Home » பாரதியார் » எல்லாம் கடவுள்மயம்!!!
எல்லாம் கடவுள்மயம்!!!

எல்லாம் கடவுள்மயம்!!!

* மதத்தின் பெயரால் நாம் ஒருவரை ஒருவர் வெறுக்கக்கூடாது. அவரவர் மன விருப்பப்படி, எந்த வடித்தில் வணங்கினாலும் நாம் வழிபடுவது ஒரே கடவுளைத் தான்.

* கடவுள் ஒருவரே. அவரையே ரிஷிகள் பல பெயர்களால் அழைக்கின்றனர் என்று ரிக்வேதம் கூறுகிறது.

* “எல்லா உடம்புகளிலும் நானே உயிராக இருக்கிறேன்’ என கீதையில் கிருஷ்ணர் குறிப்பிடுகிறார். அதனால், எந்த உயிருக்கும் துன்பம் செய்யக்கூடாது.

* “எல்லாம் பிரம்ம மயம்’ “சர்வம் விஷ்ணுமயம் ஜகத்’ என்னும் வசனங்கள் உலகம் கடவுளின் வடிவம் என்பதை உணர்த்துகிறது.

* எல்லாம் கடவுள் மயம் என உணர்ந்தவன், எதற்கும் பயப்படாமல் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருப்பான்.

* உண்மை, நேர்மை, வீரம், பக்தி, உயிர்க்கருணை போன்ற நற்குணங்களை நமக்குப் போதிப்பதற்காக ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்கள் எழுதப்பட்டன. அவற்றைத் தினமும் படியுங்கள்.

* அச்சம், கவலை, சிறுமை, திகைப்பு, சோர்வு ஆகியவை மனிதனுக்குள் இருக்கும் அசுரர்கள். இவர்களுக்கு எல்லாம் தலைவன் அஞ்ஞானம்.

* சீறிவரும் பாம்பைக் கண்டு அஞ்சாமல் சிரிக்கின்ற வீரரே, கடவுளின் கருணையை பெற்றவர்.

* அஞ்ஞானம் ஒரு விஷப்பூச்சி. அதற்குக் கைகால் கிடையாது. நெளிந்து நெளிந்து நமக்குள்ளே புகுந்து ஒளியையும் இன்பத்தையும் மறைத்து விடுகிறது.

* அஞ்ஞானத்திற்கு விருத்திராசுரன் என்று பெயர். விருத்திரன் என்றால் இருள். அவனே தெய்வ இன்பங்களில் இருந்து நம்மைப் பிரித்து வைக்கும் உணர்ச்சி.

* மதிப்புடன் வாழ்ந்தவனுக்கு ஏற்படும் அபகீர்த்தி (களங்கம்) மரணத்தைக் காட்டிலும் கொடியது.

* சிறு வயதில் ஏற்படும் அபிப்ராயங்கள் மிகவும் வலிமை மிக்கவை. அசைக்க முடியாததாகவும், மறக்க முடியாததாகவும் இருக்கும்.

* கடவுள் என்ற ஒன்றே மெய்ப்பொருள். உலக உயிர்கள் அனைத்தும் அவரது வடிவம்.

* தெய்வத்தைச் சரணம் என்று பற்றிக் கொண்டவர்கள் குறைவில்லாமல் உழைக்க முன்வருவார்கள்.

* மனதில் சந்தோஷம் இல்லாததைப் போல மடத்தன்மை உலகில் வேறொன்று கிடையாது.

* மனதில் சுமை இருந்தால், அதை தெய்வத்தின் தலையில் இறக்கி வைத்து விடுங்கள்.

* கவலை, பயம் என்ற இரண்டு நாய்களுக்கும் உள்ளத்தை இரையாக்கி விட வேண்டாம்.

* நன்மை இது என்று அறிந்த பின்னும் தீமையை விட்டு விலக தயங்கவே கூடாது.

* விடாமுயற்சியும், மன உறுதியும் உடையவனுக்கு உலகில் எதுவும் கஷ்டமாக இருப்பதில்லை.

* கவலை, பயத்தை வென்றவன் மரணத்தை வென்றவன் ஆகிறான்.

* கடவுள் எப்போதும் அருளைப் பொழிந்து கொண்டிருக்கிறார். அதை நிரப்பும் விதத்தில் மனதை திறந்து வைக்க வேண்டும்.

* தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள, எப்போதும் முயற்சிக்க வேண்டும்.

* அதிகாரம், ஆடம்பரம் எல்லாம் வெற்றிலைக்குச் சுண்ணாம்பு போல அளவாக இருப்பதே நல்லது.

– பாரதியார் 

* சுதந்திரம் பிறருக்குத் துன்பம் தருவதாக இருந்தால், அதை சுதந்திரம் என்று சொல்ல முடியாது.

* நீங்கள் நல்லவனாக இருக்கிறீர்கள். இன்னும் நல்லவனாக முயற்சி செய்யுங்கள்.

* தாங்கள் ஏற்றுக் கொள்ளாத விஷயத்தைப் பற்றி குறை கூறுபவர்கள், அறிந்தோ அறியாமலோ பொய் சொல்கிறார்கள்.

* பயத்தில் இருந்தே பக்தி ஆரம்பித்தது. பயம் கொள்வதே ஞானத்தின் ஆரம்பம். கடவுள் மீது பூரண அன்பு உண்டாகும்போது, பயம் நீங்கி விடும்.

* மனிதனுக்கு கடவுள் அளித்திருக்கும் இந்த உடல் மகத்தானது. அதை ஒரு நரகக்குகையாக ஆக்குபவன் மன்னிக்க முடியாத குற்றவாளி.

* யாரைப் பற்றியாவது கோள் மூட்ட ஒருவன் வந்தால், அதற்கு சிறிதும் செவி சாய்ப்பது கூடாது. பிறரைப் பற்றிய தவறான விஷயங்களைக் கேட்பது பெரும்பாவம்.

* மனத்தளர்வு வெற்றிக்கு வழிவகுக்காது. எப்போதும் உள்ளத்தில் உறுதியும், உதட்டில் புன்னகையும் கொண்டிருப்பவனே கடவுளுக்கு விருப்பமானவன்.

* நற்செயலில் ஈடுபடுபவருக்கு கைகொடுக்க தயாராகுங்கள். ஒவ்வொரு மனிதனையும் உங்களின் சகோதரராக நடத்துங்கள்.

* தன்னலத்துடன் வாழ்பவன், புண்ணியத்தலம் அனைத்தையும் தரிசித்தாலும் கூட கடவுளுக்கு மிகத் தொலைவில் இருப்பவனே.

* அடக்கப்படாத மனம், மனிதனை கீழ்நோக்கி இழுத்து சென்று விடும்.

* இரக்கம் உள்ள இதயம், சிந்தனை ஆற்றல் படைத்த மூளை, வேலை செய்யக் கூடிய கைகள் ஆகிய இந்த மூன்றும் நமக்குத் தேவை.

* எழுந்திருங்கள். உழையுங்கள். இவ்வுலகில் நம் வாழ்வு எத்தனை நாள்? இந்த உலகில் தோன்றியதன் அறிகுறியாக வாழ்நாளில் ஏதேனும் சாதித்துவிட்டுச் செல்லுங்கள். அவ்வாறு செய்யாவிடில் மரங்களுக்கும், மனிதர்களுக்கும் என்ன வேறுபாடு?

* வாழ்வில் நன்மை பெற வேண்டுமானால் முதலில் வாழும் தெய்வமாகிய மனித வடிவம் கொண்ட ஒவ்வொருவருக்கும் சேவை செய்து வழிபடுங்கள்.

* தொண்டு செய்ய விரும்பினால், சுயநலம், புகழ், பெருமை, ஆசை இவற்றை மூட்டை கட்டி கடலில் எறிந்து விட்டு வாருங்கள்.

* ஏழைகள், பலமற்றவர்கள், நோயாளிகள் இவர்களிடம் சிவனைக் காண்பவனே, சிவனை உண்மையில் வணங்குபவன் ஆவான்.

– விவேகானந்தர்

* கவலைப்படுவதால் நீங்கள் காணும் லாபம் இருதயக்கோளாறு, பய உணர்ச்சி, நரம்புத்தளர்ச்சி ஆகியவை தான். கவலையை விட்டு, பிரச்னைக்கு எப்படி தீர்வு காணலாம் என யோசித்தால் பிரச்னையும் தீரும், உடலும் கெடாது.

* கையில் பணம் இல்லாவிட்டால், நீங்கள் முழுவதும் இழந்தது போல் உணர்கிறீர்கள். உங்கள் வேலை களை பறிப்பதாயிருந்தாலும், அதை ஒழுங்காகச் செய்தால், உங்கள் பணம் உங்களைத் தேடி வரும்.

