Home » படித்ததில் பிடித்தது » த‌மி‌ழ் வருட‌ங்க‌‌ளி‌ன் பெய‌ர்க‌ள்!!!
த‌மி‌ழ் வருட‌ங்க‌‌ளி‌ன் பெய‌ர்க‌ள்!!!

த‌மி‌ழ் வருட‌ங்க‌‌ளி‌ன் பெய‌ர்க‌ள்!!!

தமிழ் எண்கள் கொஞ்சம் கொஞ்சமாக நம் ஞாபகத்திலிருந்து விலகிக் கொண்டிருக்கிறது. அதே போலத்தான் தமிழ் வருடங்களும். இது எந்த வருடம் என்று நாட்காட்டியைப் பார்த்துத் தெரிந்து கொள்ள வேண்டிய நிலை.
நமது வாரிசுகளிடம் கேட்டால் அவ்வளவு தான். தமிழில் மொத்தம் 60 வருடங்கள் இருக்ககின்றன. இவை மீண்டும் மீண்டும் வந்து கொண்டே இருக்கும். ஒரு சஷ்டியாகக் கருதப்படும் 60 தமிழ் வருடங்களின் பெயர்கள்

இதோ

த‌மி‌ழ் வருட‌ங்க‌‌ளி‌ன் பெய‌ர்க‌ள்:-


01. பிரபவ Prabhava 1987 – 1988

02. விபவ Vibhava 1988 – 1989

03. சுக்ல Sukla 1989 – 1990

04. பிரமோதூத Pramodhoodha 1990 – 1991

05. பிரசோற்பத்தி Prachorpaththi 1991 – 1992

06. ஆங்கீரச Aangirasa 1992 – 1993

07. ஸ்ரீமுக Srimukha 1993 – 1994

08. பவ Bhava 1994 – 1995

09. யுவ Yuva 1995 – 1996

10. தாது Thaadhu 1996 – 1997

11. ஈஸ்வர Eesvara 1997 – 1998

12. வெகுதானிய Vehudhanya 1998 – 1999

13. பிரமாதி Pramathi 1999 – 2000

14. விக்கிரம Vikrama 2000 – 2001

15. விஷு Vishu 2001 – 2002

16. சித்திரபானு Chitrabaanu 2002 – 2003

17. சுபானு Subaanu 2003 – 2004

18. தாரண Thaarana 2004 – 2005

19. பார்த்திப Paarthiba 2005 – 2006

20. விய Viya 2006 – 2007

21. சர்வசித்து Sarvajith 2007 – 2008

22. சர்வதாரி Sarvadhari 2008 – 2009

23. விரோதி Virodhi 2009 – 2010

24. விக்ருதி Vikruthi 2010 – 2011

25. கர Kara 2011 – 2012

26. நந்தன Nandhana 2012 – 2013

27. விஜய Vijaya 2013 – 2014

28. ஜய Jaya 2014 – 2015

29. மன்மத Manmatha 2015 – 2016

30. துன்முகி Dhunmuki 2016 – 2017

31. ஹேவிளம்பி Hevilambi 2017 – 2018

32. விளம்பி Vilambi 2018 – 2019

33. விகாரி Vikari 2019 – 2020

34. சார்வரி Sarvari 2020 – 2021

35. பிலவ Plava 2021 – 2022

36. சுபகிருது Subakrith 2022 – 2023

37. சோபகிருது Sobakrith 2023 – 2024

38. குரோதி Krodhi 2024 – 2025

39. விசுவாசுவ Visuvaasuva 2025 – 2026

40. பரபாவ Parabhaava 2026 – 2027

41. பிலவங்க Plavanga 2027 – 2028

42. கீலக Keelaka 2028 – 2029

43. சௌமிய Saumya 2029 – 2030

44. சாதாரண Sadharana 2030 – 2031

45. விரோதகிருது Virodhikrithu 2031 – 2032

46. பரிதாபி Paridhaabi 2032 – 2033

47. பிரமாதீச Pramaadhisa 2033 – 2034

48. ஆனந்த Aanandha 2034 – 2035

49. ராட்சச Rakshasa 2035 – 2036

50. நள Nala 2036 – 2037

51. பிங்கள Pingala 2037 – 2038

52. காளயுக்தி Kalayukthi 2038 – 2039

53. சித்தார்த்தி Siddharthi 2039 – 2040

54. ரௌத்திரி Raudhri 2040 – 2041

55. துன்மதி Thunmathi 2041 – 2042

56. துந்துபி Dhundubhi 2042 – 2043

57. ருத்ரோத்காரி Rudhrodhgaari 2043 – 2044

58. ரக்தாட்சி Raktakshi 2044 – 2045

59. குரோதன Krodhana 2045 – 2046

60. அட்சய Akshaya 2046 – 2047

 

