நகங்கள்!!!

நகங்கள்!!!

உடலில் உள்ள நோய்களைக் வெளிக்காட்டும் “நகங்கள்”

பொதுவாக நகங்கள் தேவையற்ற ஒரு உறுப்பாக பலரும் கருதுகின்றனர். ஆனால் அது உண்மையிலே உடல் நலத்திற்கு தேவையான உறுப்பாகும். நம் உடலில் உள்ள கழிவகற்றும் உறுப்புகளினால் வெளியேற்ற முடியாத கழிவுகள் நகமாக வளர்கின்றது. அதனால் அது மனிதர்களுக்கு மட்டுமன்றி விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் இன்றியமையாத முக்கிய உறுப்பு ஆகின்றது.

கெரட்டின் என்னும் உடல்கழிவுதான் நகமாக வளர்கிறது. கழிவுகள் நீங்குவது உடலுக்கு நலம் தானே? நகத்தில் மேட்ரிக்ஸ், நெயில்ரூட் என்று இரு முக்கிய பாகங்கள் உண்டு. மேட்ரிக்ஸ் நகத்தின் இதயப் பகுதியாகும். இதுதான் நக செல்கள் வளர காரணமாக அமைகின்றது. மேட்ரிக்ஸ் பாதித்தால் தொடர்ந்து நகம் சேதத்துடனேயே வளரும்.

வெளிப்புறம் நகங்களாக இருக்கும் நெயில் பிளேட் கழிவுப் பொருள் என்பதால் அதற்கு ஒக்சிஜன் தேவையில்லை. ஆனால் உட்புறம் இருக்கும் மேட்ரிக்ஸ், நெயில் பெட், கிடிகிள் போன்ற பாகங்களுக்கு ஒக்சிஜன் அவசியம். எனவே அவை தேவையான ஒக்சிஜனை சுவாசத்தின் மூலம் பெற்றுக் கொள்கிறது. இதில் கிடிகிள், விரல் பகுதிக்கு அதிக இரத்த ஓட்டம் கிடைக்க உதவுகிறது.

நகத்தில் 18 சதவீத அளவில் ஈரப்பதம் இருக்கிறது. எனவே நகங்கள் குறிப்பிட்ட அளவில் வியர்வையையும் வெளியேற்றும். நகங்கள் நமது ஆரோக்கியம் காட்டும் ‘மொனிட்டர்’ போலவும் செயல்படும். நகங்களின் நிறம் மாறுவதைக் கொண்டு உடல் நலம் பாதிக்கப்படுவதைக் கண்டுபிடிக்கலாம்.

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது போல உடலின் நலத்தை நகத்தில் தெரிந்து கொள்ளலாம். நகத்தின் அமைப்பைக் கொண்டு, நம்முடைய குணாதிசயங்களை சில ஜோதிடர்கள் கூறுவார்கள்..

ஆனால் மருத்துவ உலகில் நகங்களை வைத்தே நம்முடைய உடலில் என்ன பிரச்சினை என்று கூறி விடுகிறார்கள் மருத்துவ அறிஞர்கள்.

நகங்கள் விரல்களுக்கு அழகு சேர்க்க மட்டுமல்ல, கரட்டின் என்ற புரதச்சத்தைக் கொண்ட நகங்கள் விரல் நுனிவரை பரவியுள்ள நரம்பு மற்றும் இரத்தக் குழாய்களை பாதுகாக்கக் கூடிய ஒரு அமைப்பாகும். நகங்கள் இல்லா விட்டால் விரல்களின் முனைகளில் கடினத்தன்மை ஏற்பட்டு விடும்..

நகங்களில் ஏற்படும் சில மாற்றங்களும், அவை சொல்லும் உண்மைகளும்:
நகங்கள் மிருதுவானவை. விரல்களின் சதைப்பகுதியின் அடிப் பாகத்தில் இருப்பது. பொதுவாக ஆண்களுக்கு அதிக வளர்ச்சியும், பெண்களுக்கு பிரசவ காலங்களிலும், வயதான காலங்களிலும் வளர்ச்சி அதிகமாக இருக்கும்.

