Home » சிறுகதைகள் » தம்பி கல்யாணம்!!!
தம்பி கல்யாணம்!!!

தம்பி கல்யாணம்!!!

கணவன்;எவ்வளவு நேரமா கிளம்புவ

மனைவி ; இதோ கிளம்பிட்டேன்

கணவன்; காலையில இருந்து இதத்தான் சொல்லிக்கிட்டு
இருக்க நீ கிளம்புரதுகுள்ள உன் தம்பி கல்யாணம்
முடிந்திடும்

மனைவி;இருங்க இதோ வந்துட்டேன் வாங்கியாந்த பூவ
எங்க வச்சிருக்கீங்க

கணவன்; அந்த டேபுள் மேல இருக்கு பாரு

மனைவி; என்னாங்க பிளாஸ்டிக் பூ மாதிரி இருக்கு

கணவன்; அது பிளாஸ்டிக் பூதான்

மனைவி; எதுக்குங்க பிளாஸ்டிக் பூ வாங்கியாந்தீங்க
கணவன்; பின்ன ஒருஜினல் பூவா இருந்திருந்தால்
இந்நேரம் வாடி வதங்கி போயிருக்கும்
வளவளன்னு பேசாம சீக்கிரம் கிளம்புடி

மனைவி; இதோ வந்துட்டேன்

(பைக்கில் போகும் போது )

மனைவி; பின்னாடி சைக்களில் வர்றவரு நம்ம
பல்சர முந்திடுவார் போல கொஞ்சம் வேகமாதான்
போங்களேன்

கணவன்;ஏற்கனவே ஆயிரத்தெட்டு சிலவு இதில
ஆஸ்பத்திரி செலவும் சேர்த்து என்னால்
செய்ய முடியாது.

(கல்யாண மண்டபத்தில்)

மாமனார்;என்ன தம்பி வர்றவங்கள வரவேற்க சொன்னா
போறவங்கள வழி அனுப்ப வாறீங்க

மருமகன்; ம்ம் ஒன்ன கடைசியா பெத்து இந்த இளிச்சவாயன் தலையில கட்டி வச்சீங்களே அவகிட்ட சொல்லுங்க

மச்சினன்;என்ன மச்சான் தாலி எடுத்து கொடுக்க வர சொன்னா
ஏலாம் நாள் தாலி பிரிச்சி கட்ட வந்து இருக்கீங்க

மச்சான்;உனக்கு தெரியாததா மாப்ள நீயும் சேர்ந்துகிட்டு

மச்சினன்; சரி மச்சான் போய் சாப்பிடுங்க

(சாப்பிடும் இடத்தில்)

மாமியார்;ம்ம் வாங்க (மனதிற்குள்;இந்த வேலைக்கு மட்டும் கரைக்டா வந்துடு)

மருமகன்;ம்ம் மன்னிச்சிக்குங்க அத்தை கொஞ்சம் லேட் ஆயிடுச்சி (மனதிற்குள்; வாங்க என்பதில் எத்தனை அர்த்தம் வச்சிருக்காலோ இந்த வில்லி)

கொழுந்தியா ;வாங்க அத்தான் இலை போட்டு பரிமாற வராம சாப்பிட்ட இலைய எடுத்து போட வந்திருக்கீங்க போல

அத்தான்; ஏன் சொல்ல மாட்டீங்க உன் தங்கச்சிய கட்டிய பாவத்திற்கு எடுத்து போடுற இலையில் இருந்து பொருக்க விடாம இருந்தால் சரி

சகல; வாங்க சகல கறி எல்லாம் முடிஞ்சி போச்சி எலும்பு இருக்கு கடிக்கிரீங்க்களா

அட நீங்க வேற ஏன் சகல கடிச்சிகிட்டு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top