Home » படித்ததில் பிடித்தது » ஒற்றை குழந்தை வரமா? சாபமா?
ஒற்றை குழந்தை வரமா? சாபமா?

ஒற்றை குழந்தை வரமா? சாபமா?

இன்றைய சூழலில் நரகத்தில் வாழும் நம் இன இளம் தம்பதியர், ஒரு குழந்தையோடு நிறுத்திக்கொள்ளும் போக்கு நிலவி வருகிறது.

சமூக – பொருளாதார சூழல் என பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும் அதன் உள்ளார்ந்த சாதக பாதகங்கள் இருக்கவே செய்கின்றன. ஒற்றை குழந்தை என்பதால் நிறைய சொத்து சேர்த்து வைக்க முடியும் என்ற ஒரே ஒரு சாதகம் மட்டும் இருக்கும்வேளையில் அதன் பாதகங்களை பட்டியலிடுவோம்.

– ஒரு வேளை சந்தர்ப்ப வசத்தால் குழந்தை இறக்க நேரிட்டால், அதுவும் 15-20 வயது வாக்கில் நிகழ்ந்தால் பெற்றோரின் வாழ்க்கையே கேள்விக்குறியாகும். திரும்ப குழந்தையும் பெற்றுக்கொள்ள இயலாது, வாழ்வதிலும் பிடிப்பு இருக்காது. நரகம்!

– ஒரே குழந்தையாக இருப்பதால் ஒன்றாக பிறந்த உறவு இன்றி நாளை பெற்றோர் இறந்த பின்னர் தவிக்க நேரிடும். வாழ்க்கை துணையும் சரியாக அமையாது போனால் குழந்தையுடைய வாழ்வு கேள்விக்குறி

– ஒரே பிள்ளையாக வீட்டுக்குள் வாழ்வதால் சமூகத்தோடு இணைந்து வாழும் மனோநிலை போகும்

– ஆணோ-பெண்ணோ, ஒற்றை குழந்தையானால் திருமணத்தின் பின் பெற்றோர் அநாதை என்பது பெரும்பாலும் நடக்கும் யதார்த்தம்

– ஒரு வேளை திருமணம் முடித்து வெளிநாடு சென்றுவிட்டால் துணைக்கு இறுதி காலத்தில் யாருமின்றி அனாதையாக வேண்டி வரும்.

– பெற்றோரின் பின் அந்த குழந்தைக்கு மிக நெருங்கிய உறவு என்று யாரும் இருக்க மாட்டார்கள். இளம் பிராயத்தில் பெற்றோரை இழந்தால் அந்த குழந்தைக்கு நெருங்கிய உறவு தாத்தா பாட்டி மட்டுமே!

– ஒற்றை குழந்தையாக வளர்ந்தவர்கள் மண வாழ்க்கையில்/பொது வாழ்க்கையில் விட்டுகொடுக்கும் பாங்கு இல்லாதவர்களாக இருக்கிறார்கள். அதனால் மண வாழ்க்கை தோல்வியில் முடிகிறது. சமூக உறவுகளும் சரிவர இருப்பதில்லை.

– தொழில் முடங்கி-சந்தர்ப்ப வசத்தால் சொத்துக்கள் இழந்தால் குழந்தைக்கு சொத்தும் இல்லாது சொந்தமும் இல்லாது செய்துவிட்டோம் என்று பழியுணர்வு கொல்லும்.

– ஒற்றை குழந்தைகளுக்கு நல்ல சுற்றம்-சொந்த பந்தம் இல்லாமல் போய் விடுகிறது.

அரசாங்கம் தனது நிர்வாக வசதிக்காக திருமண வயதை மிக அதிகமாக உயர்த்தியது போல ஒற்றை குழந்தை கலாசாரத்தையும் ஊக்குவிக்கிறது. ஆனால் நல்ல குடும்பம் நிலைக்க குறைந்தபட்சம் இரு குழந்தைகலேனும் இருக்க வேண்டும். ஒரு ஆணும ஒரு பெண்ணும் உள்ள குடும்பமே முழுமையான பாக்கியமுள்ள குடும்பமாகும்.

ஒற்றை குழந்தை சாபம்:

நம் மொத்த சமூகமும் ஒற்றை குழந்தை குடும்பங்களாக மாறினால் என்னவாகும் என்று பார்ப்போம். ஒரு குழந்தை குடும்பங்கள் ஒரு சாபம்.

1. முதல் கட்டமாக அண்ணன்-தங்கை-அக்காள-தம்பி என்ற உறவுகள் மறையும்.

2. இரண்டாம் கட்டமாக மச்சினன், மாமா, கொழுந்தனார், நங்கையார், மச்சாண்டார் போன்ற உறவுகள் இருக்காது.

3. நம் குழந்தைகளுக்கு தாய் மாமன், அத்தை, பெரியப்பா, சித்தப்பா, பெரியம்மா, சித்தி, தந்தைவழி அத்தை-மாமா போன்ற உறவுகளே இருக்காது!