* பணம் அதிகாரத்தைப் பெறும் ஆசையை ஏற்படுத்துகிறது. பெரும்பாலும், பணம் பெற்றவர்கள் மற்றவர்களின் துன்பங்களுக்கு இரங்காத நிலைக்குத் தள்ளி விடுகிறது.

* உங்கள் மீது நீங்களே தீர்ப்பளிக்க முடியாது. ஆண்டவனின் தீர்ப்பு அல்லது தலைவிதியே உங்களை மாற்ற முடியும்.

 பரமஹம்ச யோகானந்தர்

* கடவுள் எல்லையற்ற கருணைக்கடலாக இருக்கிறார். எல்லா உயிர்களிலும், பொருட்களிலும் அவர் நிலைபெற்று இருக்கிறார். அவரை அறிந்து கொள்ள எளிய வழி பக்தி ஒன்றே.

* பொறியில் சிக்கும் எலி போல, மனிதன் உலகம் என்னும் பொறியில் ஆசை வயப்பட்டு அழிந்து போகிறான்.

* மனிதனைத் தாக்கும் ஆயுதம் நாக்கு. நாக்கினால் உண்டான காயம் ஆற நீண்டகாலம் ஆகும். பிறர் மனதை புண்படுத்தும் விதத்தில் பேசக்கூடாது.

* பாம்பின் விஷம் நச்சுப்பல்லில் மட்டும் இருக்கிறது. ஆனால், மனித இதயத்தில் தீய எண்ணம் புகுந்து விட்டால் நம் உடல் முழுவதும் நஞ்சு பரவி விடும். எனவே நல்ல எண்ணங்களுடன் வாழுங்கள்.

* ஐம்புலன்களின் வாயிலாகவே உலகத்தோடு தொடர்பு கொள்கிறோம். இவற்றை முறையாக பயன்படுத்தாவிட்டால், அவற்றிற்கு அடிமையாவோம்.

* தவறு செய்யாத மனிதர் இல்லை. ஆனால், அறிந்தோ அறியாமலோ பெற்றோருக்கு செய்ய வேண்டிய கடமை மறக்கும் அளவிற்கு தவறு செய்து விடாதீர்கள்.

– சாய்பாபா

* ஒரு செயலைத் தொடங்கும் முன்பு,
அதனால் உண்டாகும் பயனை எண்ணி செயல்பட வேண்டும்.

* ஒருவனுக்கு சிறப்பு தருவது இனமோ, மதமோ, ஜாதியோ அல்ல. அவன் செய்யும் செயல் மட்டுமே சிறப்பைத் தருகிறது.

* படிப்பு பண்பைத் தருவதுடன்,
வாழ்வையே மாற்றும் வகையில் உள்ளது.

* ஒரு மனிதனை மனிதன் ஆக்குவது கல்வி. அவனை
நல்வழிப்படுத்துவது கல்வி. அவனை ஒழுக்க சீலனாய்
மாற்றுவதும் கல்வியேயாகும்.

* நாம் பிறர்க்கு உதவி செய்யவும் படைக்கப்
பட்டிருக்கிறோம். கைகள் வாங்குவதற்கு மட்டுமல்ல, கொடுப்பதற்காகவும் தான் படைக்கப்பட்டுள்ளது.

* பணம் வாழ்விற்குத் தேவை. ஆனால், பணமே
வாழ்க்கையல்ல என்பதை உணரவேண்டும்.

* குழந்தைகளை பெற்றால் மட்டும் போதாது, பெற்று வளர்த்து, சான்றோன் ஆக்குதலே தந்தையின் கடமை.

* உள்ளத்தில் அன்பு நிறைந்தால், உதட்டில் இனிமையான சொல் பெருகும். இதனால் புன்னகை பூக்கும், மகிழ்ச்சி பெருகும். இன்பம் கூடும், வாழ்வு இனிதாகும்.

* இறைவனை வணங்குகிறவர்களை நன்மையோ, தீமையோ பாதிக்காது, துன்பம் என்ற கடலைச் சுலபமாக நீந்திக் கரை ஏறுவர்.

* இன்பம், துன்பம், கலந்தது தான் வாழ்க்கை. ஆனால், தன் தூய்மையான மனத்தை இறைவனுக்கு அர்ப்பணித்து விட்டால் துன்பம் இல்லை.

