ஸ்வஸ்திகா சின்னத்தின் முக்கியத்துவம்!
ஸ்வஸ்திகா என்பது ஒவ்வொரு இந்து வீட்டிலும் காணப்படும் ஒரு பொதுவான சின்னமாகும். இந்துக்களின் அனைத்து மங்களகரமான நிகழ்வுகளிலும் இந்த சின்னம் கண்டிப்பாக இடம் பெறும். ரங்கோலி வடிவிலோ அல்லது கலசத்திலோ அல்லது வீட்டின் கதவுகளிலோ அது வரையப்பட்டிருக்கும்.
ஸ்வஸ்திகா எனும் வார்த்தை ‘சு’ (மங்களகரம் என பொருள் தரும்) மற்றும் ‘அஸ்தி’ (இருக்கும் என பொருள் தரும்) என்ற இரண்டு அசைகளால் உருவானவை. இரண்டையும் சேர்த்தால் ஸ்வஸ்திகா என்பதற்கு ‘மங்களகரம் உங்கள் உடனிருக்கும்’ என பொருள் தரும். சக்தி, நல்ல அதிர்ஷ்டம் மற்றும் செழிப்பை குறிக்கும் சின்னமாக ஸ்வஸ்திகா பார்க்கப்படுகிறது.
இந்த மங்களகரமான சின்னம் இந்தியாவில் மட்டும் புகழோடு விளங்காமல், மற்ற பல நாடுகளிலும் கூட புகழோடு விளங்குகிறது. உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால், ஜெர்மனி நாசி படையின் சின்னமே இந்த ஸ்வஸ்திகா தான். அதே போல் தாய்லாந்து நாட்டு மக்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவிக்க ஸ்வஸ்திகா சின்னத்தை பயன்படுத்துகின்றனர்.
அதிர்ச்சியூட்டும் 10 வியப்பான சமயஞ்சார்ந்த சடங்குகள்!!!
ஸ்வஸ்திகா சின்னத்தில் குறுக்கு கோடுகள் நான்கினை காணலாம். இது நான்கு திசைகளை குறிக்கிறது. இது புருஷர்தா எனப்படும் மனிதர்களின் அடிப்படை ஆசைகளை குறிக்கவும் செய்கிறது. தர்மா (கட்டளை), அர்தா (செல்வம்), காமா (காமம்) மற்றும் மோக்ஷா (மோட்சம்) ஆகியவைகள் தான் அந்த நான்கு ஆசைகள்.
இந்த சின்னத்திற்கு பல விதத்தில் விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளது. ஸ்வஸ்திகா சின்னத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி இப்போது பார்க்கலாமா?
செல்வம் மற்றும் வளமையின் சின்னம்:
ஸ்வஸ்திகா சின்னத்தின் இடது பக்கம் விநாயகர் வசிக்கும் இடமாக கருதப்படுகிறது. ஸ்வஸ்திகா என்பது கடவுள்கள் வசிக்கும் இடமாக நம்பப்படுகிறது. ஸ்வஸ்திகா வரையப்பட்டிருக்கும் இடத்தில் செல்வமும், வளமையும் குடி கொண்டிருக்கும் என நம்பப்படுகிறது.
எதிர்மறை ஆற்றல்களை அழிக்கும்:
சுற்றுப்புறத்தில் உள்ள எதிர்மறை ஆற்றல்களை ஸ்வஸ்திகா அழிக்கும் என கூறப்படுகிறது. வாஸ்து சாஸ்திரத்தின் படி, ஸ்வஸ்திகா என்பது ஒரு வீட்டில் இருக்க வேண்டிய நல்ல சின்னமாம். இது உங்கள் வீட்டிற்கு நல்ல அதிர்ஷ்டத்தையும், வளத்தையும் கொண்டு வரும்.
ஜெயின் மதத்தில்:
ஸ்வஸ்திகா ஜெயின் மதத்தினரும் ஸ்வஸ்திகாவை நல்ல அதிர்ஷ்டத்தை தரும் சின்னமாக கருதுகின்றனர். ஜெயின் மதத்தை சேர்ந்த 24 தீர்த்தன்கராக்களும் ஸ்வஸ்திகாவை தங்களின் சின்னமாக வைத்துள்ளனர்.
முக்கியத்துவம்:
பழங்காலத்தில் இருந்தே ஸ்வஸ்திகா என்பது வளத்தை கொண்டு வரும் சின்னமாக பார்க்கப்படுகிறது. சொல்லப்போனால் உங்கள் வீட்டில் ஏதேனும் வாஸ்து தோஷம் இருந்தால், தலைவாசல் கதவின் இரண்டு பக்கமும் இரண்டு ஸ்வஸ்திகா பிரமிடுகளை வைத்தால் அந்த தோஷம் நீங்குமாம்.
பணப்பெட்டகம் மற்றும் வணிக கணக்கு புத்தகங்களிலும் இந்த ஸ்வஸ்திகா சின்னத்தை வரைந்திருந்தால் அது அதிக பொன்னையும் பொருளையும் ஈட்டி தரும். அதனால், ஸ்வஸ்திகா என்பது இந்து மதத்தில் மட்டுமல்லாது மற்ற பண்பாடுகளிலும் முக்கிய சின்னமாக திகழ்கிறது.