பல‌ர் முக‌த்தை அழகா‌க்‌கி‌க் கொ‌ள்வ‌தி‌ல் ‌நிறைய கவன‌ம் செலு‌த்துவா‌ர்க‌‌ள். ஆனா‌ல் நக‌ங்களை கவ‌னி‌க்காமலே ‌வி‌ட்டு‌விடுவா‌ர்க‌ள். அக‌த்‌தி‌ன் அழகு முக‌த்‌தி‌ல் தெ‌ரிவது போல, உட‌ல்‌நிலையை நா‌ம் நக‌த்‌தி‌ல் தெ‌ரி‌ந்து கொ‌ள்ளலா‌ம்.
ஏ‌ன் எ‌னி‌ல் உட‌லி‌ல் ஏ‌ற்படு‌ம் ப‌ல்வேறு ‌பிர‌ச்‌சினைகளை நக‌ம் நம‌க்கு எடு‌த்து‌க் காட‌்டு‌கிறது. உட‌லி‌ல் ஏ‌ற்படு‌ம் ஒ‌வ்வொரு பா‌தி‌ப்‌பி‌ற்கு‌ம் ஒ‌வ்வொரு ‌விதமான ‌பிர‌ச்‌சினைகளை நக‌ம் கா‌ட்டு‌கிறது. ஏதேனு‌ம் ஒரு உட‌ல் உபாதை‌க்காக நா‌ம் மரு‌த்துவ‌ரிட‌ம் செ‌ல்லு‌ம் போது, ‌சில‌ர் ந‌ம் கை ‌விர‌ல்களை ப‌‌ரிசோ‌தி‌ப்பா‌ர்க‌ள். ஏனெ‌னி‌ல் அவ‌ர்க‌ள் ச‌ந்தே‌கி‌க்கு‌ம் நோ‌ய் நம‌க்கு ஏ‌ற்ப‌ட்டிரு‌ப்‌பி‌ன் அத‌ற்கான ஆதார‌ம் நக‌‌ங்க‌ளி‌ல் தெ‌ரி‌கிறதா எ‌‌ன்பதை அ‌றி‌ந்து கொ‌ள்ள‌த்தா‌ன்.
ம‌ஞ்ச‌ள் காமாலை‌யா‌ல் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டவ‌ர்களது நக‌ங்க‌ள் ம‌ஞ்ச‌ள் ‌நிற‌த்‌தி‌ல் இரு‌ப்பதே இத‌ற்கு முத‌ல் உதாரண‌ம். அதுபோல தொட‌ர்‌‌ந்து புகை‌ப்‌பிடி‌ப்பவ‌ர்களு‌க்கு, அதனா‌ல் ஏ‌ற்படு‌ம் பா‌தி‌ப்பை பழு‌ப்பு ‌நிற நக‌ங்க‌ள் வ‌ெ‌ளி‌ப்படு‌த்து‌கி‌ன்றன.
உட‌ல்‌நிலை‌யி‌ல் ஏ‌ற்படு‌ம் ‌சில த‌ற்கா‌லிக பா‌தி‌ப்புக‌ளினா‌ல், நக‌ங்க‌ளி‌ன் வள‌ர்‌ச்‌சி‌யி‌ல் கூட மா‌ற்ற‌‌ங்களை ஏ‌ற்படு‌த்து‌ம்.
நக‌ங்களை சு‌த்தமாகவு‌ம், ச‌ரியான அள‌வி‌ல் வெ‌ட்டி ‌விடுவது‌ம் ஒ‌வ்வொருவரு‌ம் நமது உட‌ல் ஆரோ‌க்‌கிய‌த்‌தி‌ற்காக செ‌ய்யு‌ம் செயலாகு‌ம்.
ஒருவரது உட‌லி‌ல் இரு‌ம்பு‌ச் ச‌த்து‌க் குறைவாக இரு‌ப்‌பி‌ன், ந‌க‌ங்க‌ள் உடைவது அ‌ல்லது ப‌ட்டையாக ‌வி‌ரி‌ந்து வள‌ர்வத‌ன் மூல‌ம் அ‌றியலா‌ம். ‌சிலரு‌க்கு நக‌ங்க‌ளி‌ல் மேடு ப‌ள்ள‌ங்க‌ள் ஏ‌ற்ப‌ட்டிரு‌க்கு‌ம். இதுவு‌ம் ஊ‌ட்ட‌ச்ச‌த்து‌க் குறைபா‌ட்டையே கா‌ட்டு‌கிறது.
நக‌ம் கடி‌க்கு‌ம் பழ‌க்க‌ம் ந‌ம்‌மி‌‌ல் பலரு‌க்கு இரு‌க்கலா‌ம். எ‌ப்போதாவது மன‌க்கவலை‌ ஏ‌ற்படு‌ம் போது நக‌ம் கடி‌ப்பது ஒரு ‌சில‌ர். ஆனா‌ல் எ‌ப்போது‌ம் நக‌த்தை தேடி‌த் தேடி கடி‌ப்பது ‌சிலரு‌க்கு பழ‌க்கமாகவே இரு‌க்‌கிறது. அ‌வ்வாறு நக‌ம் கடி‌க்கு‌ம் பழ‌க்க‌ம் இரு‌ப்பது கூட நர‌ம்பு ‌ச‌ம்ப‌ந்தமான ‌பிர‌ச்‌சினையாக இரு‌க்கலா‌‌ம் எ‌ன்‌கி‌ன்றன‌ர் மரு‌த்துவ‌ர்க‌ள்.