* அன்பை அடிப்படையாகக் கொண்டே மனித வாழ்க்கை சிறப்படைகிறது. அன்புடையவன் தன்னலமற்றவனாக வாழ்கிறான்.

* அடக்கம் உடைய மனிதன் உயர்வடைகிறான். மேலும் உயர்வடைய அடக்கத்தைத் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும்.

* தான தர்மங்களினால் பெற்ற புகழ் மட்டுமே நிலையானது. அதைத் தவிர இந்த உலகில் பெறும் எல்லாப்புகழுமே நிலையற்றது தான்.

* எந்த சூழ்நிலையிலும் பொதுவாய் சிந்தித்து, நடுநிலைமையோடு வாழ்வதே சிறந்தது. ஒரு மனிதனின் உயர்ந்த தகுதி அது தான்.

* உலகத்தின் மற்ற தொழில்கள் அனைத்தும் உழவைச் சார்ந்தே இருப்பதால், உழவுத் தொழில் தான் உலகில் சிறந்தது.

– திருவள்ளுவர்

* மனநெகிழ்ச்சியுடன் கடவுளைப் போற்றிப் பாடுங்கள். ராகம், தாளம் எல்லாம் இரண்டாம் பட்சமே.

* கடவுளுக்குச் செலவழிக்கும் பணத்தை, உணவின்றி வாடும் ஏழைகளின் வயிற்றில் நிரப்புங்கள்.

* கடவுள் ஒன்றும் கற்பனையானவர் அல்ல. அவர் ஒருவரே மட்டுமே சத்தியமானவர்.

* உடலை வருத்தி நோன்பு மேற்கொள்வதை விட, யாரையும் துன்புறுத்தாமல் இருப்பதே சிறந்தது.

* உயிர்களை நேசியுங்கள். ஜீவகாருண்ய ஒழுக்கமே பேரின்ப வீட்டின் திறவுகோல்.

* கடவுளின் பெருமையைப் பேசினால் வாய் மணக்கும். கோயிலுக்குச் சென்று அவரைத் தரிசித்தால் மனம் குளிரும்.

* நானே பெரியவன் என்று இறுமாப்பு கொள்வது நல்லதல்ல.

* பிழைப்புக்காக, குணம் இல்லாதவனின் வீட்டு வாசலில் நாய் போல இருப்பது கூடாது.

* உண்மையை மட்டும் பேசுங்கள். அது உங்களின் கவுரவத்தைப் பாதுகாக்கும்.

* பகல் உணவுக்குப் பின் சிறிது நேரம் ஓய்வெடுங்கள். இரவு உணவுக்குப் பின் சிறிது தூரம் நடந்து வாருங்கள். இது மனதுக்கும் உடலுக்கும் நல்லது.

* நீங்கள் எந்தச் செயலில் ஈடுபட்டாலும் அதில் பிறருக்கு இடையூறு இல்லாத விதத்தில் பார்த்துக் கொள்ளுங்கள்.

* சூரியன் தினமும் ஓடிக்கொண்டே இருக்கிறான். அவன் பின்னால் காலமும் ஒவ்வொரு நாளாய் விரைந்து ஓடுகிறது.

* எத்தனை படிகள் என்று மலைக்க வேண்டாம். எல்லாவற்றையும் கடந்து மேலேறி விடலாம். முயற்சியைக் கைவிடாதீர்கள்.

* உடம்பில் இருக்கும் உயிர் ஒன்று தான். அதுபோல, இந்த உலகத்தில் இருக்கும் கடவுளும் ஒருவர் தான்.

* உயிர்க்கருணை இல்லாதவர் செய்யும் வழிபாடும், தியானமும் எதற்கும் பயன்படாது.

* பொய் சொல்வதையும், இட்டுக்கட்டி பேசுவதையும் தவிர்த்து விடுங்கள். நடுவுநிலை தவறாமல் உண்மையை மட்டும் பேசுங்கள்.

* உள்ளத்தில் தூய்மை இருக்குமானால், கடவுளுக்கும் உங்களுக்கும் இடையில் நெருக்கம் உண்டாகி விடும்.

* அறிவால் கடவுளை ஒருபோதும் அளக்க முடியாது. ஆனால், நம் முயற்சிக்கு தகுந்தாற்போல, அவன் நம்மிடம் வெளிப்படுவான்.

 வள்ளலார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top