மகான் ஏகநாதரிடம் பக்தர் ஒருவர், “”சுவாமி! பாவமே செய்யக் கூடாது என்று நினைக்கிறேன். ஆனால், என்னையும் அறியாமல் செய்து விடுகிறேன். இதைத் தடுக்க வழியே இல்லையா?” என்று கேட்டார். ஏகநாதர் அவரிடம்,”” என்ன பாவம் செய்திருந்தாலும், இன்னும் ஏழுநாட்கள் மட்டும் பொறுத்துக் கொள்ளுங்கள். அதன் பின் உங்கள் கவலை தீர்ந்து விடும்!” என்றார். “”ஏன்.. இன்னும் ஏழுநாட்களில் என்ன நிகழ்ந்து விடப் போகிறது?” என்றார் பக்தர். “”ஏழுநாளோடு உங்கள் ஆயுளே முடிந்து விடப் போகிறது என்பதை தான் சொன்னேன்” என்றார் ஏகநாதர். இதைக் கேட்டு, “”சுவாமி! என் ஆயுள் இன்னும் ஏழுநாள் தானா?’ என்று அதிர்ந்தார். “”ஆம்..” என்றார் ... Read More »
Monthly Archives: September 2016
இரத்தினச் சுருக்கம்
September 30, 2016
இராமாயண கதையைப்பற்றி விளக்கிச் சொல்ல பெரியவர் ஒருவர் ஒரு ஊருக்கு வந்திருந்தார். அந்த ஊர் மக்கள் அனைவரும் அவரிடம் ஐந்தே நிமிடத்தில் இராமாயணக் கதையைய் சொல்லி முடிக்குமாறு கேட்டுக் கொண்டனர். சற்றே யோசித்த அந்த பெரியவர் பிறகு ஒப்புக் கொண்டார். கதை…இந்த உலகத்தில் ‘எவன் ஒருவன் தாய் தந்தையரின் சொற்படி கேட்டு நடக்கிறானோ அவனுக்கு உலக உயிர்கள் எல்லாம் துணை செய்யும். எவன் ஒருவன் மாற்றான் மனைவி மீது ஆசைகொள்கிறானோ அவனை உடன் பிறந்தவர்களே காட்டிக் கொடுப்பார்கள்’. என்று கதையைய் முடித்தார். எப்படி… எப்படி என்று கேட்டார்கள் ஊர்க்காரர்கள். பதில்…அயோத்திய மன்னனான ... Read More »
நாணயம் கூறும் பாடம்
September 30, 2016
நம் எல்லோருக்கும் தெரிந்த விஷயம் நாணயத்திற்கு இரண்டு பக்கம் உள்ளது என்பது.ஒரு பக்கம் தலை மற்றொரு பக்கம் பூ. இதே போல் தான் நம் வாழ்கையில் வெற்றியும் தோல்வியும். வெற்றி தலை என்றுவைத்துக்கொண்டால் பூ தோல்வி. நாம் நாணயத்தை சுண்டி விட்டால் தலையும் வரலாம் பூவும் வரலாம். இதன்இரண்டிற்கும் உண்டான சாத்தியக்கூறு 50% ஆகும். இது போல் தான் நம் வாழ்கையில்வெற்றியும் தோல்வியும். ஒரு முறை தோல்வி அடைந்தால்அடுத்த முறை வெற்றிஅடைய வாய்ப்பு இருக்கிறது. அடுத்த முறையும் தோல்வி அடைந்தால்அதற்கு அடுத்தமுறை வெற்றி அடைய வாய்ப்பு உண்டு. எப்போதும் பூ தான் விழும் என்று சொல்ல முடியுமா. தலை எப்போதாவது வந்து தானேஆக வேண்டும் இல்லையா. அது போல தான் வாழ்க்கை. எப்பொழுதும் தோல்வியேவரும் என்று இல்லை. நிச்சயம்மாக வெற்றி வரத்தான் செய்யும். மீண்டும் பூ விழுந்து விட்டதே என்று மீண்டும் நாணயத்தை சுன்டாமல் விட்டால் தலைஎப்படி வரும். அது போல தோல்வி அடைந்து விட்டோமே என்று மீண்டும் முயற்சிசெய்யாமல் விட்டு விட்டால் வெற்றி எப்படி அடைய முடியும். உங்களுக்கு தோல்வி வரும் போதெல்லாம் உங்கள் பாக்கெட்டிலிருந்து ஒருநாணயத்தை எடுத்து பாருங்கள். அடுத்த முறை வெற்றி தான் என்று சொல்லிகொள்ளுங்கள். உங்களுக்கு தெம்பு வரும். மீண்டும் முயற்சி செய்யும் வேகம் வரும்.அடுத்த முறை வெற்றி அடைவீகள். Read More »
இன்று: செப்டம்பர் 30!!!
