தனிமை இரக்கம்” வெளியிட்ட பத்திரிக்கை – மதுரையிலிருந்து வெளிவந்த “விவேக பானு” என்ற பத்திரிக்கை.

பாரதியார் ஆசிரியராகப் பணியாற்றிய பள்ளி – மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளி(1904)

பாரதியார் எந்த பத்திரிக்கையின் மூலம் தனது அரசியல் கருத்துக்களை மக்களிடம் பரப்பினார் – இந்தியா என்ற வாரப்   பத்திரிக்கை(1906ல் சென்னையில் பாரதியாரே தொடங்கி நடத்தினார்)

பாரதியார் சுதேசமித்திரன் பத்திரிக்கையில் உதவி ஆசிரியராகவும், சக்கரவர்த்தினி பத்திரிக்கையில் ஆசிரியராகவும் பணி செய்தார்.

பாரதியாரின் குறிப்பிடத்தக்க படைப்புகள்: பாஞ்சாலி சபதம், பாப்பா பாட்டு, கண்ணன் பாட்டு முதலியன.

பாரதியாரின் நினைவுகளை போற்றும் வகையில் எட்டையபுரத்தில் அவர் வாழ்ந்த இல்லம், சென்னை திருவல்லிக்கேணி அவர் வாழ்ந்த இல்லம் நினைவு இல்லமாக தமிழக அரசால் பராமரிக்கப்பட்டு வருகிறது.

பாரதியாருக்கு எட்டையபுரத்தில் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மைய மண்டபத்தில் பாரதியின் ஏழு அடி உயர திருவுருவச்சிலை அமைக்கப்பட்டு பஞ்சாப் முதல்வர் தர்பாராசிங் அவர்களால் 11.12.1999 அன்று திறந்து வைக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top