கவலையுற்ற மனிதன் ஒருவன் குருவைத் தேடி வந்தான்.
“குருவே! என் வாழ்க்கையில் மகிழ்ச்சியே இல்லை. என்னென்னவோ செய்து பார்க்கிறேன். மகிழ்ச்சி மட்டும் கிடைக்கவில்லை” என்றான்.
குரு அவனை ஒரு தோட்டத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு பட்டாம்பூச்சிகள் அங்குமிங்கும் பறந்து கொண்டிருந்தன.
“இதோ இவற்றில் ஒரு பட்டாம்பூச்சியைப் பிடித்து வா!” –குரு அவனிடம் சொன்னார்.
அவன் பட்டாம்பூச்சியைத் துரத்தித் துரத்தி ஓடினான். அவனால் எந்தப் பட்டாம்பூச்சியையும் பிடிக்க முடியவில்லை.
“பரவாயில்லை. வா, நாம் இந்தத் தோட்டத்தின் அழகை ரசிக்கலாம்!” என்ற குரு அவனைத் தோட்டத்தின் நடுவில் அழைத்து வந்தார். இருவரும் அங்கு அமைதியாக நின்று, தோட்டத்தின் அழகைக் கண்குளிர பார்த்துக் கொண்டிருந்தனர்.
சிறிது நேரத்தில் அவர்களைச் சுற்றியும் பட்டாம்பூச்சிகள் பறக்கத் தொடங்கின. அவன் பிடிக்கத் துரத்திய பட்டாம்பூச்சி அவன் கைகளிலேயே வந்து அமர்ந்தது.
குரு சிரித்தபடி அவனிடம் சொன்னார்:
“இதுதான் வாழ்க்கை! மகிழ்ச்சியைத் தேடி துரத்துவது அல்ல வாழ்க்கை. நாம் வாழ்க்கையை அமைதியாய் ரசிக்கும்போது மகிழ்ச்சி நம்மிடம் தானே வந்து சேர்ந்துவிடும்!”
நான்கு மெழுகுவர்த்திகள் எரிந்து கொண்டு இருந்தன. மெலிதாய் காற்று வீசிக்கொண்டு இருந்தது.
காற்றை கண்டதும்‘ அமைதி ‘ என்ற முதல்
மெழுகுவர்த்தி ‘ ஐயோ காற்று வீசுகின்றது, நான் அணைந்துவிடுவேன் என்று பலவீனமாக சொன்னது. காற்று பட்டதும் அணைந்துவிட்டது.
‘அன்பு ‘ என்ற அடுத்த மெழுகுவர்த்தியும் காற்றை எதிர்க்க முடியாது’ என்று அணைந்துவிட்டது.
அறிவு ‘ என்ற மூன்றாவது மெழுகுவர்த்தியும் காற்றை எதிர்க்க முடியாமல்அணைந்தது.
நான்காவது மெழுகுவர்த்தி மட்டும் காற்று வீசிய சில நொடிகள் போராடி ஜெயித்துவிட்டது.
அப்போது அந்த அறையில் ஒரு சிறுவன் நுழைந்தான்.‘அடடா மூன்று மெழுகுவர்த்திகளும் அணைந்துவிட்டதே என்று கவலையுடன் சொன்னான்.
அதற்கு எரிந்துகொண்டு இருந்த நான்காவது மெழுகுவர்த்தி சொன்னது,வருத்தப்படாதே நான் இருக்கின்றேன். என்னை வைத்து மற்ற மூன்றையும் பற்ற வைத்துகொள்’ என்றது.
சிறுவன் உடனே … ‘ நான்காவது மெழுகுவர்த்தியை பார்த்து ” உன் பெயர் என்ன ?”என்று கேட்டான் . நம்பிக்கை என்றது மெழுகுவர்த்தி.
நாம் எப்பொதும் வாழ்வில் நம்பிக்கையை மட்டும் இழக்கக் கூடாது.
பென்சில்: என்னை மன்னிக்க வேண்டும்.
ரப்பர்: எதற்காக மன்னிப்பு?
பென்சில்: நான் தவறு செய்யும் போதெல்லாம் நீ சரி செய்கிறாய். ஆனால் ஒவ்வொரு முறையும் நீ தேய்ந்து போகிறாய். என்னால் தானே உனக்கு அந்த பாதிப்பு?
ரப்பர்: நீ தவறு செய்யும்போது சரி செய்வதற்க படைக்கப் பட்டிருக்கிறேன். என் பணியை நான் செய்கிறேன். அதில் எனக்குப் பூரண மகிழ்ச்சியே. எனக்குத் தெரியும், நான் கொஞ்சம் கொஞ்சமாகத் தேய்ந்து ஒரு நாள் இல்லாமல் போய் விடுவேன். அதன் பின் உனக்கு ஒரு புதிய ரப்பர் கிடைக்கும். இதுதான் வாழ்க்கை ..
நம்மில் சிலர், பலருக்கு ரப்பராக இருக்கிறோம், வெளியே தெரியாமல்…! இதுதான் வாழ்க்கை!!!