4. இரண்டு ஜோடிகள் ஆளுக்கொன்றாக இரண்டு குழந்தைகளை உருவாக்கி அவர்களுக்கு திருமணம் செய்து அவர்கள் ஒரு குழந்தை மட்டும் பெற்கும் போது அந்த குழந்தைக்கு உறவுகளே இருக்காது. தன்னந்தனியாக இருக்கும். நல்ல/கெட்ட காரியங்களில் சீர் செய்யக்கூட உறவுகள் இருக்காது. ஒவ்வொருவரையும் போய் தொங்க வேண்டும்.

எனவே சொத்து வருகிறது என்று கிறுக்குத்தனமாக ஒற்றை குழந்தை உள்ள வீட்டில் பெண் எடுத்து விடாதீர்கள். ஒற்றை குழந்தையாக வளர்ந்தவர்கள் யாருடனும் ஒன்றி வாழ இயலாதவர்கள் (பெரும்பாலும்). இப்படிப்பட்டவர்கள் தான் விரைவில் விவாகரத்தும் பெருகிறார்கள். எனவே ஒற்றை குழந்தை குடும்பங்கள் என்பவை சாபமாகும். அவற்றை நிராகரியுங்கள்; நீங்களும் குறைந்தபட்சம் இரண்டு குழந்தைகளாவது பெற்று நிறைவான குடும்பமாக வாழுங்கள்.

ஒற்றை குழந்தை சாபம் பற்றி சொன்னால் சிலர் குறைந்த மக்கள் தொகையில் அறிவு செல்வம் அதிகாரம் என்று என்னென்னமோ சொல்கிறார்கள்.. போன முப்பது ஆண்டுகளாகவே மக்கள் தொகையை மிக பெரிய அளவில் சுருக்கி கொண்ட  நான் கேட்கும் சில கேள்விகளுக்கு பதில் சொல்லவும்..

ஒற்றை குழந்தையாக பெற்று, 15-20 வயதில் அந்த குழந்தை இறந்து விட்டால், அந்த பெற்றோரின் கதி?. மீண்டும் குழந்தை பெற்று கொள்வது மிக கடினம். அப்படி எத்தனை பெற்றோர் மன நோயாளியாகவும், தற்கொலை செய்து கொண்டும் போனார்கள் தெரியுமா..?

மத்திய அரசின் புள்ளிவிவரம் சொல்லும் செய்தி,
ஒற்றை குழந்தையாக வளரும் குழந்தைகள் தான்,
1. 40% அதிகமாக விபத்தில் சாகிறார்கள். அதீத செல்லம. அதனால் சொல்பேச்சு கேளாமை.
2. 60% அதிகமாக விவாகரத்து செய்கிறார்கள். தனியாக வளர்ந்ததால் பிறரோடு விட்டு கொடுத்து வாழும் பக்குவம் இல்லாமை.
3. 54% அதிகமாக போதை பழக்கத்துக்கு அடிமையாகிறார்கள்.
4. 43% அதிகமாக தற்கொலை செய்துகொள்கிறார்கள். கேட்டதெல்லாம் கிடைத்து விடும். தனியே வாழ்ந்த போக்கு இதனால், பிறரோடு இணங்கி விட்டுக்கொடுத்து வாழ முடியாமை. அதோடு சின்ன தோல்விகளை கூட தாங்கி கொள்ள முடியாமை.

ஆனால் மத்திய சர்க்கார் இந்த தகவல்களை மறைத்து தங்கள் மக்கள் தொகை குறைப்பு திட்டத்துக்கு பாதகம் வராமல் பார்த்து கொள்கிறார்கள். ஆனால் முஸ்லிம்களின் மக்கள் தொகை வளர்ச்சிக்கு எந்த வித கட்டுப்பாடும் செய்யாமல் சிறுபான்மை சலுகைகள் என வாரி வழங்கி அவர்கள் மக்கள்தொகை பெருக வழி செய்கிறார்கள்.

எனவே, ஒற்றை குழந்தை தான் நல்லது என்ற மாயையில் இருந்து வெளியே வந்து குறைந்தபட்சம் இரண்டு குழந்தை, இரண்டு குழந்தைக்கு மேல் பெற்று கொள்வோருக்கு கொங்கு இயக்கங்கள் மூலமாக நம்மவர் பள்ளிகளில் இலவச கல்வி அல்லது கல்வி உதவி தொகை, இலவச திருமண மண்டப வசதி என்று சலுகைகள் தர வேண்டும். இதை பெரிய இயக்கமாக நம் மக்களிடம் கொண்டு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது. இவற்றை செய்யாவிடில் நாமும் நம் வாரிசுகளும் சிறுபான்மையாகி நாடோடியாகி திரிய வேண்டியதை கண்ணார காண்போம். எழுதி வைத்துக்கொள்ளுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top