த‌ன்ன‌ம்‌பி‌க்கை குறைவாக இரு‌ப்பவ‌ர்க‌ள் பெரு‌ம்பாலு‌ம் நக‌ம் க‌டி‌க்கு‌ம் பழ‌க்க‌‌ம் உ‌ள்ளவ‌ர்களாக இரு‌க்‌கிறா‌ர்க‌ள் எ‌ன்‌கிறது ஒரு ஆ‌ய்வு.
‌வீ‌ட்டி‌ல் வேலை செ‌ய்யு‌ம் பெ‌ண்களு‌க்கு ந‌க‌ம் வள‌ர்வதே ‌இ‌ல்லை எ‌ன்று எ‌ண்ணு‌கிறா‌ர்க‌ள். ஆனா‌ல் அது அ‌ப்படி இ‌ல்லை. வேலை செ‌ய்யு‌ம் போது நக‌ம் தே‌ய்‌ந்து அத‌ன் வள‌ர்‌ச்‌சி ந‌ம் க‌ண்களு‌க்கு‌த் தெ‌ரியாமலேயே‌ப் போ‌ய்‌விடு‌கிறது.
மருதா‌ணி இலைகளை அரை‌த்து வை‌க்க‌ப்படு‌ம் மரு‌தா‌ணி ‌விர‌ல் நக‌ங்களு‌க்கு ந‌ல்ல பயனை அ‌ளி‌க்‌கிறது. அதனை முடி‌ந்தா‌ல் செ‌ய்து வரலா‌ம்.
‌சில‌ர் அடி‌க்கடி நக‌ப்பூ‌ச்சை பய‌ன்படு‌த்துவா‌ர்க‌ள். இது ‌மிகவு‌ம் தவறு. மாத‌த்‌தி‌ல் ஓ‌ரிரு நா‌ட்களாவது நக‌ங்க‌ள் கா‌ற்றோ‌ட்ட‌த்‌தி‌ல் இரு‌க்க வே‌ண்டு‌ம். அ‌ப்போதுதா‌ன் அத‌ன் உ‌ண்மையான த‌ன்மையை நா‌ம் அ‌றிய முடியு‌ம்.
மேலு‌ம், நக‌ங்க‌ள் கா‌ய்‌ந்து வற‌ண்ட த‌‌ன்மையுட‌ன் இரு‌ந்தா‌ல் அத‌ற்காக ந‌ல்ல மா‌ய்‌ச்சுரைஸ‌ர் ‌க்‌ரீ‌ம்களை‌ப் பய‌ன்படு‌த்துவது ‌சிற‌ந்தது.
‌சிலரு‌க்கு நக‌ங்களே வளராம‌ல் கு‌ட்டையாகவே இரு‌க்கு‌ம். இதுபோ‌ன்றவ‌ர்க‌ள் கை ‌விர‌ல்களு‌க்கு மசா‌ஜ் அ‌ளி‌த்து வ‌ந்தா‌ல், ‌விரை‌‌வி‌ல் நக‌ங்க‌ளி‌ல் வள‌ர்‌ச்‌சி ஏ‌ற்படு‌ம். ‌அழகு ‌நிலைய‌ங்களு‌க்கு‌ச் செ‌ன்று பெடி‌க்யூ‌ர், மெ‌னி‌க்யூ‌ர் போ‌ன்றவ‌ற்றையு‌ம் செ‌ய்து கொ‌ள்ளலா‌ம். இதுவு‌ம் ‌விர‌ல் நக‌ங்களு‌க்கு ந‌ன்மை அ‌ளி‌க்கு‌ம்.
கை‌விர‌ல் நக‌ங்க‌ள் லேய‌ர் லேயராக உடைவதை‌ப் பா‌ர்‌த்‌திரு‌ப்‌பீ‌ர்க‌ள். இத‌ற்கு ‌வீ‌‌ட்டி‌ல் தூ‌ய்மை‌ப்படு‌த்துவத‌ற்காக பய‌ன்படு‌த்து‌ம் சோ‌ப்பு‌த் த‌ன்மை‌யா‌ல் ‌ஏ‌ற்படு‌ம் ஒ‌வ்வாமையாக‌க் கூட இரு‌க்கலா‌ம். லேய‌ர்க‌ள் ‌பி‌ரிவ‌தி‌ல் கூட ‌சில ‌வி‌த்‌தியாச‌ங்க‌ள் உ‌ண்டு. ‌சிலவை ‌நீள வா‌க்‌கி‌ல் ‌பி‌ரியு‌ம். ‌சிலரு‌க்கு கு‌று‌க்காக ‌பி‌ரியு‌ம். நக‌த்‌தி‌ல் உ‌ள்ள நக‌த்த‌ட்டுகளு‌க்கு‌த் தேவையான ‌நீ‌ர்‌த்த‌ன்மை இ‌ல்லாம‌ல் போவது‌ம் கூட இத‌ற்கு காரணமாக இரு‌க்கலா‌ம்.
‌நக‌ச்சொ‌த்தை ஏ‌ற்பட, நக‌த்‌தி‌ல் ‌மு‌ன்பு எ‌ப்போதாவது ஏ‌ற்ப‌ட்ட காய‌ம் காரணமாக இரு‌க்கலா‌ம். ‌விர‌லி‌ல் அடிபடுவது, இடு‌க்‌கி‌ல் கை‌விர‌ல் ‌சி‌க்‌கி‌க் கொ‌ள்வது போ‌ன்றவ‌ற்றா‌ல் ஏ‌ற்படு‌ம் பா‌தி‌ப்பா‌ல் நக‌ப்படு‌க்கை‌யி‌ல் ஏ‌ற்படு‌ம் ர‌த்த‌க் க‌சிவானது, நக‌த் த‌ட்டு‌க்கு அடி‌யி‌ல் த‌ங்‌கி‌விடு‌ம்.

