Home » படித்ததில் பிடித்தது » கோயிலில் வழிபடும் முறை!!!
கோயிலில் வழிபடும் முறை!!!

கோயிலில் வழிபடும் முறை!!!

கோயிலில் வழிபடும் முறை!

ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்று பழமொழியே உள்ளது. கோயிலுகளுக்குச் செல்வதால் மன அமைதி கிடைப்பதோடு, மருத்துவரீதியாக உடலும் நலமாகிறது.

வழிபடும் முறை:-

* கோயிலுக்குச் செல்லும் போது உடல், ஆடை, மனம் ஆகிய மூன்றும் தூய்மையாக இருக்கவேண்டும்.

* நெற்றியில் ஆண்கள் திருநீறும் சந்தனமும் , பெண்கள் குங்குமம் இல்லாம் வழிபடக்கூடாது.

* கோயில் வாயிலில் நுழையும் முன் நீரால் கை, கால்களை அலம்பிக் கொண்டு பிறகு செல்ல வேண்டும்.

* கோயில் உள்ளே சென்றவுடன் யாரிடமும் பேசாமல் இறைவனை மட்டும் மனதில் பிராத்தனை செய்ய வேண்டும்.

* கோயிலுக்குச் சென்றவுடன் முதலில் கோபுரத்தை பார்த்து இரு கைகளையும் தலைக்குமேல் தூங்கி வணங்க வேண்டும்.

* அதன் பிறகு கொடி மரத்தின் வலது பக்கத்தில் தரையில் விழுந்து வணங்க வேண்டும்.

* பிறகு பலிபீடத்துக்கு அருகில் சென்று நம்மிடமுள்ள தீய குணங்களை பலிகொடுத்தாக வணங்க வேண்டும்.

* அதன் பிறகு விநாயகரை வணங்க வேண்டும். விநாயகரை வணங்கும் போது தோர்பிஹ் கர்ணமிட்டு நெற்றி பொட்டுகளில் இலேசாகக் குட்டிக் கொள்ள வேண்டும்.

* கோயிலுக்குள் சுற்றும் போது வேகமாக நடக்காமல் மெதுவாக நடக்க வேண்டும். மும்முறை சுற்றி வந்ததும் கருவறை மண்டபத்துக்குள் நுழைந்து இறைவனை தரிசிக்க வேண்டும். அர்ச்சனைகள் செய்து ஆரத்தி காட்டியதும் தீபத்தை பயபக்தியுடன் கண்களில் ஒற்றிக் கொள்ள வேண்டும்.

* பின்பு கோயிலுக்கு வெளியில் அனுமாரை தரிசித்து கோயிலுக்குள் பிரவேசிக்க வேண்டும்.

* பிறகு சிறிது நேரம் கோயிலில் உட்கார்ந்து கண்மூடி பகவானை நினைத்துக் கொள்ள வேண்டும். மறுபடியும் மானசிகமாக தரிசித்துவிட்டு உத்தரவு பெற்றுக் கொண்டு கிளம்ப வேண்டும்.
கோயிலுக்கு செல்பவர்கள் வழிபாட்டிற்கான அடிப்படை வழிமுறை!

தொலைவில் இருந்தே கோபுரத்தை தரிசனம் செய்ய வேண்டும்….

கோபுரவாசலைக் கடந்ததும், கொடிமரத்தை வணங்கியபடியே கோயிலுக்குள் நடக்க வேண்டும்.

ஆண்டவனைச் சரணடைகிறேன் என்பதே கொடிமர வழிபாட்டின் நோக்கம்.
பலிபீடத்தின் முன்னால் தலை தாழ்த்தி வணங்க வேண்டும்.

இறைவா! என்னிடம் உள்ள ஆணவம் முதலிய தீயகுணங்களை இங்கேயே பலியிடுகிறேன், அதற்கு அருள்செய், என்பதே பலிபீடத் தத்துவம்.

இப்போதுதான் சுவாமி தரிசனத்திற்கு நாம் தகுதி பெறுகிறோம். பின்பு விநாயகப்பெருமானை வணங்கி, தலையில் குட்டி, தோப்புக்கரணம் இட வேண்டும்.

தடையின்றி வழிபாடு இனிதே அமைய பிரார்த்திக்க வேண்டும்.

சிவாலயத்தில் நந்திதேவரையும், பெருமாள் கோயில்களில் கருடாழ்வாரையும் தரிசித்து அவர்களிடம் மானசீகமாக அனுமதி பெற்ற பின்னர் கருவறை நோக்கிச் செல்ல வேண்டும்.

தேங்காய், பூ, பழம், வெற்றிலை, பாக்கு, தீபம் ஆகியவற்றில் ஏதோ சிலவற்றைக் கொடுத்து வணங்க வேண்டும்.