September 30, 2016
நிகழ்வுகள் 1399 – நான்காம் ஹென்றி இங்கிலாந்தின் மன்னனாக முடி சூடினான். 1744 – பிரான்ஸ், மற்றும் ஸ்பெயின் இணைந்து சார்டீனியா பேரரசை தோற்கடித்தனர். 1791 – மோட்ஸார்ட்டின் கடைசி ஒப்பேரா வியென்னாவில் அரங்கேறியது. 1840 – நெப்போலியன் பொனபார்ட்டின் எஞ்சிய உடல் பகுதி பிரான்சுக்கு எடுத்து வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. 1860 – பிரித்தானியாவின் முதலாவது அமிழ் தண்டூர்தி (tram) சேவை ஆரம்பமானது. 1867 – ஐக்கிய அமெரிக்கா மிட்வே தீவின் அதிகாரத்தைக் கைப்பற்றியது. 1882 – உலகின் முதலாவது நீர்மின் திறன் ஐக்கிய அமெரிக்காவின் விஸ்கொன்சின் மாநிலத்தில் அமைக்கப்பட்டது. 1888 – கிழிப்பர் ஜேக் தனது மூன்றாவது, மற்றும் நான்காவது கொலைகளைச் செய்தான். 1895 – மடகஸ்கார் பிரெஞ்சு பாதுகாக்கப்பட்ட அரசாக அறிவிக்கப்பட்டது. 1901 – ஹியூபேர்ட் செசில் பூத் தூசுறிஞ்சிக்கான காப்புரிமம் பெற்றார். 1935 – அரிசோனா, நெவாடா மாநிலங்களுக்கிடையே ஊவர் அணை திறக்கப்பட்டது. 1938 – செக்கோசிலவாக்கியாவின் சுடெட்டென்லாந்துப் பகுதியை ஆளும் உரிமையை ஜேர்மனிக்கு வழங்குவதற்கான உடன்படிக்கையில் பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி, மற்றும் இத்தாலி ஆகியன அதிகாலை ... Read More »
பொறுமை
September 29, 2016
பொறுமையாய் இருப்பது மிகவும் கடினம் பொறுமையாய் இருந்தால் என்றும் இன்பம் கோபம் வருவது மனித இயல்பு கோபம் வந்தால் போகும் நிம்மதி தோல்வி வருவது இயற்கையின் நியதி தோல்வி வந்தால் வேண்டும் அமைதி பொறுமையாய் இருப்பது மிகவும் கடினம் பொறுமையாய் இருந்தால் என்றும் இன்பம் உழைப்பு தருவது தேவையான உணவை உழைப்பு தந்தால் உண்டு வெற்றி ஆசை வருவது அதிசியம் இல்லை ஆசை வந்தால் விபரீத சிந்தனை பொறுமையாய் இருப்பது மிகவும் கடினம் பொறுமையாய் இருந்தால் என்றும் ... Read More »
போராடு
September 29, 2016
நடந்து நடந்து கால்கள் ஒய்ந்தது மனதில் மட்டும் தெம்பு இருந்தது கஷ்டப்பட்டு வேலை செய்தால் பின்னால் பலன் உண்டு என்று சொன்னது வாழ்க்கை ஒரு சக்கரம் அதில் நம்பிக்கை தான் அச்சாணி இன்று உணவகத்தில் சுத்தம் செய்கிறான் நாளை முதலாளி ஆகலாம் என்ற நம்பிக்கையில் உழவன் உழுது பயிர் வைக்கிறான் நாளை அது விளைச்சல் தரும் என்ற நம்பிக்கையில் குழந்தை துணையுடன் நடக்க முயற்சி செய்கிறது நாளை யார் துணையும் இல்லாமல் நடக்கலாம் என்ற நம்பிக்கையில் நடந்து ... Read More »
கடவுள் மிகப் பெரியவன்!