இதனா‌ல் நக‌ச் சொ‌‌த்தை ஏ‌ற்படு‌கிறது. ‌இ‌ந்த நக‌ச்சொ‌த்தை தானாக ச‌ரியாகவு‌ம் வா‌ய்‌ப்பு‌ள்ளது. ஆனா‌ல் நக‌‌ச்சொ‌த்தை ‌தீ‌விரமடை‌ந்து, நக‌ப் பகு‌தி‌யி‌ல் வ‌லி ஏ‌ற்படுமா‌யி‌ன், நக‌த்தை ‌பிடு‌ங்க‌ி‌வி‌ட்டு அ‌ப்பகு‌தியை சு‌த்த‌ம் செ‌ய்ய வே‌ண்டியது அவ‌சியமாகு‌ம்.

கை ‌விர‌ல் நக‌ங்க‌ள் இள‌ம் ‌சிவ‌ப்பு ‌நிறத்‌தி‌ல் இரு‌க்க வே‌ண்டு‌ம். இ‌தி‌ல் வெ‌ள்ளை ‌நிற‌ம் ர‌த்த சோகையையு‌ம், ம‌ஞ்ச‌ள் காமாலையையு‌ம் கு‌றி‌க்கு‌ம். ‌‌விர‌ல் நக‌ங்களு‌க்கு நடு‌வி‌ல் சொ‌த்தை ஏ‌ற்ப‌ட்டா‌ல் உடனடியாக மரு‌த்துவரை அணு‌கி அத‌ற்கான காரண‌த்தை அ‌றிவது ந‌ல்லது.

