உடலில் உள்ள இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொருமல், சுவாசக் கோளறுகள் போன்றவை உண்டாகலாம்.
அதனால் உடலின் அடிப்படை சக்தியான இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியமாகும்.
இயற்கை உணவுகள் மூலம் இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது எப்படி? இரத்தத்தை விருத்தி செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.
பீட்ரூட் கிழங்கு சாப்பிட்டு வந்தால் புதிய இரத்தம் உற்பத்தியாகும்.
செக்கச் செவேல் சிவப்பு நிறத்துடன் நியை சத்துகளையும் கொண்ட காய், பீட்ரூட். இது பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்ட பெருமை பெற்றுத்திகழ்கிறது. பீட்ரூட்டின் சில மருத்துவப் பெயன்களை இங்கே பார்க்கலாம்..
பீட்ரூட்டை பிழிந்து சாறு எடுத்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் அல்சர் குணமாகும்.
பீட்ரூட் சாறுடன் வெள்ளரிச்சாறு கலந்து சாப்பிட்டு வர, சிறுநீரகங்களும், பித்தப்பையும் சுத்திகரிக்கப்படும்.
பீட்ரூட் சாறுடன் படிகாரத்தைப் பொடியாக்கி சேர்த்துக் கலந்து உடலில் எரிச்சல், அரிப்பு உள்ள இடங்களின் மேல் தடவ, எரிச்சல், அரிப்பு மாறும்.
தீப்பட்ட இடத்தில் பீட்ரூட் சாறைத்தடவினால் தீப்புண், கொப்புளம் ஆகாமல் விரைவில் ஆறும்.
பீட்ரூட் கஷாயம் மூலநோயைக் குணப்படுத்தும், பீட்ரூட் ரத்த சோகையைக் குணப்படுத்தும்.
பீட்ரூட் சாறு அஜீரணத்தை நீக்கி செரிமான சக்தியைக் கூட்டும்.
பீட்ரூட்டை நறுக்கி பச்சையாக எலமிச்சைச் சாற்றில் தோய்த்து உண்டு வர, ரத்தத்தில் சிவப்பணுக்கள் உற்பத்தியாகும்.
பீட்ரூட்டை வேக வைத்த நீரில் வினிகரைக் கலந்து சொறி, பொடுகு, ஆறாத புண்கள் மேல் தடவி வந்தால் அவை அனைத்தும் குணமாகும்.
இதுதவிர, செம்பருத்திப் பூவை வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர வெட்டை சூடு தீர்ந்து இரத்தம் விருத்தியாகும்.
முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து ஒரு கோழிமுட்டை உடைத்து விட்டு கிளறி நெய் சேர்த்து 41 நாட்கள் சாப்பிட்டு வர இரத்தம் விருத்தியாகும்.
நாவல் பழம் தினமும் சாப்பிட்டால் கூட இரத்தம் விருத்தி ஆகிறது.
இஞ்சிச் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தப்படுத்தப்படுகிறது. தக்காளிப் பழம் சாப்பிட்டு வந்தால் கூட இரத்தம் சுத்தமாகும்.
ஆனால், வாத நோய் உள்ளவர்கள் தவிர்த்தல் நல்லது.
இலந்தைப் பழம் சாப்பிட்டால் இரத்தத்தை சுத்தம் செய்வது மட்டுமில்லாமல், சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும். பசியையும் தூண்டும் தன்மை கொண்டது.
இன்றைய காலகட்டத்தில் பெரும் அச்சுறுத்தல் இரத்தக் குழாய் அடைப்பு. இதனை சாதாரண தவிர்த்துவிடலாம் என்கிறது இயற்கை வைத்தியம். தினமும் ஒரு கப் தயிர் சாப்பிட்டு வந்தால் போதும் இரத்தக் குழாய் அடைப்பு நீங்கும்.
இதற்கடுத்தது இரத்தம் அழுத்தம். இதனை முற்றிலுமாக போக்க வழி உண்டு. கொதிக்க வைத்து ஆறிய நீரில் சீரகப் பொடி 12 நேரம் ஊறவைத்து குடித்து வந்தால் போதும்.
மேலும், ஒரு டம்ளர் மோரில் எலுமிச்சம் பழச்சாறு பிழிந்து சாப்பிட்டால் இரத்த அழுத்தம் சீர்படும். இதுதவிர, அகத்திக் கீரையை வாரம் 2 முறை சாப்பிட்டால் வந்தாலும் இரத்தக் கொதிப்பு குணமாகும்.
இரத்தக்கட்டு, சுளுக்கு நிவர்த்தியாக, மஞ்சள், உப்பு, சுண்ணாம்பு ஆகியவற்றை வெந்நீர் விட்டு அரைத்து அந்த விழுதை சூடு செய்து சுளுக்கின் மீது பற்றுபோட்டால் போதும்.
விளாம்பழம் சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள கிருமிகள் அழிந்துபோகும்.