September 29, 2016
உலகத்தில் பெரும்பாலான இடத்தை கடல் நீரால் சூழ வைத்தான். அப்படி செய்தவன்,அதை குடிக்கும் தண்ணீராய் படைத்திருந்தால், தண்ணீர் பிரச்சனை இல்லாமல் அனைவரும் மகிழ்ச்சியாய் இருந்திருக்கலாம். ஆனால், அதை உப்புத் தண்ணீராய் படைத்தான். தூரத்தில் இருந்து பார்க்கும் போது, குடி நீர் என்று நம்பி மனிதர்கள்அருகில் வந்து, பின்னர் குடித்த பின்னர், அது உப்பு தண்ணீர், குடி தண்ணீர் அல்ல என்று உணரும்படி செய்கிறான். குடிதண்ணீரை எங்கு ஒளித்து வைத்தான்?? பூமிக்கு அடியில். பல அடி பூமிக்குள் தோண்டிய பின்னர் தான் அதை எடுக்க முடியும் என்றும், கஷ்டப்படாமல் எதுவும் கிடைக்காது என்று உணர்த்தவும் அப்படி செய்தான். வெளியில் இருக்கும் கடல் ... Read More »
இன்று: செப்டம்பர் 29!!!
September 29, 2016
நிகழ்வுகள் கிமு 480 – தெமிஸ்டோகில்ஸ் தலைமையிலான கிரேக்கக் கடற்படை பேர்சியப் படையை சலாமிஸ் என்ற இடத்தில் தோற்கடித்தது. 1227 – புனித ரோமப் பேரரசன் இரண்டாம் பிரெடெரிக் சிலுவைப் போரில் பங்குபற்றாமல் போனதை அடுத்து திருத்தந்தை ஒன்பதாம் கிரகரி அவனை மதவிலக்கம் செய்தார். 1567 – பிரான்சில் இரண்டாம் சமயப் போர் ஆரம்பமானது. 1833 – மூன்று வயதுள்ள இரண்டாம் இசபெல்லா ஸ்பெயின் அரசியாக முடிசூடினாள். 1848 – ஹங்கேரியப் படையினர் குரொவேசியர்களை பாகொஸ்ட் என்ற ... Read More »
அடுத்தவர் பேச்சைப் பற்றி…..
September 29, 2016
அடுத்தவர் பேச்சைப் பற்றிக் கவலைப்படாதீர்கள்..!! ஒரு கிராமத்தில் ஏழை விவசாயி ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் தன் வீட்டுத்தேவைக்காகத் தினமும் ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்து வருவதை வழக்கமாகக்கொண்டிருந்தான். தண்ணீர் எடுத்து வர அவன் இரண்டு பானைகளை வைத்திருந்தான். அந்தப் பானைகளை ஒரு நீளமான கழியின் இரண்டு முனைகளிலும் தொங்க விட்டு,கழியைத் தோளில் சுமந்து செல்வான். இரண்டு பானைகளில் ஒன்றில் சிறிய ஓட்டை இருந்தது. அதனால் ஒவ்வொரு நாளும் வீட்டிற்கு வரும் பொழுது, குறையுள்ள பானையில் பாதியளவு நீரே இருக்கும். குறையில்லாத பானைக்குத் தன் திறன் பற்றி ... Read More »
சிரிக்க மறக்காதீர்கள்
September 29, 2016
* வாழ்க்கையின் சிரமம் மிகுந்த நேரங்களையும், நோய்களையும், வேதனைகளையும் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கக் கற்றுக்கொள்ளுங்கள். அவை எல்லாம் மாறிவிடக்கூடியவையே என்பதை உணருங்கள். வெயிலின் கடுமையை அனுபவித்தவர்கள் பின்னாளில் மழையும், குளிரும் நிறைந்த பருவம் விரைவில் வரக் காத்திருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். * வாழ்க்கையை மிகத் தீவிரமாக எடுத்துக் கொண்டு உணர்ச்சிவயப்படும் மனிதர்களிடம் அதிகமாகப் பழகாதீர்கள். உங்களைச் சுற்றியுள்ள சூழ்நிலை உங்களை நெருக்குவதாகநினைக்காதீர்கள். எல்லாவற்றையும் எளிமையாக எடுத்துக் கொள்ள கற்றுக் கொள்ளுங்கள். * ஆண்டவன் தரும் சோதனை அனைத்தையும் அவன் தரும் விளையாடல்கள் என்று எடுத்துக் கொள்ளுங்கள். ஒருநாளும் சிரிக்க மறக்காதீர்கள். ஆண்டவனை உங்கள் தோழனாகவே கருதி,அவனுக்கு ... Read More »