கை‌ப்‌பு‌ண்‌ணி‌ற்கு க‌ண்ணாடி‌த் தேவையா எ‌ன்பது பழமொ‌ழி. ஆனா‌ல் ந‌ம் கை ‌விர‌ல் நக‌ங்களை‌க் கொ‌ண்டே நமது உட‌ல் ஆரோ‌க்‌கிய‌த்தை‌க் கா‌‌ட்டு‌ம் வகை‌யி‌ல் ம‌னித உட‌ல் அமை‌ய‌ப்ப‌ட்டு‌ள்ளதை எ‌‌ண்‌ணி‌ப்பாரு‌ங்க‌ள்.

பொதுவாக நகங்கள் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். ஆனால் நமது உடலில் ஏற்படுகின்ற பாதிப்புகளைப் பொறுத்து நகங்களின் நிறம் வேறுபட்டிருக்கும்.

உடலில் கால்களும் கைகளும் எவ்வளவு முக்கியமானதோ, அதே அளவு முக்கியமானவை அவற்றுடன் தொடர்புடைய நகங்களும். நம்முடைய கைகள் மற்றும் கால்களுடன் இணைந்திருக்கின்ற முக்கியமான பகுதிகளான கை மற்றும் கால் விரல் நகங்களை முறையாக பராமரிப்பதும் முக்கியமானதாகும்.

சுத்தமான மற்றும் ஆரோக்கியமான நகங்கள் கை மற்றும் கால்களை அழகாக தோற்றமளிக்கச் செய்வதுடன், பல்வேறு வகையான கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்களின் தாக்குதல்களிலிருந்தும் பாதுகாக்கவும் செய்கிறது.

நகங்களுக்கு வேண்டிய சத்துக்கள்:

இரும்புச்சத்துள்ள உணவுகள்:

உடலில் இரும்புச்சத்து பற்றாக்குறை இருந்தால், நகங்கள் எளிதில் உடைந்துவிடும். எனவே நகங்களை நன்றாக பராமரிக்க வேண்டுமென்றால், இரும்புச்சத்து அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும்.

அதிலும் இறைச்சி, மீன் வகைகள், சோயா வகைகள், பீன்ஸ், அவரைக்காய் மற்றும் அவரை விதைகள், முழு தானிய பொருட்கள், பச்சை கீரை வகைகள், காய்கறிகள், கிழங்கு வகைகள், நட்ஸ், முட்டை, கோழி மற்றும் வான்கோழி பேரிச்சை போன்றவற்றை சாப்பிட வேண்டும்.

