உலக அளவில் 6500க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன. இதில் சுமார் 2000 மொழிகள் 1000த்திற்கும் குறைவான மக்கள் தொகையினரால் மட்டுமே பேசப்படுகின்றன.
உலகில் 10 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் தொகையினரால் பேசப்படும் மொழிகள் 13 மட்டுமே ஆகும். அவை, மண்டேரியன் சீனம், ஆங்கிலம், ஹிந்தி, ஸ்பெயின், ரஷ்ய மொழி, அரபு, வங்காள மொழி, போர்த்துகீசிய மொழி, மலாய் இந்தோனேசியா மொழி, பிரெஞ்சு மொழி, ஜப்பானிய மொழி, ஜெர்மனிய மொழி மற்றும் உருது ஆகியனவாகும்.
உலகில் அதிக மக்கள் தொகையினரால் பேசப்படுகின்ற மண்டேரியன் சீன மொழியானது 6000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். உலகில் 6 மொழிகளே பழமையான மொழிகள் அவை, தமிழ் மொழி, அரபு மொழி, சீன மொழி, சமஸ்கிருத மொழி, கிரேக்க மொழி, இலத்தீன் மொழி.
உலகில் இலத்தீன் மொழியினை ஆட்சி மொழியாகக் கொண்ட ஒரே நாடு வத்திக்கான் ஆகும்.
உலகில் அதிக மொழிகள் பேசப்படுகின்ற நாடு பவுவா நியூ கினியா ஆகும். பசுபிக் சமுத்திரத்தின் தென் மேற்கே அமைந்துள்ள இந்த நாட்டில் 850-க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன.
ஆப்பிரிக்காவில் 2000-க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன. இதில் 80 சதவீத மொழிகளுக்கு எழுத்து வடிவம் இல்லை. உலகில் பேசப்படுகின்றன மொழிகளில் பாதிக்கும் மேற்பட்ட மொழிகள் ஆசியாவிலும், பசுபிக் தீவுகளிலும் பேசப்படுகின்றன.
10 கோடி மக்கள் பேசப்படும் மொழிகள் எத்தனை தெரியுமா?
ரஷ்ய மொழி, அரபு, வங்காள மொழி, போர்த்துகீசிய மொழி, மலாய் இந்தோனேசியா மொழி, பிரெஞ்சு மொழி, ஜப்பானிய மொழி, ஜெர்மனிய மொழி மற்றும் உருது ஆகியனவாகும்.
உலக மொழிகள் ( World’s Languages ) உலகில் அதிகம் பேசப்படும் மொழி எது?
1. ஆங்கிலம் 2. ஸ்பானிஷ் 3. சீன மொழி 4. பிரெஞ்ச்…?
சரியான விடை: சீன மொழி (மந்தாரின்).
உலகில் சுமார் 88.5 கோடி மக்கள் சீன மந்தாரின் மொழியை முதல் மொழியாக பேசுகிறார்கள். இது சீனாவில் மட்டுமில்லாமல் புரூனேய், கம்போடியா, இந்தோனேசியா, மலேஷியா, மங்கோலியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தென்னாப்பிரிக்கா, தைவான், தாய்லாந்து ஆகிய நாடுகளிலும் பேசப்படுகிறது.
உலகில் இரண்டாவதாக அதிகம் பேசும் மொழி – ஆங்கிலம்? என்றால் இல்லை,
ஸ்பானிஷ். 33.2 கோடி மக்களுக்கு தாய் மொழி/முதல் மொழி. பேசப்படும் நாடுகள் 23 – அந்தோரா, அர்ஜெண்டினா, பெலிஸ், பொலிவியா, சிலி, கொலம்பியா, கோஸ்டா ரிகா, க்யூபா, டொமினிக்கன் குடியரசு, ஈக்வடார், எல் சால்வடார், ஈக்விடோரியல் கினியா, குவாதிமாலா, ஹோண்டுராஸ், மெக்ஸிகோ, நிகாராகுவா, பனாமா, பராகுவே, பெரு, ஸ்பெயின், உருகுவே, யு.எஸ்.ஏ, வெனிசுயேலா.
ஆங்கிலம் மூன்றாவதாக வருகிறது. 32.2 கோடி மக்கள் முதல் மொழியாகப் பேசுகிறார்கள். பேசப்படும் நாடுகள் – 35க்கும் மேல்.
இந்திய மொழிகளில் அதிகம் பேசப்படும் மொழி?
ஹிந்தி அல்ல! வங்கம் (Bangla). சுமார் 18.9 கோடி மக்கள் பேசும் வங்க மொழி, பங்களாதேஷ், இந்தியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் பேசப்படுகிறது. உலக அளவில் நான்காவது. இதற்குச் சற்றுக் குறைவாக ஹிந்தி சுமார் 18.2 கோடி மக்களால் பேசப்படுகிறது. பேசப்படும் நாடுகள் – இந்தியா, நேபாளம், சிங்கப்பூர், தென்னாப்பிரிக்கா, உகாண்டா.
திராவிட மொழிகளில் அதிகம் பேசப்படும் மொழி?
தெலுங்கு
இந்தியாவிலும் சிங்கப்பூரிலும் சுமார் 6.64 கோடி மக்கள் முதல் மொழியாக பேசுகின்றனர். உலக அளவில் பதினைந்தாவது இடம்.
தமிழ்:
சுமார் 6.31 கோடி மக்களுக்கு முதல் மொழி/தாய் மொழி. இந்தியா, மலேஷியா, மொராஷியஸ், சிங்கப்பூர், தென்னாப்பிரிக்கா, இலங்கை ஆகிய நாடுகளில் அதிகம் பேசப்படுகிறது. உலக அளவில் பதினெட்டாவது இடம்.
மலையாளம் & கன்னடம்:
மலையாளம் சுமார் 3.4 கோடி மக்களாலும், கன்னடம் சுமார் 3.37 மக்களாலும் முதல் மொழியாகப் பேசப்படுகிறது. உலகில் அளவில் முறையே 29-வது, 31-வது இடங்களில் இருக்கிறது.
சீன மொழிகள்:
முதலாவது இடத்திலிருக்கும் சீன மந்தாரின் மொழி பேசும் மக்களின் தொகை இரண்டாவது இடத்திலிருக்கும் ஸ்பானிஷை விட சுமார் இரண்டு மடங்கு அதிகம். இதைத் தவிர இதர சீன மொழிகளும் உலக அளவில் அதிக மக்கள் பேசும் மொழிகளாக உள்ளன.
சீன மொழி பேசும் மக்கள் தொகை உலக அளவில் இடம்
மந்தாரின் (Mandarin) 88.5 கோடி 1
வூ (Wu) 7.72 கோடி 10
யூ (Yue) (Cantonese) 6.62 கோடி 16
மின் நான் (Min Nan) 4.9 கோடி 21
ஜின்யூ (Jinyu) 4.5 கோடி 22
க்ஸியாங் (Xiang) 3.6 கோடி 28
ஹக்கா (Hakka) 3.4 கோடி 30
கான் (Gan) 2.06 கோடி 45
இந்தச் சீன மொழிகள் பெரும்பாலும் ஒரே மொழியின் வட்டார வழக்கு வேறுபாடுகள் (dialects) தான். தனி மொழிகள் என்று கூற முடியாது. ஆனால் இதில் ஒரு வட்டார வழக்கு மட்டும் தெரிந்தவர்களால் மற்ற வட்டார வழக்குகளை புரிந%