தமிழ் மாதங்கள்:

பூமிக்குச் சார்பாகச் சூரியனின் இயக்கம் நீள்வட்டப் பாதையில் அமைந்திருப்பதால் இராசிகளில் சூரியனின் பயணம் ஒரே கால அளவைக் கொண்டிருப்பதில்லை.

ஒவ்வொரு இராசியையும் சூரியன் கடப்பதற்கு வெவ்வேறு கால அளவு எடுத்துக் கொள்கிறது. இதனால் மாதங்களும் வெவ்வேறு அளவுள்ளவையாக உள்ளன. தமிழ் மாதங்களின் கால அளவுகள் கீழே தரப்பட்டுள்ளன.

மாதம் நாள் நாடி விநாடி தற்பரை வசதிக்காக
1 சித்திரை 30 55 32 00 31
2 வைகாசி 31 24 12 00 31
3 ஆனி 31 36 38 00 32
4 ஆடி 31 28 12 00 31
5 ஆவணி 31 02 10 00 31
6 புரட்டாசி 30 27 22 00 31
7 ஐப்பசி 29 54 07 00 29/30
8 கார்த்திகை 29 30 24 00 29/30
9 மார்கழி 29 20 53 00 29
10 தை 29 27 16 00 29/30
11 மாசி 29 48 24 00 29/30
12 பங்குனி 30 20 21 15 31
மொத்தம் 365 15 31 15

 

தமிழ் மாதங்கள் தனித் தமிழ்ப் பெயர்கள்

வழக்குச்சொல் தனித்தமிழ்

சித்திரை – மேழம்

வைகாசி – விடை

ஆனி – இரட்டை

ஆடி – கடகம்

ஆவணி – மடங்கல்

புரட்டாசி – கன்னி

ஐப்பசி – துலை

கார்த்திகை – நளி

மார்கழி – சிலை

தை – சுறவம்

மாசி – கும்பம்

பங்குனி – மீனம்

கிழமைகளின் தனித்தமிழ்ப் பெயர்கள்

ஞாயிறு – ஞாயிறு

திங்கள் – திங்கள்

செவ்வாய் – செவ்வாய்

புதன் – அறிவன்

வியாழன் – வியாழன்

வெள்ளி – வெள்ளி

சனி – காரி

பருவங்கள்:

1.இளவேனில்

2.முதுவேனில்

3.கார் காலம்

4.குளிர் காலம்

5.முன்பனி காலம்

6.பின்பனிர் காலம்

 திதிகள்

பிரதமை

த்விதை

திரிதியை

சதுர்த்தி

பஞ்சமி

சஷ்டி

சப்தமி

அஷ்டமி

நவமி

தசமி

ஏகாதசி

த்வாதசி

த்ரோதசி

சதுர்தசி

பௌர்ணமி (அ) அமாவாசை

கரணம்:

ஒரு திதியின் முற்காலம், பிற்காலம் ஆகியவை கரணம் எனப்படுகின்றது. கரணம் என்பது திதியின் அரைப்பங்கு ஆகும்.

திதியை இரண்டாகப் பிரித்து முற்காலத்துக்கு ஒரு கரணமும், பிற்காலத்துக்கு ஒரு கரணமும் இருக்கும். அதாவது 30 திதிகளுக்கும் மொத்தமாக 60 கரணங்கள் உண்டு.

ஏழு கரணங்கள் சுழல் முறையிலும், நான்கு கரணங்கள் சிறப்பான முறையிலும், மொத்தம் 11 கரணங்களின் பெயர்களை ஏற்படுத்தி, இவற்றை வைத்து ஓர் ஒழுங்கு முறையில் மொத்தமுள்ள 60 கரணங்களுக்கும் பெயர் கொடுத்துள்ளனர்.