வைட்டமின் டி உணவுகள்:

நகங்களின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு வைட்டமின் டி ஆகியவை பெரிதும் உதவியாக இருக்கும். இத்தகைய சத்து பீட்ரூட்டில் அதிகம் உள்ளது. எனவே தினமும் பீட்ரூட்டினை உணவில் சேர்த்துக் கொள்வதால், நகங்கள் ஆச்சிரியப்படும் வகையில் ஆரோக்கியமான வளர்ச்சியையும், வலிமையையும் பெற்றுவிடும்.

கால்சியம் உணவுகள்:

பால் பொருட்களில் கால்சியம் அதிகம் உள்ளது. எனவே இவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளும் போது, நகங்கள் தினந்தோறும் நல்ல பராமரிப்பை பெறுவதாக உறுதி செய்திட முடியும்.

குறிப்புகள்:

* ஒரு மேசைக்கரண்டி அளவு எலுமிச்சை சாற்றினை, ஒரு கோப்பை சாதாரண தண்ணீருடன் கலந்து விடுங்கள். பிறகு, அந்த கலவையில், கை மற்றும் கால் விரல் நகங்களை சில நிமிடங்களுக்கு ஊற வைக்க வேண்டும். அதன்பின் நகங்களை சூடான தண்ணீரில் சுத்தம் செய்து விட்டு, அதன் மீது மாய்ச்சுரைசரை தடவி விடவும். இந்த வழிமுறை நகங்களிலுள்ள கறைகளை நீக்கவும் மற்றும் நகங்களை பாதுகாக்கவும் உதவும்.

* ஒரு காட்டன் துணியை எலுமிச்சை சாற்றில் நனைத்து பிழிந்து எடுத்து, நகம் முழுவதும் சிறிது நேரத்திற்கு மசாஜ் செய்து விட வேண்டும். இதனால் கை மற்றும் கால் நகங்கள் உறுதியானதாகவும் மற்றும் பிரகாசமானதாகவும் மாறிவிடும்.

* ஆலிவ் ஆயில் நக பராமரிப்பு உட்பட பல்வேறு அழகு குறிப்புகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கை மற்றும் கால் நகங்களை பிரமிக்கத்தக்க வகையில் பளபளப்பாகவும் மற்றும் உறுதியாகவும் மாற்ற விரும்பினால், நகங்களுக்கு தினமும் கொஞ்சம் ஆலிவ் எண்ணையை தடவி விட வேண்டும்.

* நகங்களின் பராமரிப்பிற்கு, வெதுவெதுப்பான கடுகு எண்ணையில் நகங்களை ஒவ்வொரு நாளும், 8 முதல் 10 நிமிடங்களுக்கு ஊற வைக்க வேண்டும். பிறகு அந்த நகங்களை மெதுவாகவும் மற்றும் மென்மையாகவும் இரத்த ஓட்டம் சீராகும் வகையில் மசாஜ் செய்து விடவும். இந்த செயல்களை தினமும் செய்து வந்தால் நகங்கள் உறுதியாகவும் மற்றும் அழகாகவும் இருக்கும்.

* உண்மையான நகப் பாதுகாப்பிற்கு, கால் விரல் நகங்களை வளைவாக வெட்டாமல் நேர்கோட்டில் வெட்டுங்கள். பொருத்தமில்லாத வகையில் நகங்களை வெட்டுதல், சரியாக பொருந்தாத காலணிகள், கால் விரல் நகங்களில் விரிசல்கள் மற்றும் வெடிப்புகளை ஏற்படுத்திவிடும்.

* ஈரல் பாதிக்கப்பட்டிருந்தால் நகங்கள் வெண்மையாக இருக்கும்..

* சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டிருந்தால் நகங்களின் வளர்ச்சி குறைந்து பாதி நகங்கள் சிவப்பாக இருக்கும்.

* மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டிருந்தால் நகங்கள் மஞ்சள் நிறத்தில் காணப்படும்.

* இதயநோயால் பாதிக்கப்பட்டிருந்தால் நகங்கள் அழுத்தமான இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். இதயத்தில் ஓட்டை ஏற்பட்டு நல்ல இரத்தமும், கெட்ட இரத்தமும் கலந்திருந்தால் நகங்கள் நீல நிறத்தில் இருக்கும்.