தீபாராதனை காட்டும் போது தீபஜோதியின் நடுவே காட்சிதரும் மூலவர் மீது கண்ணையும், கருத்தையும் செலுத்தி பக்தியோடு ஒன்ற வேண்டும்.

பிறகு அம்மன் சன்னதி சென்று அம்பாளை மனதார வேண்ட வேண்டும்.

முருகன்

நடராஜர்

தட்சிணாமூர்த்தி

துர்க்கை

சண்டிகேஸ்வரர்

மற்றும் பரிவார தேவதைகளை வணங்கி பிரகாரத்தையும்,
நவக்கிரக மண்டபத்தையும் வலம் வர வேண்டும்.

இறைவா! நான் எனது பிரார்த்தனையை உன்னிடம் கூறிவிட்டேன், இதில் எனக்கு எது தேவை, எது தேவையில்லை என்பது உனக்கு தெரியும். அதன்படி வரம் கொடு என பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும்.

பின் மறுபடியும் கொடிக்கம்பத்திற்கு அருகில் சென்று வடக்கு நோக்கி தலை வைத்து, பெண்களாக இருந்தால் இரண்டு கை, இரண்டு கால், தலை ஆகிய ஐந்து உறுப்புகள் தரையில் படுமபடியான பஞ்சாங்க நமஸ்காரமும், ஆண்களாக இருந்தால் உடல் முழுவதும் தரையில் படும் படியான சாஷ்டாங்க நமஸ்காரமும் செய்துவிட்டு வெளியில் வரவேண்டும்.

கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் இறைவனை வழிபட்டால் மட்டும் போதாது. அவனுக்கு பிடித்த மாதிரியும் நடந்து கொள்ள வேண்டும்.

கோயிலில் தரும் எந்த பிரசாதத்தையும் கண்ட இடங்களில் போடாமல் அதற்கென வைக்கப்பட்டுள்ள இடங்களில் போட வேண்டும். கோயிலில் உள்ள தெய்வங்கள் அனைத்தும் எப்போதும் தியானத்தில் இருப்பதால் தொட்டு வணங்குதல் கூடாது.

கோயிலில் இறை சம்பந்தப்பட்ட விஷயங்களை தவிர வேறெதும் பேசுதல் கூடாது. இறைவன் எளிமையையே விரும்புவான். அவனை தரிசிக்க செல்லும் போது ஆடம்பரமான உடைகள், நகைகள், மொபைல் உபயோகிப்பது ஆகியவற்றை தவிர்ப்பது நல்லது.

வழிபாட்டின் நிறைவாக சிறிது நேரம் அமர்ந்து கண்ணை மூடி அமர்ந்து தியானம் செய்து, இறை சிந்தனையுடன் வெளியேற வேண்டும்.

எலுமிச்சை விளக்கேற்றும் முறை

ராகு கால துர்க்கா பூஜையில் முதலிடம் பெறுவது எலுமிச்சை பலி ஆகும். பழத்தை நறுக்கும்போது ஐம் என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். மூடியை திருப்பும்போது க்ரீம் என்ற மந்திரத்தை சொல்ல வேண்டும். அதில் பஞ்சு திரியை இடவேண்டும்.
எண்ணெய் ஊற்றும்போது க்லீம் என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். இந்தவிளக்கை துர்க்கையின் முன் வைத்து ஏற்றும்போது சாமுண்டாய விச்சே என்று சொல்லி தீபம் ஏற்ற வேண்டும். விளக்கேற்றிய பிறகு கோயிலை ஒன்பது அல்லது 21 முறை சுற்றிவர வேண்டும். ஐம் என்ற சொல் சரஸ்வதியையும், க்ரீம் என்ற சொல் லட்சுமியையும், க்லீம் என்ற சொல் காளியையும் குறிக்கும். சாமுண்டாய விச்சே என்ற சொல்லுக்கு சரஸ்வதி கடாட்சம், லட்சுமி கடாட்சம், காளி கடாட்சம் ஆகியவற்றை வழங்கும் தெய்வமே
என பொருள்.

எலுமிச்சையின் மகிமை

ராகு காலத்தில் எலுமிச்சையை துர்க்காதேவிக்கு தீபம் ஏற்று பயன்படுத்துகிறார்கள். சூலாயுதங்களில் எலுமிச்சை குத்தப்படுகிறது. இதற்கு காரணம் எலுமிச்சை தேவ கனி என்பதால் ஆகும். மாம்பழத்தில் வண்டு குற்றம் உண்டு.

பலாவில் வியர்வை குற்றம் உண்டு. வாழையில் புள்ளி குற்றம் உண்டு. ஆனால் எலுமிச்சையில் மட்டும் இவ்வித குற்றங்கள் இல்லை. மனிதனுடைய எண்ணங்களை ஈர்க்கும் சக்தி மற்ற கனிகளைக் காட்டிலும் எலுமிச்சைக்கு அதிகம் உண்டு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top