01.பவம்

02.பாலவம்

03.கௌலவம்

04.சைதுளை

05.கரசை

06.வனசை

07.பத்திரை

08.சகுனி

09.சதுஷ்பாதம்

10.நாகவம்

11.கிமிஸ்துக்கினம்

கால அளவுகள்:


1 நொடி = 2 கண்ணிமை

1 மாத்திரை  = 2 கைநொடி

1 குரு = 2 மாத்திரைகள்

1 உயிர் = 2 குருக்கள்

1 சணிகம் = 2 உயிர்கள்

1 விநாடி= 12 சணிகங்கள்

1 விநாடி  = 60 தற்பரைகள்

1 நிமிடம் = 60 விநாடிகள்

1 பாகை = 4  நிமிடங்கள்

1 நட்சத்திரம் = 13.33  பாகைகள்

1 யோகம் = 27 நட்சத்திரம்

1 நாழிகை = 24 நிமிடங்கள்

1 மணி அல்லது ஓரை = 2 1/2 நாழிகைகள்
1 முகூர்த்தம் = 3 3/4 நாழிகைகள்
1 சாமம் = 2 முகூர்த்தங்கள்
1 பொழுது = 4 சாமங்கள்
1 நாள் = 2 பொழுதுகள்
1 கரணம் = 1/2 திதி
1 வாரம் = 7 நாட்கள்
1 பட்சம் = 15 நாட்கள்

1 திதி = 31 நாட்கள்

1 மாதம் = 2 பட்சங்கள்
1 பருவம் = 2 மாதங்கள்
1 அயனம் = 3 பருவங்கள்
1 வருடம் = 2 அயனங்கள் = (365 நாள், 15 நாடி, 31 விநாடி, 15 தற்பரை)
1 தேவ ஆண்டு = 360 மனித ஆண்டுகள்யுகங்கள்:

1 யுகம் = 4,32,௦௦௦ ஆண்டுகள்
1 கிருதயுகம் =  4 யுகங்கள்
1 திரேதாயுகம் = 3 யுகங்கள்
1 துவாபரயுகம் = 2 யுகங்கள்
1 கலியுகம் = 1  யுகம்


1 சதுர்யுகம் = 10 யுகங்கள்

1 மன்வந்தரம் = 72  சதுர்யுகங்கள்

1 கல்பம் = 14  மன்வந்தரங்கள் = பிரம்மாவின் ஒரு பகல்

1 மகா பிரளயம் = 14  மன்வந்திரங்கள்

1 பிரம்மா காலம் = (1  கல்பம் + 1  மகா பிரளயம்)

இதன் பின் பிரம்மாவின் காலம் சுழலும்.

பிரம்மாவிற்கு வயது 100. முடிந்ததும் அடுத்த பிரம்ம தோன்றுவார்.

தமிழ் எண்கள்
***********

* ௧ = 1
* ௨ = 2
* ௩ = 3
* ௪ = 4
* ௫ = 5
* ௬ = 6
* ௭ = 7
* ௮ = 8
* ௯ = 9
* ௰ = 10
* ௰௧ = 11
* ௰௨ = 12
* ௰௩ = 13
* ௰௪ = 14
* ௰௫ = 15
* ௰௬ = 16
* ௰௭ = 17
* ௰௮ = 18
* ௰௯ = 19
* ௨௰ = 20
* ௱ = 100
* ௱௫௰௬ = 156
* ௨௱ = 200
* ௩௱ = 300
* ௲ = 1000
* ௲௧ = 1001
* ௲௪௰ = 1040
* ௮௲ = 8000
* ௰௲ = 10,000
* ௭௰௲ = 70,000
* ௯௰௲ = 90,000
* ௱௲ = 100,000 (lakh)
* ௮௱௲ = 800,000
* ௰௱௲ = 1,000,000 (10 lakhs)
* ௯௰௱௲ = 9,000,000
* ௱௱௲ = 10,000,000 (crore)
* ௰௱௱௲ = 100,000,000 (10 crore)
* ௱௱௱௲ = 1,000,000,000 (100 crore)
* ௲௱௱௲ = 10,000,000,000 (thousand crore)
* ௰௲௱௱௲ = 100,000,000,000 (10 thousand crore)
* ௱௲௱௱௲ = 1,000,000,000,000 (lakh crore)
* ௱௱௲௱௱௲ = 100,000,000,000,000 (crore crore)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top