பழைய சோறு

பழைய சோறு

பழைய சோறு:

அந்த காலத்தில் கிராமங்களில் காலை உணவாக பழைய சோறு சாப்பிடுவது வழக்கம். அந்த வழக்கம் தற்ப்போது கிராமங்களில் கூட கான முடிவதில்லை. நாம் சிறு வயதில் சாப்பிட்டிருப்போம். இப்போது பழைய சோறு சாப்பிடுவது தகுதி குறைவாக பார்க்கப்ப்டுகிறது. பிச்சைக்காரன் கூட வாங்க மாட்டேன் என்கிறான்.

இக்காலத்தில் சொல்லவே வேண்டாம். பழைய சோறு என்றாலே காத தூரம் ஓடுகிறோம். ஆணால் அதில் தான் வைட்டமீன் பி6 மற்றும் பி12 அதிகமாக உள்ளது. தவிரவும் சிறு குடலுக்கு நன்மை செய்யும் பாக்டிரியாக்கள் ட்ரில்லியன் கணக்கில் இருக்கிறதாம்.

இது நமது உணவுப்பாதையை ஆரோகியமாக வைத்திருகிறதாம். உணவுப்பாதை சீராக இருந்தால் அவுட்லெட்டும் சீராகிவிடும். காலையில் கழிவறயில் மல்லு கட்ட வேண்டாம். இதனுடன் இரண்டு சிறிய வெங்காயம் சேர்த்து உண்டால் அபரிமிதமான நோய் எதிற்ப்பு சக்தி கிடைகிறதாம். காய்சால் பேன்ற நோய்களிடம் இருந்து காக்கிறது பண்றி காய்ச்சல் உட்பட.

காலை உணவாக பழைய சாத்தை உண்டால் உடல் லேசாகவும் சுறு சுறுப்பாகவும் இருக்கும். இரவிலே தன்னிர் ஊற்றி வைப்பதால் லட்சக்கணக்கான நல்ல பாக்டிரியாக்கள் உருவாகிறது. மறு நாள் இதை குடிப்பதால் உடல் சூட்டை தணிப்பதோடு குடல் புண், வயிற்று வலி போன்றவற்றை குணப்படுதும்.

அதுமில்லாமல் இதில் இருக்கும் நார் சத்து மலச்சிக்கல் இல்லமல் காலையில் ஃபிரியா போலாம். இதனை தொடர்ந்து சாப்பிட்டால் ரத்த அழுத்தம் கட்டுக்குள் வந்து உடல் எடையும் குறந்துவிட்டதாக அமெரிக்காவில் வசிக்கும் இந்திய விஞ்ஞானி பிரதீப் கூறுகிறார்.

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் உடலுக்கு அதிகமான சக்தியை தந்து உடலை சோர்வின்றி வைக்க உதவுகிறது. அலர்ஜி, அரிப்பு போன்றவை கூட சரியாகிவிடுகிறது. அல்சர் உள்ளவர்கள் இதை சாப்பிட்டு வந்தால் மிக விரைவில் குண்மாகிவிடும். எல்லாவற்றிர்கும் மேலாக நோய் எதிர்ப்பு சக்தி கிடைப்பதால் எந்த நோயும் வராம்ல் உடல் ஆரோக்கியமாகவும் இளமையாகவும் இருக்கும்.

அதனாலதான் நம்ம ஆளுங்க ஒரு சட்டி பழைய சாதம் சாப்பிட்டு விட்டு மாலை வரை வயலில் வேலை செய்யமுடிந்திருகிறது போலும். காலையில் சாண்ட்விச், பீட்ஸா, பர்கர் என கழித்து திரியும் தமிழ் மக்களே இன்றிலிருந்து பழைய சோறு சாப்பிட்டு நோயிலிருந்து பாதுகாப்பு பெறுவோம்.

அப்புறம் பழைய சாதம் செய்ய தெரியுமா? (என்ன கொடுமை சார் இது எதுகொல்லாம் கிளாஸ் எடுக்க வேண்டியாத இருக்கு) பொங்குன சோத்துல தண்னிய ஊத்திட்டு அடுத்த நாள் கலைல திறந்து பாருங்க கம கம என பழைய சோறு தயார்.

இதற்க்கு கைகுத்தல் அரிசி சிறந்தது. நம்ம வீட்டல் போய் கைகுத்தல் அரிசியில் சோறு பொங்க சொன்னால் நம்க்குதான் குத்து கிடைக்கும் என அஞ்சுபவர்கள் ஒரு ரூபாய் அரிசி கூட உபயோக்கலாம்.

சூடான சாததில் தண்னிர் ஊற்ற கூடாது. ஆறிய பின்பு மண்டட்டியில் போட்டு தண்னிர் ஊற்றி மறு நாள் காலையில் சிறிது மோர் கலந்து சின்ன வெங்காயத்துடன் சாப்பிட்டால் ஜில்லென்று இருக்கும். மதியம் வரை பசிக்காதாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top