* நாள்பட்ட நுரையீரல், இதய நோய் உள்ளவர்களுக்கு நகங்கள் கிளிச்சொண்டு போல வளைந்து இருக்கும்.

* இரத்தச் சோகை ஏற்பட்டு இரும்புச் சத்து குறைவாக இருந்தால் நகங்கள் வெளுத்து குழியாக இருக்கும்.

* சர்க்கரையின் அளவு அதிகமாகவும், புரதம் மற்றும் துத்தநாக சத்து குறைவாகவும் இருந்தால் நகத்தில் வெண்திட்டுக்கள் காணப்படும்.

* நகத்தில் மஞ்சள் கோடுகள் இருப்பதற்கு காரணம், புகைபிடிப்பதனால் நிக்கோடின் கறை படிந்து ஏற்பட்டதாக இருக்கலாம். நகங்களுக்கு பொலிஷ் தீட்டுவதால் ஏற்பட்ட இரசாயன மாற்றத்தின் காரணமாகவும் மஞ்சள் கோடுகள் இருக்கலாம்.

* நகத்தில் சின்ன சின்னக் குழிகள் உண்டாகி, அவற்றில் வெடிப்பு ஏற்பட்டு செதில் செதிலாக உதிர்ந்தால் சொரியாசிஸ் என்ற தோல் வியாதியின் அறிகுறியாகும்..

* இரத்தத்தில் போதிய அளவுக்கு ஒட்சிசன் இல்லாவிட்டால் நகங்கள் நீலமாக இருக்கும். ஆர்சனிக் என்ற நச்சுகளால் பாதிக்கப் பட்டிருந்தால் நகங்கள் நீலநிறத்தில் காணப்படும்.

* மங்கலான நீண்ட கோடுகள் தென்பட்டால் மூட்டுவலி உள்ளதாக காட்டும்

* மஞ்சள் நிறம் தென்பட்டால் கல்லீரல் பாதிப்பின் அறிகுறி.

நகங்களை நலமாக வைத்துக் கொள்ள பின்பற்ற வேண்டிய பராமரிப்பு முறை:
* நகங்களை ஒரு கருவியாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். குழி பறிப்பது, பழங்களின் தோல் உரிப்பது, கண்டவற்றையும் சுரண்டிக் கொண்டிருப்பது போன்ற விஷயங்களுக்கு நகங்களைப் பயன்படுத்தக்கூடாது. இது நகங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதோடு, கிருமிகள் தொற்றி நோய் ஏற்படவும் காரணமாகிறது.

* இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை அதிகப்படியாக வளர்ந்திருக்கும் நகங்களை நறுக்கி விடலாம்.

* நகங்களின் நுனிப்பகுதிகளை முழுவதுமாக வெட்டக் கூடாது. அவ்வாறு வெட்டினால் நகத்தை மூடி சதை வளர்ந்து அதிக வலியினை ஏற்படுத்தும். நகத்தினை பற்களால் கடிக்கக் கூடாது. இதனால் நகங்கள் உடைந்து போக வாய்ப்பு அதிகம். நகம் வெட்டும் கருவியினால் மட்டுமே வெட்ட வேண்டும்.

* சாப்பிட்ட பின்னர் கைகளை கழுவும்போது நகங்களையும் சுத்தம் செய்ய வேண்டும். நகங்களின் இடுக்குகளில் தங்கும் நுண்ணுயிரிகளால் வயிற்றுத் தொல்லை, வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு ஆகியவை உண்டாகும்.

* நகங்கள் அழகுடன் திகழ, காய், கனிகள் நிறைய உட்கொள்ளவேண்டும். இரவில் குளிர்ந்த நீரினால் கை மற்றும் கால் நகங்களை சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.

* சருமத்திற்கு பயன்படுத்தும் எண்ணெயை நகங்களிலும் தடவலாம். இது நகங்களின் மேற்புற செல்கள் பாதிக்கப்படுவதை தடுத்து நகங்களை மிருதுவாக வைத்திருக்கும்.

* சமையல் அறை, தோட்டங்கள், கழிவறைகளில் பிளீச்சிங் பவுடர், அம்மோனியா மற்றும் ரசாயனப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படும்போது கண்டிப்பாக கைகளில் உறைகள் அணிந்திருந்தால் நகங்களைப் பாதுகாக்கலாம்.

* பசை, தண்ணீரில் கலந்து உபயோகிக்கும் பசை ஆகியவை பயன்படுத்தும் போது, அவை நகங்களில் ஒட்டாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இவை நகங்களை வெகுவாக பாதிக்கும்.

* ரசாயனங்கள் சேர்த்த நகப்பூச்சுகள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இயற்கை மருதாணியை வேண்டுமானால் நக அலங்காரத்திற்கு பயன்படுத்தலாம்.

ஒருவர் எவ்வளவு சுத்தமாக இருக்கிறார் என்பதை அவருடைய தலை மற்றும் பாதம் எவ்வளவு சுத்தமாக இருக்கிறது என்பதைக் கொண்டு சுலபமாக சொல்லி விட முடியும். இந்த வகையில் பாதங்களிலுள்ள கால் நகங்களை முறையாக சுத்தம் செய்வது எப்படி என்பது பற்றி தெரிந்து கொள்வோம்.

பல்வேறு விதமான காலணியுறைகளை இறுக்கமாகவும் மற்றும் பாதங்களுக்கிடையில் காற்று போய் வர போதிய இடைவெளி இல்லாதவாறும் அணிந்தால், அழுக்கான நகங்கள் கால்களை அலங்கரிக்கும் அவலமான நிலை ஏற்படும். இருக்கிறோம். ஆனால் இந்த கால் நகங்களை சுத்தம் செய்வது மிகவும் எளிதானது.

* கால் நகங்களை சிறியதாக வைத்திருக்க வேண்டும். நீளமான கால் நகங்களை வைத்திருப்பது, எந்த காலத்திலும் அழகாக இருந்ததில்லை. நீளம் குறைந்த கால் நகங்கள் சுத்தமானதாக தெரிவது மட்டுமல்லாமல் மிகவும் அழகாகவும் தோற்றமளிக்கும். மற்றுமொரு முக்கியமான விஷயம் சிறிய நகங்களை சுத்தம் செய்வது மிகவும் எளிது.

* நகங்களை சுத்தம் செய்ய பிரஷ்களை பயன்படுத்துங்கள். இவை கையாளுவதற்கு எளிமையானதாகவும், கால் நகங்களுக்கிடையில் உள்ள இறந்த தோல் பகுதிகளை சலனமற்று நீக்கிட செய்து,கால் நகங்களை அழகாக தோற்றமளிக்கச் செய்கின்றன

* குளிக்கும் வேளைகளில் கால் நகங்களை சுத்தம் செய்ய மறந்துவிடக் கூடாது. குளிக்கும் போது உடல் அழுக்கினை நீக்கவும், உடல் துர்நாற்றத்தை நீக்கவும் சோப்புகளை பயன்படுத்துவோம். அவற்றையே கால் நகங்களை சுத்தம் செய்வதற்காக பயன்படுத்த ஏன் யோசிக்க வேண்டும்? அவ்வாறு மென்மையான சோப்பினை பயன்படுத்தும் போது, நகங்கள் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை மட்டும் சுத்தம் செய்யாமல், பாதத்தின் முன் மற்றும் குதிகால் பகுதிகளையும் சுத்தம் செய்ய மறக்கக் கூடாது.

* நக வெட்டிகளில் காணப்படும் நகங்களை சுத்தம் செய்யும் கருவிகளை பயன்படுத்துவதை உறுதி செய்யுங்கள். இது நகங்களை சுத்தம் செய்வதுடன் அந்த பகுதிகளில் உள்ள அழுக்குகளையும் நீக்கிவிடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top